கண்ணா லட்டு தின்ன ஆசையா? சோனி கேமரா.. நம்பமுடியாத விலை குறைப்பில் Motorola 5ஜி போன்.. எந்த மாடல்?
தற்போது நடைபெறும் பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் சேல் 2025 (Flipkart Big Billion Days Sale 2025) விற்பனையில் அசத்தலான மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் (Motorola Edge 60 STYLUS) போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த மோட்டோரோலா போன் ரூ.22,999 விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆனால் பிளிப்கார்ட் தளத்தில் தற்போது நடைபெறும் சிறப்பு விற்பனையில் மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் போனை ரூ.19,999 விலையில் வாங்கிவிட முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. எனவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் அம்சங்கள் (Motorola Edge 60 STYLUS Specifications): 6.7-இன்ச் பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2712 x 1220 பிக்சல்கள், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3), அக்வா டச் (Aqua Touch), 3000 நிட்ஸ் பிரைட்னஸ்உள்ளிட்ட சிறப்பான அம்சங்கள் உள்ளன.
இதுதவிர 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 446 பிபிஐ பிக்சன் டென்சிட்டி மற்றும் 300Hz டச் சாம்பிளிங் ரேட் போன்ற அம்சங்களும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக ஸ்டைலஸ் பென் கிடைப்பதால் 2.5டி கர்வ்ட் டிசைன் இந்த போனில் கிடைக்கிறது. அதேபோல் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.
ஆக்டா கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 (Octa Core 4nm Snapdragon 7s Gen 2) சிப்செட் உடன் மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் போன் வெளிவந்துள்ளது. மேலும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கும்.
மை யுஎக்ஸ் (My UX) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மூலம் மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பின்பு MIL-STD-810H இராணுவ-தர நீடித்துழைப்பு சான்றிதழையும் பெற்றுள்ளது இந்த போன்.
50 எம்பி மெயின் கேமரா (Sony LYT 700C) + 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 3 இன்-1 லைட் சென்சார் ஆகிய ரியர் கேமரா அமைப்புகளுடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் போன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா ஆதரவும் இந்த போனில் உள்ளது.

ஐஎஸ் டெக்னாலஜி (OIS Technology), அல்ட்ரா பிக்சல் டெக்னாலஜி (Ultra Pixel Technology), குவாட் பிடிஏஎப் (Quad PDAF) மற்றும் 4K ரெக்கார்டிங் சப்போர்ட், ஃபிளிக்கர் ரெடக்சன், ஆர்ஜிபி சென்சார் சப்போர்ட் உள்ளிட்ட பல சிறப்பான கேமரா அம்சங்கள் இந்த மோட்டோரோலா போனில் உள்ளன.
குறிப்பாக மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் போனில் 5000mAh பேட்டரி உள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W ஃபாஸ்ட் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








