ஐபோனை கம்மி விலையில் வாங்க ஒரு அருமையான வாய்ப்பு.! மிஸ் பண்ணிடாதீங்க மக்களே.!
இந்தியாவில் ஐபோன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக தனித்துவமான அம்சங்கள் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு ஐபோன்கள் வெளிவருவால் அதிகளவு விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் பிளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் எனும் சிறப்பு விற்பனை விரைவில் தொடங்க உள்ளது.

இந்த சிறப்பு விலையில் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, லேப்டாப், டேப்லெட் உள்ளிட்ட பல சாதனங்களை கம்மி விலையில் வாங்க
முடியும். அதேபோல் பிளிப்கார்ட் தளத்தில் இப்போது மிகவும் எதிர்பார்த்த ஐபோன் எஸ்இ 2020 மாடலை கம்மி விலையில் வாங்க
முடியும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவந்த தகவலின்படி ஐபோன் எஸ்இ 2020 மாடலுக்கு ரூ.15,000 வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த சாதனத்தை வாங்க ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ரூ.25,999-க்கு வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர இந்த ஐபோன் மாடலுக்கு ஒரு வங்கி சலுகையும் உள்ளது. இது ஐபோன எஸ்;இ 2020 மாடலின் விலையை ரூ.24,499-ஆக குறைக்கும்என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபோன் எஸ்இ 2020 மாடல் ஆனது 4.7-இன்ச் ரெடினா எச்டி எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும்750x1334 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த அசத்தலான சாதனம் வெளிவந்துள்ளது. இதுதவிர புதிய ஐபோன் மாடல்களில் காணப்படும் ஹாப்டிக் டச் ஆதரவும் கொண்டுள்ளது இந்த ஐபோன் எஸ்இ 2020 மாடல்.

ஐபோன் எஸ்இ 2020 மாடல் ஆனது ஏ 13 பயோனிக் சிப் மூலம் இயக்கப்படுகிறது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த சாதனம் சிறியதாகவும், அருமையான வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபோன் எஸ்இ 2020 சாதனத்தின் பின்புறம் ஒற்றை 12 மெகாபிக்சல் கேமரா சென்சார் (எஃப் / 1.8 துளை) வசதி உள்ளது, இதனுடன் ஸ்லோ சின்க் கொண்ட எல்இடி ட்ரூ டோன் ஃபிளாஷூம் உள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 7 மெகாபிக்சல் அளவிலான கேமரா (எஃப் / 2.2) வசதியைக் கொண்டுள்ளது.

4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ax, ப்ளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் லைட்னிங் போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஐபோன் எஸ்இ 2020 மாடல். குறிப்பாக டச் ஐடி பொத்தானைக் கொண்டுள்ளது இந்த ஐபோன் எஸ்இ 2020 சாதனம். ஆனால் இது ஃபேஸ் ஐடியை கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த சாதனத்தின் எடை 148 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பிளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கும் சிறப்பு விற்பனையில் ஒப்போ, ரியல்மி, சியோமி, சாம்சங், விவோ, மோட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் வாங்க முடியும். மேலும் இந்த பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் இந்த சிறப்பு விற்பனையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் அமேசான் தளத்திலும் பல்வேறு சாதனங்களுக்குசிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications