Home
Mobile

தீபாவளி ஆபர் இன்னும் இருக்கு.. 7000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. கம்மி பட்ஜெட்ல Realme 5ஜி போன்.. எந்த மாடல்?

தீபாவளி பண்டிகை முடிந்தும் கூட பிளிப்கார்ட் இன்னும் போன்களுக்கு சிறப்பு தள்ளுபடியை வழங்கி வருகிறது. அதாவது தற்போது பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் big bang diwali sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் ரியல்மி பி4 ப்ரோ 5ஜி (realme P4 Pro 5G) ஸ்மார்ட்போனுக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

அதாவது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி பி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் முன்பு ரூ.28,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.22,999 விலையில் வாங்க கிடைக்கிறது, மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷபேக் சலுகையும் உள்ளது.

தீபாவளி ஆபர் இன்னும் இருக்கு.. கம்மி பட்ஜெட்ல Realme 5ஜி போன்..

ரியல்மி பி4 ப்ரோ 5ஜி அம்சங்கள்: 6.8-இன்ச் FHD+ AMOLED 4D கர்வ் பிளஸ் டிஸ்பிளே உடன் இந்த ரியல்மி பி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில்1080 × 2800 பிக்சல்ஸ், 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 6500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட் உடன் ரியல்மி பி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.

ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான Realme UI 6 ஓஎஸ் மூலம் ரியல்மி பி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் AI ஆதரவு உடனான ஹைப்பர் விஷன் சிப்செட் வசதியும் இந்த போனில் உள்ளது.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட கேமிங் அனுபவத்தை வழங்கும். அதற்கு தகுந்தபடி வெப்ப மேலாண்மைக்காக 7000 சதுர மிமீ ஏர்ஃப்ளோ விசி (வேப்பர் சேம்பர்) கூலிங் சிஸ்டம் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. AI லேண்ட்ஸ்கேப், AI ஸ்னாப் மோட், AI பார்ட்டி மோட் மற்றும் AI டெக்ஸ்ட் ஸ்கேனர் உட்பட பல ஏஐ அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.

ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடன் 50-மெகாபிக்சல் சோனி IMX896 பிரைமரி சென்சார் + 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி பி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இதில் உள்ளது. பின்பு முன் மற்றும் பின்புற கேமராக்கள் இரண்டும் 60fps இல் 4K வீடியோ ரெக்கார்ட் செய்யும்.

தீபாவளி ஆபர் இன்னும் இருக்கு.. கம்மி பட்ஜெட்ல Realme 5ஜி போன்..

7000mAh பேட்டரி வசதியுடன் ரியல்மி பி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 10W ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP65 மற்றும் IP66 ரேட்டிங் கொண்டுள்ளது ரியல்மி பி4 ப்ரோ 5ஜி போன். பின்பு இன்-டிஸ்ப்ளே ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார் வசதியும் இந்த போனில் உள்ளது.

5ஜி, 4ஜி, வைஃபை 6, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ரியல்மி பி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Flipkart Big Bang Diwali Sale 2025 realme P4 Pro 5G 5G With 7000mAh Battery Gets Price Cut
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X