Home
Mobile

இப்போ ரூ.6000 விலை கம்மி.. ஆபரில் கிடைக்கும் Motorola போன்.. 144Hz டிஸ்பிளே, IP68 ரேட்டிங், 68W சார்ஜிங்!

தற்போது பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளத்தில் நடக்கும் சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக.. மோட்டோரோலாவின் முரட்டு ஸ்மார்ட்போன் ஒன்று ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது. பிளிப்கார்ட் வலைத்தளம் இந்த ஆபரை "டாப் டிஸ்கவுண்ட் ஆப் தி சேல்" (Top Discount of the Sale) என்று குறிப்பிட்டுள்ளது. என்ன மாடல்? எவ்வளவு ஆபர்? இதோ விவரங்கள்:

மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் (Motorola Edge 50 Fusion) ஸ்மார்ட்போன் தான் தற்போது ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது. தற்போது பிளிப்கார்ட்டில் இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி + 12ரேம் 8ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது, அதன் அசல் எம்ஆர்பி விலையான ரூ.25,999 பதிலாக ரூ .19,999 க்கு வாங்க கிடைக்கிறது.

இப்போ ரூ.6000 விலை கம்மி.. ஆபரில் கிடைக்கும் Motorola போன்!

நினைவூட்டும் வண்ணம் சமீபத்தில் தான் மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது. இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.22,999 க்கும், 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.24,999 க்கும் வாங்க கிடைக்கிறது. ஒருவேளை இவ்விரு ஸ்மார்ட்போன்களில் எதை வாங்கலாம் என்கிற குழப்பம் உங்களிடம் இருந்தால்.. இரண்டு போன்களின் அம்சங்களையும் ஒப்பிட்டு பார்க்கவும்:

மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate) உடனான டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 (Snapdragon 7s Gen 2 SoC) சிப்செட்
- ஐபி68 ரேட்டிங் (IP68 Rating)
- 50 எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப்
- 68W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை 1,600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (1600 nits of peak brightness) மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்ஷன் (Corning Gorilla Glass 5 protection) உடனான 6.7-இன்ச் கர்வ்டு பிஓஎல்இடி டிஸ்பிளேவை (Curved pOLED display) கொண்டுள்ளது. இதில் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சாரும் (In-display fingerprint sensor) உள்ளது

கேமராக்களை பொறுத்தவரை, இதில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 50-மெகாபிக்சல் சோனி LYTIA 700C மெயின் சென்சார் மற்றும் 13-மெகாபிக்சல் அல்ட்ராவைடு மேக்ரோ ஷூட்டர் இருக்கும். முன்பக்கத்தில் 32-மெகாபிக்சல் செல்பீ சென்சார் உள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 14 (Android 14 OS) ஓஎஸ் அடிப்படையிலான ஹலோ யுஐ (Hello UI) கொண்டு இயங்குகிறது.

மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் ஆனது இந்தியாவில் 15 5ஜி பேண்டுகள் (5G Bands) மற்றும் வைஃபை 6-ஐ (WiFI 6) ஆதரிக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடைசியாக, பேட்டரி மற்றும் பாஸ்ட் சர்ஜிங்கை பொறுத்தவரை, இது 68W வேகமான சார்ஜிங்கிற்கான ஆதரவு உடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

புதிதாக அறிமுகமான மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.7-இன்ச் 1.5கே (1,220 x 2,712 பிக்சல்கள்) ஆல்-கர்வ்டு pOLED 120Hz டிஸ்பிளே
- வாட்டர் டச் 3.0, HDR10+ ஆதரவு, கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன்
- SGS லோ ப்ளூ லைட் மற்றும் லோ மோஷன் ப்ளர் சான்றிதழ்களுடன் பான்டோன் வேலிடேட்டட் ட்ரூ கலர் சான்றிதழையும் கொண்டுள்ளது.

- 12ஜிபி வரை LPDDR4X ரேம் மற்றும் 256ஜிபி uMCP ஆன்போர்டு ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் டைமன்சிட்டி 7400 சிப்செட்
- மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1TB வரை ஸ்டோரேஜ் விரிவாக்கம்
- ஆண்ட்ராய்டு 15-அடிப்படையிலான ஹலோ யுஐ
- நான்கு வருட செக்யூரிட்டி அப்டேட்களுடன் 3 வருட ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் கிடைக்கும்

- எப்/1.8 அபெர்க்ஷர் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி LYT700C ப்ரைமரி சென்சார்
- எப்/2.2 அபெர்க்ஷர் உடன் கூடிய 13-மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர்
- பிரத்யேக 3-இன்-1 லைட் சென்சார்
- எப்/2.2 அபெர்க்ஷர் உடன் கூடிய 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா (4K வீடியோ ரெக்கார்ட் ஆதரவுடன்)
- 68W வயர்டு டர்போ சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,500mAh பேட்டரி
- ஐபி68 மற்றும் ஐபி69 தூசி மற்றும் நீர்-எதிர்ப்பு ரேட்டிங்.

அஃபிலியேட் லிங்க் வெளிப்படுத்துதல்: இந்த வலைத்தளத்தில் உள்ள அஃபிலியேட் லிங்க் மூலம் செய்யப்படும் கொள்முதல்களில் இருந்து கிஸ்பாட் வலைத்தளம் கமிஷன்களை சம்பாதிக்கிறது. தயாரிப்புகள் நேர்மையான கருத்துக்கள் மற்றும் தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படுகின்றன, உங்களுக்கு எந்த கூடுதல் செலவும் இல்லாமல்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Flipkart Announced Top Discount of the Sale on Motorola Edge 50 Fusion Check Out Offer Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X