ஹானர் போன்களுக்கு அசரவைக்கும் தள்ளுபடி.! பிளிப்கார்ட்டில் பிக் பில்லியன் டே துவக்கம்.!
முன்னணி ஆன்லைன் வர்த்தக தளமான பிளிப்கார்ட் தற்போது அசர வைக்கும் தள்ளுபடியை அறிவித்துள்ளது. பிக் பில்லியன் டே விழாவையொட்டி பிளிப்கார்ட் தளத்தில் வரும் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை ஹானர் ஸ்மார்ட் போ
முன்னணி ஆன்லைன் வர்த்தக தளமான பிளிப்கார்ட் தற்போது அசர வைக்கும் தள்ளுபடியை அறிவித்துள்ளது.

பிக் பில்லியன் டே விழாவையொட்டி பிளிப்கார்ட் தளத்தில் வரும் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை ஹானர் ஸ்மார்ட் போன்களுக்கு அசர வைக்கும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

தள்ளுபடி அறிவிப்பு:
தற்போது வெளிவந்துள்ள புதிய போன்களான ஹானர் 9 என், ஹானர் 9 லைட், ஹானர் 7 எஸ், ஹானர் 9ஐ, ஹானர் 7 ஏ உள்ளிட்ட ஸ்மார்ட் போன்களுக்கு 10 % தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ஹெச்டிஎப்சி பேங் கார்டுகளிலும், பஜாஜ் நிறுவனத்தின் இஎம்ஐ கார்டுகளிலும் பெற முடியும்.

ஹானர் போன் 2 மில்லியன் விற்பனை:
பிளிப்கார்ட் தளத்தில் இந்தாண்டு 2 மில்லியன் ஹானர் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், ஹானர் நிறுவனம் 1 மில்லியன்களுக்கும் அதிகமான போன்களை பிக் பில்லியன் டே வில் விற்க இருக்கின்றது.

ஹானர் 9என் :
ஹானர் 9என் (3+32 ஜிபி )போனின் விலை ரூ.11999 ஆகும். பிளிப்கார்ட் தளத்தில் வாங்கும் போது, ரூ.9999. ஆகும்.
ஹானர் 9 என் (4+64 ஜிபி) போனின் விலை ரூ.13,999 ஆகும். பிளிப்கார்ட் தளத்தில் வாங்கும் போது, ரூ.11999.

ஹானர் 7 ஏ:
ஹனார் 7 ஏ போன் ரூ.13999க்கு விற்பனை செய்யப்படுகின்றது. பிளிப்கார்ட்டு தளத்தில் வாங்கும் போது, ரூ.7999 ஆகும்.

ஹானர் 7எஸ்:
ஹானர் 7 எஸ் போன் ரூ.6999 ஆகும். தற்போது பிளிப்கார்டு தளத்தில் வாங்கும் போது, ரூ.6499 ஆகும்.

ஹானர் 9 லைட்:
ஹானர் 9 லைட் போன் (3+32 ஜிபி) ரூ.10,999க்கு விற்பனையாகிறது. பிளிப்கார்ட் தளத்தில் வாங்கும் போது ரூ.9999 கிடைக்கும்.
ஹானர் 9 லைட் (4+64 ஜிபி ) போனை பிளிப்கார்ட் தளத்தில் வாங்கும் போது ரூ.14999க்கு கிடைக்கும்.

ஹானர் 9ஐ:
ஹானர் 9ஐ போன் விலை ரூ.14999. பிளிப்கார்ட் தளத்தில் வாங்கும் போது, ரூ.12999க் கிடைக்கும்.

ஹானர் 10:
ஹானர் 10 போன் விலை ரூ.32999 ஆகும். பிளிப்கார்ட் தளத்தில் வாங்கும் போது ரூ.24,999


Click it and Unblock the Notifications








