Home
Mobile

Flipkart Sale.. இன்பினிக்ஸ் போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.. இதோ லிஸ்ட்.. கொத்தா தூக்குவீங்க..

பிளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் சேல் 2023 (Big Billion Days Sale 2023)) விற்பனை ஆனது வரும் வரும் அக்டோபர் 8-ம் தேதி தேதி தொடங்கி அக்டோபர் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை கம்மி விலையில் வாங்க முடியும்.

அதேபோல் பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்களாக இருக்கும் வாடிக்கையாளர்கள் அக்டோபர் 7-ம் தேதி முதல் போன்களை கம்மி விலையில் வாங்க முடியும். இந்நிலையில் பிளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் சலுகை விலையில் கிடைக்க உள்ள இன்பினிக்ஸ் போன்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.

Flipkart Sale.. இன்பினிக்ஸ் போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு..

அதன்படி இன்பினிக்ஸ் ஜீரோ 30 5ஜி (Infinix Zero 30 5G) போன் ஆனது ரூ23,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் இன்பினிக்ஸ் ஜீரோ 30 5ஜி போனை ரூ.20,999 விலையில் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி ((Infinix Note 30 5G) போன் ரூ.14,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.12,499 விலையில் இன்பினிக்ஸ் ஜீரோ 30 5ஜி போனை வாங்க முடியும்.

இன்பினிக்ஸ் ஜிடி10 ப்ரோ (Infinix GT 10 Pro) ஸ்மார்ட்போன் ஆனது தற்போது ரூ.20,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் ரூ.18,999 விலையில் வாங்க முடியும். பின்பு இன்பினிக்ஸ் ஹாட் 30ஐ (Infinix Hot 30i) போன் ஆனது முன்பு இந்தியாவில் ரூ.8,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.6,749 விலையில் வாங்க முடியும்.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 7 எச்டி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.5,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.5,399 விலையில் வாங்க முடியும். குறிப்பாக பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் இன்பினிக்ஸ் போன்கள் அதிகளவு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்போது இன்பினிக்ஸ் ஜிடி10 ப்ரோ போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

6.67 இன்ச் புல்எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ போன். இந்த டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 360ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட்,900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டிசிஐ - பி3 வைடு கலர் காமட் (DCI-P3 Wide Colour Gamut) மற்றும் 1920Hz டிம்மிங் ஃபிரிகொன்சி உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ ஆனது டிரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் வருகிறது. 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. செல்பீ கேமராவை பொறுத்தவரை 32 எம்பியாக இருக்கிறது. அதேபோல் டிடிஎஸ் சப்போர்ட் கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், வயர்லெஸ் ஆடியோ உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளன.

Flipkart Sale.. இன்பினிக்ஸ் போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு..

45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி உடன் வெளிவந்துள்ளது இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ. ப்ளூடூத் 5.2 மற்றும் வை-பை 6 கனெக்டிவிட்டி,3.5 மிமீ ஆடியோ ஜாக், டைப் - சி சார்ஜிங் போர்ட் மற்றும் எஸ்டிகார்டு போர்ட், இன்-டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் சென்சார், எஃப்எம் ரோடியோ, என்எஃப்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் உள்ளன.

மாலி ஜி77 எம்சி9 (ARM Mali-G77 MC9) கிராபிக்ஸ் கார்டு கொண்ட மீடியாடெக் டைமன்சிட்டி 8050 (MediaTek Dimensity 8050) சிப்செட் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ போன். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இந்த இன்பினிக்ஸ் போன் சைபர் மிராஜ் சில்வர் (Mirage Silver) மற்றும் பிளாக் (Cyber Black) ஆகிய 2 கலர்களில் விற்பனை செய்யப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Flipkart BBD sale: latest Infinix phones deals confirmed: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X