இதை விட கம்மி விலைக்கு இனி கிடைக்காது.. Samsung-இன் பிளாக்ஷிப் போன்!

|

பட்ஜெட் ஸ்மார்ட்போனாக இருந்தாலும் சரி, பிரீமியம் அல்லது பிளாக்ஷிப் மாடலாக இருந்தாலும் சரி, Samsung நிறுவனத்தின் போன்கள் என்றால் ஒரு தனி நம்பிக்கை - கண்டிப்பாக அது நன்றாக இருக்கும் என்று ஒரு நம்பிக்கை!

அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் Samsung நிறுவனம், வெறும் ரூ.1,100 முதல் ரூ.1 லட்சத்திற்கும் மேல் மதிப்புள்ள போன்களை தன்வசம் கொண்டுள்ளது.

அந்த பட்டியலில் சேர்ந்த லேட்டஸ்ட் Flagship ஸ்மார்ட்போன்!

அந்த பட்டியலில் சேர்ந்த லேட்டஸ்ட் Flagship ஸ்மார்ட்போன்!

உங்களில் பலருக்கும் தெரிந்து இருக்கலாம், சமீபத்தில் தான் சாம்சங் நிறுவனம் தனது லேட்டஸ்ட் ஜெனரேஷன் ஃபோல்டபில் ஸ்மார்ட்போன்களான கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4 மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 4 (Galaxy Z Fold 4 and Galaxy Z Flip 4) மாடல்களை அறிமுகம் செய்தது.

OnePlus பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் OnePlus பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் "இதை" ஒருத்தனும் கண்டுக்க மாட்டான்!

அதை தொடர்ந்து முந்தைய ஜெனரேஷன் மாடல் மீது விலைக்குறைப்பு!

அதை தொடர்ந்து முந்தைய ஜெனரேஷன் மாடல் மீது விலைக்குறைப்பு!

முன்பதிவுக்கு தயாராகிவிட்ட இந்த 2 ஸ்மார்ட்போன்களும் (கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4 மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 4) அடுத்த மாதம் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில், சாம்சங் நிறுவனத்தின் "முந்தைய ஜெனரேஷன்" ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் ஒன்றின் மீது "தாறுமாறான" விலைக்குறைப்பு மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது!

இதை விட கம்மி விலைக்கு இனி கிடைக்காது!

இதை விட கம்மி விலைக்கு இனி கிடைக்காது!

விலைக்குறைப்பு மற்றும் சலுகைகளை பெற்றுள்ள மாடல் - சாம்சங் கேலக்ஸி இசட் ஃப்ளிப் 3 (Samsung Galaxy Z Flip 3) ஸ்மார்ட்போன் ஆகும்.

ஒருவேளை லேட்டஸ்ட் ஆக அறிமுகமான ஃப்ளிப் 4 5ஜி மாடலை வாங்கும் அளவிற்கு உங்களிடம் பட்ஜெட் இல்லை என்றால் நீங்கள் ஃப்ளிப் 3 மாடலை வாங்கலாம். ஏனெனில் இது முன்னெப்போதை விடவும் மிகவும் மலிவான விலைக்கு வாங்க கிடைக்கிறது!

தனது பெஸ்ட் 5G Phone மீது ரூ.3,000 விலைக்குறைப்பை அறிவித்த Samsung!தனது பெஸ்ட் 5G Phone மீது ரூ.3,000 விலைக்குறைப்பை அறிவித்த Samsung!

Samsung Galaxy Z Flip 3 - புதிய விலை மற்றும் சலுகைகள்!

Samsung Galaxy Z Flip 3 - புதிய விலை மற்றும் சலுகைகள்!

கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Samsung Galaxy Z Flip 3 ஆனது பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான Amazon.in வழியாக ரூ.68,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த தள்ளுபடி விலையுடன் சேர்த்து, சில கூடுதல் சலுகைகளும் அணுக கிடைக்கிறது. நீங்கள் Samsung Galaxy Z Flip 3-ஐ வாங்கும் போது, ரூ.12,750 வரையிலான எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் பெறலாம்.

