Home
Mobile

ஓடியாங்க.. ஓடியாங்க.. pOLED டிஸ்பிளே.. ரூ.10000 விலை குறைக்கப்பட்ட Motorola 5ஜி போன்.. எந்த மாடல்?

சில மாதங்களுக்கு முன்பு மோட்டோரோலா ரேசர் 60 (Motorola Razr 60) ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.49,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் பிக் பில்லியன் டேஸ் சேல் 2025 (Flipkart Big Billion Days Sale 2025) எனும் சிறப்பு விற்பனையில் இந்த மோட்டோரோலா ரேசர் 60 போனுக்கு நம்ப முடியாத தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா ரேசர் 60 போன் முன்பு ரூ.49,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் ரூ.10,000 தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.39,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது.

ரூ.10000 விலை குறைக்கப்பட்ட Motorola  5ஜி போன்.. எந்த மாடல்?

மோட்டோரோலா ரேசர் 60 அம்சங்கள் (Motorola Razr 60 Specifications): 6.96 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) பிஓஎல்இடி (pOLED) மெயின் டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பெரிய டிஸ்பிளேவில் 1080 x 2640 பிக்சல்கள், 413 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 220Hz டச் சாம்பிளிங் ரேட், எச்டிஆர்10பிளஸ் (HDR10+) உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

அதேபோல் 3.63 இன்ச் பிஓஎல்இடி செகண்டரி டிஸ்பிளே வசதியும் இந்த போனில் உள்ளது. இந்த செகண்டரி டிஸ்பிளேவில் 1056 x 1066 பிக்சல்கள், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) புரொடெக்சன், 413 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 1700 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட அம்சங்களும் உள்ளன.

தரமான ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400X 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400X 4nm) சிப்செட் உடன் மோட்டோரோலா ரேசர் 60 போன் வெளிவந்துள்ளது. பின்பு கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் மாலி ஜி615 ஜிபியு (Mali G615 GPU) கிராபிக்ஸ் கார்டு இந்த போனில் உள்ளது.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு 3 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும். அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதி இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர ரேம் பூஸ்ட் (RAM Boost) சப்போர்ட் இந்த போனில் உள்ளது.

மோட்டோ ஏஐ (Moto AI) அம்சங்களுடன் இந்த மோட்டோரோலா ரேசர் 60 போன் வெளிவந்துள்ளது. பின்பு டால்பி அட்மோஸ், ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர், சைடு ஃபிங்கர்பிரிண்ட் உள்ளிட்ட வசதிகளுடன் இந்த போன் வெளியானது.

ரூ.10000 விலை குறைக்கப்பட்ட Motorola  5ஜி போன்.. எந்த மாடல்?

50 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா-வைடு என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது மோட்டோரோலா ரேசர் 60 போன். மேலும் செல்பிகளுக்கும், வீடீயோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும இதில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் மூலம 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.

4500mAh பேட்டரி உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 30W ஃபாஸ்ட் சார்ஜிங், 15Wவயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன. இதுதவிர IP48 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான மோட்டோரோலா ரேசர் 60 போன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Flipkart Big Billion Days 2025 Sale: Motorola Razr 60 with 8GB RAM gets Rs.10000 discount
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X