Home
Mobile

ஜூன் 6.. VIVO சம்பவம் லோடிங்.. இந்த மாதிரி ஒரு Phone-ஐ இந்தியாவில லான்ச் பண்றது இதுவே முதல் முறை!

இப்படியொரு ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்வது இதுவே முதல் என்று கூறும்படியாக விவோ நிறுவனம், சீனாவில் அறிமுகமான தனது லேட்டஸ்ட் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை இந்தியாவிற்கும் கொண்டுவருகிறது. என்ன மாடல்? எந்த தேதியில் அறிமுகம்? என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? அது விவோ எக்ஸ் ஃபோல்ட் 3 ப்ரோ (Vivo X Fold 3 Pro) ஸ்மார்ட்போன் ஆகும். முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று மட்டுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது சரியாக எந்த தேதியில் அறிமுகமாகும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளார்.

இந்த மாதிரி ஒரு Phone-ஐ இந்தியாவில லான்ச் பண்றது இதுவே முதல் முறை!

எந்த தேதியில் அறிமுகம்? விவோ நிறுவனம் அதன் புக் ஸ்டைல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான விவோ எக்ஸ் ஃபோல்ட் 3 ப்ரோவை வருகிற ஜூன் 6 ஆம் தேதியன்று இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி, இது ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது,'

விவோ எக்ஸ் போல்ட் 3 ப்ரோவின் இந்தியா வெளியீடு ஜூன் 6 ஆம் தேதி நடைபெறும் என்பதை விவோ நிறுவனம் ஒரு பத்திரிகை அழைப்பின் மூலம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் விவோ இந்தியா ஆகிய இரண்டு வலைத்தளங்களில் பிரத்யேக பக்கங்களும் உருவாக்கபட்டுள்ளன.

என்ன விலைக்கு வரும்? விவோ எக்ஸ் ஃபோல்ட் 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய விலை விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இசீன விலை விவரங்களை பொறுத்தவரை, விவோ எக்ஸ் ஃபோல்ட் 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் பேஸிக் 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,16,000 க்கு அறிமுகமானது.

என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? பெரும்பாலும் விவோ எக்ஸ் ஃபோல்ட் 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் சீன வேரியண்ட்டில் உள்ள அனைத்து அம்சங்களும் அப்படியாக இந்திய வேரியண்ட்டிலும் இடம்பெறும். அப்படியாக இந்த ஸ்மார்ட்போன் 8.03-இன்ச் 2கே (2200 x 2480 பிக்சல்ஸ்) அமோஎல்இடி இன்னர் போல்டபிள் டிஸ்பிளே மற்றும் 6.53-இன்ச் (1172 x 2748 பிக்சல்ஸ்) அமோஎல்இடி அவுட்டர் டிஸ்பிளேவை கொண்டுருக்கும்.

சிப்செட்டை பொறுத்தவரை, ஸ்னாப்டிராகன் 9 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3 SoC) உடனாக 16ஜிபி வரையிலான LPDDR5X ரேம் மற்றும் 1டிபி வரையிலான UFS4.0 ஸ்டோரேஜை கொண்டிருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் விவோ வி3 இமேஜிங் சிப் மற்றும் கார்பன் ஃபைபர் கீல் ஆகியவற்றையும் கொண்டுருக்கும்.

கேமராக்களை பொறுத்தவரை, விவோ எக்ஸ் ஃபோல்ட் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 50-மெகாபிக்சல் மெயின் கேமராவை உள்ளடக்கிய ஸெய்ஸ்-பிராண்டட் கேமரா யூனிட்டை (Zeiss-branded camera unit) கொண்டுருக்கும். செல்பீகளுக்காக இன்னர் மற்றும் அவுட்டர் டிஸ்பிளேக்களில் 32 மெகாபிக்சல் செல்பீ ஷூட்டர்களை கொண்டுருக்கும்.

கடைசியாக இது 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,700mAh பேட்டரியை பேக் செய்யும். மடிக்கும்போது 11.2மிமீ தடிமனை கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் சீன வேரியண்ட் ஆனது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்படையிலான ஒரிஜின் ஓஎஸ் உடன் வருகிறது. அதுவே இந்தியாவில் பன்டச் ஓஎஸ் ஆக இருக்கும்.

முன்னரே குறிப்பிட்டபடி, இதுவரை விவோவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சீனாவில் மட்டுமே விற்கப்பட்டன. இருப்பினும் சாமீப காலமாக போல்டபிள் ஸ்மார்ட்போன் சந்தை இந்தியாவிலும் விரிவடைந்து வருவதால், விவோ எக்ஸ் ஃபோல்ட் 3 ப்ரோவின் வெளியீடு இந்த பிராண்டிற்கு குறிப்பிடத்தக்கதாக முன்னேற்றமாக இருக்கலாம். இந்த போன் சாம்சங் கேலக்ஸி இஸட் போல்ட் 5, கூகுள் பிக்சல் போல்ட் மற்றும் ஒன்பிளஸ் ஓப்பன் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
First Time Vivo Launching Its Foldable Phone in India on June 6 Check Vivo X Fold 3 Pro Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X