108எம்பி ரியர் கேமரா கொண்ட Redmi போனுக்கு அதிரடி விலைகுறைப்பு: உடனே முந்துங்கள்.!
ரெட்மி (Redmi)நிறுவனத்தின் மிகவும் பிரபலமான ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விலைகுறைப்பு
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் போனின் அறிமுக விலை ரூ.19,999-ஆக இருந்தது. தற்போது அமேசான் தளத்தில் இந்த போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டு ரூ.17,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்தஸ்மார்ட்போனுக்கு ரூ.1500 அமேசான் கூப்பன் தள்ளுபடியும் உள்ளது.
இதுதவிர எஸ்பிஐ கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ரூ.1500 வரை தள்ளுபடி பெறமுடியும். எனவே இந்த ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனை ரூ.14,999-விலையில் இப்போது வாங்க முடியும். இப்போது இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் டிஸ்பிளே
ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 1080x2400 பிக்சல்ஸ்,
120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 ஆதரவு, 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த
அட்டகாசமான ரெட்மி ஸ்மார்ட்போன்.

108எம்பி மெயின் கேமரா
ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் 108எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி போர்ட்ரெயிட் கேமரா + 5எம்பி மேக்ரோ மோட் என்கிற குவாட் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் மிகவும் தெளிவாக படம் எடுக்க முடியும்.
அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி ஸ்மார்ட்போன் மாடல். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தரமான மென்பொருள்
குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமானது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்தது. குறிப்பாக இதன்மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.

அருமையான பேட்டரி
ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் 5020 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும்.
பின்பு 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸகேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5ஜி ஆதரவு இல்லை
இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து அம்சங்களும் மிகவும் சிறப்பாகவே உள்ளது. ஆனால் இது 5ஜி போன் கிடையாது. அதாவது 4ஜி ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல்.
மேலும் புளூடூத், வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலானரெட்மி ஸ்மார்ட்போன் மாடல்.

நம்பி வாங்கலாம்
5ஜி ஆதரவு மட்டும் தான் இந்த போனில் இல்லை, மற்றபடி 108எம்பி கேமரா, தரமான பிராசஸர், பெரிய டிஸ்பிளே உள்ளிட்ட பல அசத்தலான அம்சங்களை வழங்குகிறது இந்த ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications