பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை: குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் மோட்டோ ஸ்மார்ட்போன்கள்.
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை வரும் அக்டோபர் 16-ம் தேதி முதல் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு ஸ்மார்ட்போன்கள், லேப்டாப், ஸ்மார்ட் டிவி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்திற்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்மார்ட்போன்களை வாங்குவது இதுவே நல்ல நேரம் என்று கூறலாம்.

மேலும் ஐபோன்கள் கூட குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் என்று பிளிப்கார்ட் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த சிறப்பு விற்பனையில் மோட்டோ ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

மோட்டோ ஜி9
மோட்டோ ஜி9 ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.11,499-ஆக உள்ளது, இந்த பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை மூலம் ரூ.9999-விலையில் வாங்க முடியும். மேலும் 6.5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பு,48எம்பி கேமரா உட்பட மொத்தம் மூன்று ரியர் கேமரா, ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3பாதுகாப்பு உட்பட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

மோட்டோரோலா ஒன் பியூஷன் பிளஸ்
மோட்டோரோலா ஒன் பியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.17,499-ஆக உள்ளது. இந்த இந்த பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை மூலம் ரூ.15.999-விலையில் வாங்க முடியும். மேலும் 6.5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பு, 64எம்பி கேமரா உட்பட மொத்தம் மூன்று ரியர் கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி, ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 730ஜி சிப்செட், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு உட்பட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

மோட்டோ இ7 பிளஸ்
மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.9,499-ஆக உள்ளது, இந்த பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை மூலம் ரூ.8999-விலையில் வாங்க முடியும். மேலும் 6.5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பு, 48எம்பி ரியர் கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி, குவால்காம் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 460 சிப்செட், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு உட்பட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

மோட்டோ ரேசர்
மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போனை இந்த சிறப்பு விலைகுறைப்பு சலுகையில் ரூ.84,999-விலையில் வாங்க முடியும், அதேபோல் மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போனை ரூ.64,999-விலையில் வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications