பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை: குறைந்த விலையில் போக்கோ ஸ்மார்ட்போன்கள்.! இதோ பட்டியல்.!
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை வரும் அக்டோபர் 16-ம் தேதி முதல் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு ஸ்மார்ட்போன்கள், லேப்டாப், ஸ்மார்ட் டிவி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்திற்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்மார்ட்போன்களை வாங்குவது இதுவே நல்ல நேரம் என்று கூறலாம்.

மேலும் ஐபோன்கள் கூட குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் என்று பிளிப்கார்ட் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த சிறப்பு விற்பனையில் போக்கோ ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி விலை குறைக்கப்பட்டபோக்கோ ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

போக்கோ எம்2 ஸ்மார்ட்போன்
அன்மையில் அறிமுகம் செய்யப்பட்ட போக்கோ ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.12,999-ஆக உள்ளது. ஆனால் இந்த பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் மூலம் ரூ.10,499-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 6.53-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பு, 13எம்பி கேமரா உட்பட மொத்தம் நான்கு ரியர் கேமராக்கள், 8எம்பி செல்பீ கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி, ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80என்எம் பிராசஸர் என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.

போக்கோ எம்2 ப்ரோ
அட்டகாசமான போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.16,999-ஆக உள்ளது. ஆனால் இந்த பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் மூலம் ரூ.12,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 6.67-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பு, 48எம்பி கேமரா உட்பட மொத்தம் நான்கு ரியர் கேமராக்கள், 16எம்பி செல்பீ கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி, ஆக்டோ-கோர்ஸ்னாப்டிராகன் 720ஜி 8என்எம் பிராசஸர் என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.

போக்கோ எக்ஸ் 2
போக்கோ எக்ஸ் 2 ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.18,999-ஆக உள்ளது. ஆனால் இந்த பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் மூலம் ரூ.16,499-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 6.67-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பு, 64எம்பி கேமரா உட்பட மொத்தம் நான்கு ரியர் கேமராக்கள், 20எம்பி +2எம்பி டூயல் செல்பீ கேமரா, 4500எம்ஏஎச் பேட்டரி,ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 730ஜி 8என்எம் பிராசஸர் என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.

போக்கோ எக்ஸ் 3
போக்கோ எக்ஸ் 3 ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.19,999-ஆக உள்ளது. ஆனால் இந்த பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் மூலம் ரூ.16,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 6.67-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பு, 64எம்பி கேமரா உட்பட மொத்தம் நான்கு ரியர் கேமராக்கள், 20எம்பி செல்பீ கேமரா, 6000எம்ஏஎச் பேட்டரி,ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 732ஜி 8என்எம் பிராசஸர் என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.

போக்கோ சி3
போக்கோ சி3 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது வரும் ஆக்டோபர் 16-ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறதுää இந்த ஸ்மார்ட்போனை ரூ.7,499-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 6.53-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பு, 13எம்பி ரியர் கேமரா, 5எம்பி செல்பீ கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி, ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர் என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications