விலையுயர்ந்த போன்கள் அட்டகாச தள்ளுபடியில்: பிளிப்கார்ட் பண்டிகை தின விற்பனை!

|

ப்ரீமியம் வகை ஸ்மார்ட்போன்களுக்கு பிளிப்கார்ட் பண்டிகை தின விற்பனையில் அட்டகாச தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் பிக்சல், சாம்சங், மோட்டோரோலா, எல்ஜி போன்ற முன்னணி வகை பிராண்டுகள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

பிளிப்கார்ட் பிக் பில்லியன், அமேசான் கிரேட் இந்தியன் சேல்

பிளிப்கார்ட் பிக் பில்லியன், அமேசான் கிரேட் இந்தியன் சேல்

பல்வேறு பொருட்களுக்கும் அதிரடி தள்ளுபடி வழங்கும் வகையிலான பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனை மற்றும் அமேசான் கிரேட் இந்தியன் சேல் ஒரே சமயத்தில் நடைபெற உள்ளது. இந்த தினங்களில் நிறுவனங்கள் பல்வேறு பொருட்களுக்கும் தள்ளுபடிகள் வழங்குகிறது.

பிக் பில்லியன் தின விற்பனை தள்ளுபடி

பிக் பில்லியன் தின விற்பனை தள்ளுபடி

பல்வேறு பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களுக்கு பிக் பில்லியன் தின விற்பனையில் கிடைக்கும் சலுகைகள் வாடிக்கையாளர்களிடம் பெருமளவு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கும் சலுகைகள் குறித்து பார்க்கலாம்.

கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன்

கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன்

கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் அக்டோபர் 16 ஆம் தேதி முதல் விற்பனை பிரத்யேகமாக தொடங்கப்பட உள்ளது. இதன் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் 5.81-இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) டிஸ்ப்ளே, எச்டிஆர் ஆதரவு, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு அம்சம், ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 730 ஜி செயலி மூலம் இயக்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 10 ஆதரவு, 12.2 எம்பி பின்புற கேமரா மற்றும் 8 எம்பி முன்கேமரா அம்சம் இதில் உள்ளது.

எல்ஜி ஜி 8 எக்ஸ் ஸ்மார்ட்போன்

எல்ஜி ஜி 8 எக்ஸ் ஸ்மார்ட்போன்

எல்ஜி ஜி 8 எக்ஸ் ஸ்மார்ட்போனுக்கு 71% தள்ளுபடி கிடைக்கிறது. இதன் முக்கிய அம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் 6.1-இன்ச் எஃப்.எச்.டி + ஓஎல்இடி டிஸ்ப்ளே, 2.84GHz ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 855 செயலி, 6 ஜிபி ரேம், 128 ஜிபி சேமிப்பு வசதி, 12 எம்பி + 13 எம்பி இரட்டை பின்புற கேமரா, இரட்டை சிம் 4 ஜி வோல்ட்இ ஆதரவும் 4000 எம்ஏஎச் பேட்டரியும் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

ஆன்லைனில் ஆர்டர் செய்த பூனைகுட்டி.,பார்சலில் வந்த புலிக்குட்டி-ஒரு வாரமா வீட்டுல வளர்த்துருக்காங்க!

மோட்டோரோலா ரேஸ்ர் 5 ஜி

மோட்டோரோலா ரேஸ்ர் 5 ஜி

மோட்டோரோலா ரேஸ்ர் 5 ஜி நோ-காஸ்ட் இஎம்ஐ அம்சத்தோடு வருகிறது. இதில் 6.2-இன்ச் (2142 x 876 பிக்சல்கள்) எச்டி + டிஸ்ப்ளே, அட்ரினோ 620 ஜி.பீ. ஸ்னாப்டிராகன் 765 ஜி இயங்குதளம் மூலம் இயக்கப்படுகிறது. 8 ஜிபி ரேம், 256 ஜிபி சேமிப்பு வசதியோடு வருகிறது. அதோடு ஆண்ட்ராய்டு 10 ஆதரவோடு இயக்கப்படுகிறது. இதில் இரட்டை சிம் ஆதரவு, 48 எம்.பி பின்புற கேமரா 20 துளை கொண்ட முன்புற செல்பி கேமரா வசதி இதில் உள்ளது. மேலும் இதில் 2800 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 ப்ளஸ்

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 ப்ளஸ்

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 ப்ளஸ் தற்போது ரூ.35,198-க்கு கிடைப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால். 12MP + 64MP + 12MP ஆழ கேமரா, 10MP முன்புற செல்பி கேமரா, பாதுகாப்பு அம்சத்திற்கு கைரேகை சென்சார் வசதியும் இதில் உள்ளது. அதோடு 4500mAh பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது.

ஆசஸ் ஆர்ஓஜி ஸ்மார்ட்போன்

ஆசஸ் ஆர்ஓஜி ஸ்மார்ட்போன்

ஆசஸ் ஆர்ஓஜி ஸ்மார்ட்போன் முன்னதாக ரூ.55,999 என்ற விலையில் கிடைத்தது. தற்போது ரூ49,999 என விற்பனைக்கு கிடைக்கிறது. 128 ஜிபி சேமிப்பு வசதி, ஆண்ட்ராய்டு 10 ஆதரவு, 64 எம்பி, 13 எம்பி, 5 எம்பி பின்புற கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதோடு 24MP செல்பி கேமரா வசதியும் இதில் உள்ளது. மேலும் இதில் 5800 எம்ஏஎச் வரை கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் ப்ளஸ்

மோட்டோரோலா எட்ஜ் ப்ளஸ்

மோட்டோரோலா எட்ஜ் ப்ளஸ் விலை ரூ.89,999 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.64,999 ஆக கிடைக்கிறது. இரட்டை நானோ சிம், ஆண்ட்ராய்டு 10 ஆதரவு, 108 எம்பி + 16 எம்பி + 8 எம்பி முன்புற கேமராக்கள், 25 எம்பி செல்பி கேமரா வசதி உள்ளது. இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Flipkart Big Billion Days Sale 2020 Offers Premium Smartphones with Exciting Discounts

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X