இரண்டு அட்டகாசமான Vivo ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!

|

விவோ நிறுவனத்தின் இரண்டு அட்டகாசமான ஸ்மார்ட்போன்களுக்கு தற்போது விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தற்போது விவோ வி23இ 5ஜி மற்றும் விவோ Y21T ஸ்மார்ட்போன்களுக்கு தான் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு விவோ ஸ்மார்ட்போன்கள்

இரண்டு விவோ ஸ்மார்ட்போன்கள்

குறிப்பாக இந்த விலைகுறைப்பு அறிவிப்பை Jerome Chen என்பவர் தான் பேஸ்புக் மூலம் தெரிவித்துள்ளார். இப்போது இந்த இரண்டு விவோ
ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் விபரங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

இது சாதாரண ஸ்மார்ட்போன் இல்ல.. வேற லெவல் போன்! Xiaomi MIX Fold 2 அறிமுகம் தேதி இது தான்!இது சாதாரண ஸ்மார்ட்போன் இல்ல.. வேற லெவல் போன்! Xiaomi MIX Fold 2 அறிமுகம் தேதி இது தான்!

விலைகுறைப்பு

விலைகுறைப்பு

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.25,999-ஆக இருந்தது. தற்போது விலைகுறைக்கப்பட்டு ரூ.24,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக இந்த போன் மிட்நைட் ப்ளூ மற்றும் சன்ஷைன் கோல்ட்
நிறங்களில் கிடைக்கும்.

அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ Y21T ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரு.16,499-ஆக இருந்தது. தற்போது விலைகுறைக்கப்பட்டு ரூ.15,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விவோ போன் மிட்நைட் ப்ளூ மற்றும் பேர்ல் ஒயிட் நிறங்களில் கிடைக்கும்.

போன்கள் மீது 25% முதல் 50% வரை தள்ளுபடி: டாப் பெஸ்ட் Amazon சலுகை இது தான்! மிஸ் பண்ணாம பாருங்க!போன்கள் மீது 25% முதல் 50% வரை தள்ளுபடி: டாப் பெஸ்ட் Amazon சலுகை இது தான்! மிஸ் பண்ணாம பாருங்க!

விவோ வி23இ 5ஜி அம்சங்கள்

விவோ வி23இ 5ஜி அம்சங்கள்

விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2400பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் போன்ற சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த விவோ போன்.

புதிய விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 810 சிப்செட் வசதி உள்ளது. மேலும் Funtouch OS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

Infinix Smart 6 HD: சத்தியமா நம்ப முடியல! ரூ.5000 இருந்தா இப்படி ஒரு ஸ்மார்ட்போன் வாங்கலாமா?Infinix Smart 6 HD: சத்தியமா நம்ப முடியல! ரூ.5000 இருந்தா இப்படி ஒரு ஸ்மார்ட்போன் வாங்கலாமா?

 விவோ வி23இ 5ஜி கேமரா

விவோ வி23இ 5ஜி கேமரா

விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக்
கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 44எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன்.

மிகவும் குறைவான விலையில் அறிமுகமாகும் Realme C33: பணத்தை ரெடி பண்ணி வச்சுக்கோங்க..!மிகவும் குறைவான விலையில் அறிமுகமாகும் Realme C33: பணத்தை ரெடி பண்ணி வச்சுக்கோங்க..!

அருமையான பேட்டரி

அருமையான பேட்டரி

குறிப்பாக விவோ வி23இ 5ஜி போன் 4050 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு 44Wபாஸ்ட் சார்ஜிங் வசதி, ஹை-ரெஸ் ஆடியோ சான்றிதழ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

மேலும் 5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட வைஃபை, 3.5எம்எம் ஹெட்ஃபோன் ஜாக், ப்ளூடூத் 5.1,யுஎஸ்பி-சி சார்ஜ் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டு வெளிவந்துள்ளது
இந்த விவோ ஸ்மார்ட்போன்.

Xiaomi இன் அதிரடி சுதந்திர தின ஆஃபர்: ரூ.24,000 வரை தள்ளுபடியா? இது தெரியாம போச்சேப்பா!Xiaomi இன் அதிரடி சுதந்திர தின ஆஃபர்: ரூ.24,000 வரை தள்ளுபடியா? இது தெரியாம போச்சேப்பா!

Vivo Y21T அம்சங்கள்

Vivo Y21T அம்சங்கள்

Vivo Y21T ஆனது Funtouch OS 12 உடன் Android 11 இல் இயங்குகிறது. இது 6.51 இன்ச் HD+ (720x1,600 பிக்சல்கள்) டிஸ்பிளே கொண்டுள்ளது. மேலும் இந்த போனில் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ Y21T கேமரா

விவோ Y21T கேமரா

விவோ Y21T ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா,5000 எம்ஏஎச் பேட்டரி, 18W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டு இந்த விவோ போன் வெளிவந்துள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
flagship Vivo V23e 5G, Vivo Y21T smartphones Price Slashed in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X