Home
Mobile

தெறிக்க விடும் டிஸ்கவுண்ட் விலையில் லேட்டஸ்ட் Phone-கள்.. Flipkart Big Billion Days Sale 2024 தேதி அறிவிப்பு!

Flipkart Big Billion Days Sale 2024: அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையானது (Amazon Great Indian Festival Sale) வருகிற செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிளிப்கார்ட் வலைத்தளமானது தனது பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் (Flipkart Big Billion Days Sale) ஆனது செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவித்துள்ளது. வழக்கம் போல இந்த விற்பனையிலும் பிளிப்கார்ட் பிளஸ் மெம்பர்களுக்கு முன்கூட்டிய அணுகல் (Early Access) கிடைக்கும்.

அதாவது செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்கும் பிக் பில்லியன் டேஸ் சேல் ஆனது முழுக்க முழுக்க பிளிப்கார்ட் பிளஸ் மெம்பர்களுக்கானதாக (Flipkart Plus Members) இருக்கும். மறுநாள் முதல், அதாவது செப்டம்பர் 27 ஆம் தேதி முதல் மற்ற அனைவருக்கும் அணுக கிடைக்கும்.

Flipkart Big Billion Days Sale 2024 தொடக்க தேதி அறிவிப்பு!

என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது தள்ளுபடி, சலுகைகள் கிடைக்கும்? இன்று முதல், அதாவது செப்டம்பர் 16 ஆம் தேதி முதல்.. அடுத்துவரும் ஒவ்வொரு நாளும், என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்கள் கிடைக்கும் என்கிற விவரங்கள் பிளிப்கார்ட் வலைத்தளத்தில் வெளிப்படுத்தப்படும். அப்படியான இன்று மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள் மீதான சலுகைகள் வெளிப்படுத்தப்படும்

பின்னர் செப்டம்பர் 17 ஆம் தேதியன்று ரியல்மி ஸ்மார்ட்போன்கள் மீதான சலுகைகள் வெளிப்படுத்தப்படும், செப்டம்பர் 18 ஆம் தேதியன்று போக்கோ ஸ்மார்ட்போன்கள் மீதான சலுகைகள் வெளிப்படுத்தப்படும், செப்டம்பர் 19 ஆம் தேதியன்று விவோ ஸ்மார்ட்போன்கள் மீதான சலுகைகள் வெளிப்படுத்தப்படும், செப்டம்பர் 20 ஆம் தேதியன்று சாம்சங் ஸ்மார்ட்போன்கள் மீதான சலுகைகள் வெளிப்படுத்தப்படும், செப்டம்பர் 23 ஆம் தேதியன்று ஆப்பிள் ஐபோன்கள் மீதான சலுகைகள் வெளிப்படுத்தப்படும்,

என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது மிகப்பெரிய டிஸ்கவுண்ட்களை எதிர்பார்க்கலாம்? ஆப்பிளின் புதிய 1ஐபோன் 16 சீரீஸ் மாடல்கள் அறிமுகமாகி விட்டதால், ஐபோன் 15 (iPhone 15), ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus), ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro) மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max) ஆகிய 4 ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் மீதுமே முன் எப்போதும் இல்லாத அளவிலான டிஸ்கவுண்ட்களை எதிர்பார்க்கலாம்.

இதுதவிர்த்து சாம்சங் கேலக்ஸி எஸ்23, கூகுள் பிக்சல் 9, சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா, மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ, நத்திங் போன் 2ஏ போன்ற ஸ்மார்ட்போன்களும் நல்ல டிஸ்கவுண்ட் விலைக்கு வாங்க கிடைக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. பேங்க் ஆபர்களை பொறுத்தவரை, பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது, எச்டிஎப்சி பேங்க் கார்டு பயனர்கள் 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடியை பெறுவார்கள்; நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பங்களும் கிடைக்கும். மேலும் பழைய ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல எக்ஸ்சேன்ஜ் போனஸும் கிடைக்கும்.

புதிய ஐபோன் 16 சீரீஸ் மாடல்களின் விலை நிர்ணயம்: இந்தியாவில் ஐபோன் 16 (iPhone 16) மாடலின் பேஸிக் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.79,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே மாடலின் 256ஜிபி மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் முறையே ரூ.89,900 மற்றும் ரூ.1,09,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus) மாடலின் பேஸிக் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.89,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே மாடலின் 256ஜிபி மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் முறையே ரூ.99,900 மற்றும் ரூ.1,19,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) மாடலின் பேஸிக் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,19,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே மாடலின் 256ஜிபி, 512ஜிபி மற்றும் 1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் முறையே ரூ.1,29,900, ரூ.1,49,900 மற்றும் ரூ.1,69,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max ) மாடலின் பேஸிக் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,44,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே மாடலின் 512ஜிபி மற்றும் 1டிபிஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் முறையே ரூ.1,64,900 மற்றும் ரூ.1,84,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Flipkart Big Billion Days 2024 Sale to Start on Sep 26 Deals on Google Samsung iPhone and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X