Home
Mobile

பிளிப்கார்ட் அதிரடி ஆபர்.. டால்பி அட்மாஸ்.. 50எம்பி கேமரா.. கம்மி விலையில் Motorola 5ஜி போன்.. எந்த மாடல்?

தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிளிப்கார்ட் தளத்தில் big bang diwali sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த மோட்டோரோலா ஜி45 5ஜி (Motorola G45 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

பிளிப்கார்ட் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா ஜி45 5ஜி (Motorola G45 5G) ஸ்மார்ட்போனுக்கு 23 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.9,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. ஆகவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

பிளிப்கார்ட் அதிரடி ஆபர்.. கம்மி விலையில் Motorola 5ஜி போன்.

மோட்டோரோலா ஜி45 5ஜி அம்சங்கள் (Motorola G45 5G Specifications): 6.5 இன்ச் எச்டிபிளஸ் (HD+) ஐபிஎஸ் (IPS) டிஸ்பிளே உடன் மோட்டோரோலா ஜி45 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டது. 1600 x 720 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) புரொடெக்சன் மற்றும் பல சிறப்பு அம்சங்கள் இதன் டிஸ்பிளேவில் உள்ளன.

சக்திவாய்ந்த ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 5ஜி எஸ்ஓசி (Octa Core Qualcomm Snapdragon 6s Gen 3 6nm 5G SoC) சிப்செட் கொண்டுள்ளது இந்த போன். மேலும் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டை கொண்டுள்ளது மோட்டோ ஜி45 5ஜி ஸ்மார்ட்போன்.

டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கொண்டுள்ளது இந்த போன். மை யுஎக்ஸ் (My UX) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் மோட்டோரோலா ஜி45 5ஜி போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

மோட்டோரோலா ஜி45 5ஜி போன் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் செட்டப் (Dual Rear Setup) கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர மெயின் கேமராவில் குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology)மற்றும் எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

குறிப்பாக 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொண்டுள்ளது மோட்டோரோலா ஜி45 5ஜி போன். IP52 ஃஸ்ளாஷ் ரெசிஸ்டன்ட் கொண்டுள்ளது இந்த போன். இந்த ஸ்மார்ட்போன் வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும்.

அதுவும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type-C Charging Port), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த போனில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Flipkart Big Bang Diwali Sale: Motorola G45 5G smartphone gets discount: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X