மேலும் இந்த "மடிக்கக்கூடிய" ஸ்மார்ட்போனின் மீது நோ காஸ்ட் EMI விருப்பமும் அணுக கிடைக்கிறது!

ரூ.68,999-க்கு Galaxy Z Flip 3 வொர்த்-ஆ?

ரூ.68,999-க்கு Galaxy Z Flip 3 வொர்த்-ஆ?

வொர்த்-ஆ? இல்லையா? என்பதை பற்றி பேசும் முன், நாம் Samsung Galaxy Z Flip 3 ஸ்மார்ட்போனின் அம்சங்களை அறிந்துகொள்ள வேண்டும்.

- 1.9-இன்ச் கவர் ஸ்கிரீன் (சூப்பர் AMOLED பேனல்)
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் FHD+ டைனமிக் AMOLED மெயின் டிஸ்பிளே
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 12MP வைட் (f/1.8, OIS மற்றும் ஆட்டோஃபோகஸ்) மெயின் கேமரா
- 12MP அல்ட்ராவைட் (f/2.2) இரண்டாம் நிலை கேமரா
- மெயின் டிஸ்பிளேவில் 10MP செல்பீ கேமரா
- 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி அல்லது 256 ஜிபிஇன்டர்னல் ஸ்டோரேஜ்
- 5nm 64-பிட் ஆக்டா-கோர் சிப்செட்
- ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்
- 3300mAh பேட்டரி

அடச்சே! Gmail-ல இப்படி ஒரு 'சீக்ரெட்' இருக்குனு.. இவ்ளோ நாள் தெரியாம போச்சே!அடச்சே! Gmail-ல இப்படி ஒரு 'சீக்ரெட்' இருக்குனு.. இவ்ளோ நாள் தெரியாம போச்சே!

நிறைகளை பற்றி பேசும் போது?

நிறைகளை பற்றி பேசும் போது?

நல்ல விஷயங்களை பற்றி பேசும் போது, இது மிகவும் துடிப்பான ஃபோல்டபில் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இதன் "உருவாக்க தரம்" வேற லெவலில் இருக்கிறது. உடன் இதை மிகவும் எளிதாக பாக்கெட்களில் வைக்க முடிகிறது.

செயல்தினை பொறுத்தவரை 'டாப்-நாட்ச்' ஆக உள்ளது. போதாக்குறைக்கு இது வாட்டர் ப்ரூப் உடனும் வருகிறது.

குறைகளை பற்றி பேசும் போது?

குறைகளை பற்றி பேசும் போது?

சூரிய ஒளியின் கீழ் இதன் மெயின் டிஸ்பிளேவானது அவ்வளவு பிரகாசமானதாக இல்லை. மேலும் இதன் கவர் ஸ்க்ரீன் ஆனது இன்னும் கொஞ்சம் நன்றாக செயல்படும்படி உருவாக்கப்பட்டு இருக்கலாம். இது பலவீனமான பேட்டரி லைஃபையே வழங்குகிறது, உடன் 'ஸ்லோ'வான சார்ஜிங் வேறு!

கேமராக்களை பொறுத்தவரை எல்லாமே சூப்பர்! லோ லைட் வீடியோவை தவிர்த்து, அது இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம்.

இந்த 8 போன்களை பற்றி விளம்பரம் வராது; ஆனாலும் மார்க்கெட்ல பெஸ்ட்டு!இந்த 8 போன்களை பற்றி விளம்பரம் வராது; ஆனாலும் மார்க்கெட்ல பெஸ்ட்டு!

யாரெல்லாம் வாங்கலாம்?

யாரெல்லாம் வாங்கலாம்?

மிகவும் வித்தியாசமான மற்றும் ஸ்டைல் ஆன ஒரு ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும், அது அன்றாடப் பயன்பாட்டிற்கு போதுமானதாக இருந்தால் போதும் என்று நினைக்கும் எவருமே இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Flagship Foldable Smartphone Samsung Galaxy Z Flip 3 Selling at its Lowest Price Ever

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X