Home
Mobile

பல் இளிக்கும் விலையில் 4 பிரீமியம் போன்கள்.. டிச.10 குள்ள வாங்குறவங்க லக்கி.. Flipkart Buy Buy 2025 சேல்!

பிளிப்கார்ட் வலைத்தளத்தில் பை பை 2025 சேல் என்கிற சிறப்பு விற்பனை தொடங்கியுள்ளது. இது - இன்று டிசம்பர் 5 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 10 ஆம் தேதி வரை நடைபெறும். இந்த விற்பனையின் போது பல நிறுவனங்களின் ப்ரீமியம் ஸ்மாட்போன்கள் "பலே" டிஸ்கவுண்ட் விலையில் வாங்க கிடைக்கிறது

நேரடி விலை குறைப்புகள் ஒருபக்கம் இருக்க, பிளிப்கார்ட் பை பை 2025 விற்பனையில் உங்கள் பணத்தை மேலும் சேமிக்க - வங்கி தள்ளுபடிகள், கேஷ்பேக் மற்றும் ஈஸி இஎம்ஐ விருப்பங்களும் உள்ளன. டிசம்பர் 10 ஆம் தேதிக்குள் வாங்கினால் "இந்த ஸ்மார்ட்போனில் செம்ம லாபம் பார்க்கலாம்" என்கிற 4 பிரீமியம் போன்களின் பட்டியல் இதோ:

பல் இளிக்கும் விலையில் 4 பிரீமியம் போன்கள்.. டிச.10 குள்ள!

1. சாம்சங் கேலக்ஸி எஸ்25 (Samsung Galaxy S25): சாம்சங் நிறுவனத்தின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் ஒன்றான கேலக்ஸி எஸ்25 ஆனது ரூ.69,999 என்கிற தொடக்க விலையில் வாங்க கிடைக்கிறது. இது அதன் அசல் வெளியீட்டு விலையான ரூ.80,999-ஐ விட கணிசமாக குறைவாகும்.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது 6.2-இன்ச், 2எக்ஸ் டைனமிக் AMOLED டிஸ்பிளே பேனலை கொண்டுள்ளது. இது Snapdragon 8 Elite Gen 3 சிப்செட்டால் இயக்கப்படுகிறது. இது தவிர இது 4000 mAh பேட்டரி மற்றும் ட்ரிபிள் 50MP கேமரா செட்டப் உடன் வருகிறது.

2. ஆப்பிள் ஐபோன் 16 (Apple iPhone 16): பிளிப்கார்ட் பை பை 2025 விற்பனையில் கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான ஆப்பிளின் ஃபிளாக்ஷிப் மாடல் ஆன ஐபோன் 16 ஆனது ரூ.55,999 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இது அசல் வெளியீட்டு விலையான ரூ.72,499-ஐ விட மிக குறைவாகும்

ஆப்பிள் ஐபோன் 16 மாடலின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது 6.1-இன்ச் சூப்பர் ரெடினா XDR டிஸ்பிளேவுடன் வருகிறது. இது A18 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 48MP + 12MP ரியர் கேமரா செட்டப்பை வழங்குகிறது. மேலும் இது 3561mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது தவிர IP68 ரேட்டிங் மற்றும் செராமிக் ஷீல்ட் டிஸ்ப்ளே பாதுகாப்புடன் வருகிறது.

3. விவோ எக்ஸ்200எப்இ (Vivo X200FE): பிளிப்கார்ட் பை பை 2025 விற்பனையில் - விவோ நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் ஒன்றான விவோ எக்200எப்இ மாடல் ஆனது ரூ.52,000 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இது அசல் விலையான ரூ.59,999-ஐ விட கணிசமாக குறைவாகும்.

விவோ எக்ஸ்200எப்இ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.3-இன்ச் LTPO AMOLED டிஸ்பிளேவுடன் வருகிறது. இது மீடியாடெக் டைமன்சிட்டி 9300+ சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6500mAh பேட்டரி மற்றும் IP68 மற்றும் IP69 ரேட்டிங்கையும் வழங்குகிறது.

4. நத்திங் போன் 3 (Nothing Phone 3): நத்திங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன நத்திங் போன் 3 ஆனது ரூ.49,999 என்கிற தொடக்க விலையில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம் இது ரூ.79,999 க்கு அறிமுகமானது. அதாவது இது ரூ.30000 வரையிலான விலை குறைப்பை பெறுகிறது. உண்மையிலேயே நத்திங் போன் 3 மாடலை வாங்க இது தான் பெஸ்ட் டைம்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Flipkart 2025 Year End Sale iPhone 16 Galaxy S25 Vivo X200FE gets Discount un till December 10
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X