அவசரப்பட்டியே குமாரு.. கொஞ்சம் லேட்-ஆ சொல்லி இருக்கலாம்.. இப்போ யாரு Pixel 9a மாடலை வாங்குவா?
கூகுள் (Google) நிறுவனத்தின் பிக்சல் 9ஏ (Pixel 9a) ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்காக காத்திருக்கும் பலரும், அப்படியே "பேக் அடிக்கும்" படியான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அது கூகுள் பிக்சல் 10 சீரீஸ் (Google Pixel 10 Series) பற்றிய தகவல் ஆகும். அப்படி என்ன தகவல்? இதோ விவரங்கள்?
கூகுள் பிக்சல் 9ஏ எப்போது அறிமுகமாகும் என்கிற வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் இது விரைவில் (இன்னும் சில தினங்களில்) அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் ஐபோன் 16இ மாடலை விட மலிவான விலைக்கு வரும் என்று கூறப்படுவதால், பிக்சல் 9ஏ மீது எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள் உள்ளன.

இதற்கிடையில் பிக்சல் 10 (Google Pixel 10), பிக்சல் 10 ப்ரோ (Google Pixel 10 Pro) மற்றும் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் (Google Pixel 10 Pro XL) ஆகியவற்றின் சிஏடி ரெண்டர்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளன. லீக் ஆன ரெண்டர்களின்படி, பிக்சல் 10 சீரீஸின் டிசைன் ஆனது பிக்சல் 9 சீஸில் நாம் பார்த்ததை போலவேதான் இருக்கும்.
ஆனால் சுவாரசியமாக பேஸிக் பிக்சல் 10 மாடலில் முதல் முறையாக மூன்றாவது கேமரா லென்ஸ் பேக் செய்யப்படும் என்பதையும் லீக் ஆன ரெண்டர்கள் காட்டுகின்றன. அதாவது பிக்சல் 10 சீரிஸின் மாடலிலேயே வெண்ணிலா மாடலிலேயே ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறும். இந்த தகவல் பிக்சல் 9ஏ மாடலுக்காக காத்திருப்பவர்களை இன்னும் கொஞ்சம் காத்திருந்து பிக்சல் 10 மாடலை வாங்கினால் என்ன என்கிற எண்ணத்திற்குள் தள்ளியுள்ளது.
பிக்சல் 9 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டூயல் சிம் (நானோ+ இசிம்) சப்போர்ட் உடன் வரும் பிக்சல் 9 ஆனது ஆண்ட்ராய்டு 14 உடன் வருகிறது. இது 7 வருட ஓஎஸ் அப்டேட்களை பெறும். இது 60Hz முதல் 120Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 கவர் உடனான 6.3-இன்ச் Actua OLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
இது Titan M2 செக்யூரிட்டி கோப்ராசசருடன் டென்சர் ஜி4 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. கேமராவை பொறுத்தவரை, 50 மெகாபிக்சல் Octa PD வைட்-ஆங்கிள் கேமரா (1/1.31-இன்ச் இமேஜ் சென்சார் சைஸ் மற்றும் 8x சூப்பர் ரெஸ் ஜூம்) என்கிற பிரைமரி கேமரா + 1/2.55-இன்ச் சென்சார் சைஸ் கொண்ட 48 மெகாபிக்சல் குவாட் பிடி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது. முன்பக்கத்தில் ஆட்டோஃபோகஸுடன் 10.5-மெகாபிக்சல் டூயல் பிடி செல்பீ ஷூட்டரை கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் கேமரா யூனிட் ஆனது மேஜிக் ஏரேசர், பெஸ்ட் டேக், போட்டோ அன்ப்ளர் மற்றும் நைட் சைட் உள்ளிட்ட பல ஏஐ அம்சங்களையும் கொண்டுள்ளது. இந்த கேமரா செட்டப்பால் வினாடிக்கு 24/30/60 பிரேம்களில் 4ஏக் வீடியோக்களை பதிவு செய்யவும் முடியும். பேட்டரியை பொறுத்தவரை பிக்சல் 9 ஆனது 45W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 4,700எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. இதற்கான 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜர் தனியாக விற்கப்படும்.
இந்த ஸ்மார்ட்போனில் Qi-சான்றளிக்கப்பட்ட வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. வயர்டு சார்ஜிங் தொழில்நுட்பம் சுமார் 30 நிமிடங்களில் பேட்டரியை பூஜ்ஜியத்தில் இருந்து 55 சதவீதம் வரை நிரப்பும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 24 மணிநேரத்திற்கும் அதிகமான பேட்டரி லைஃப்பை வழங்கும் என்றும் கூறப்படுகிறது.
கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது ஐபி68 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு ரேட்டிங், இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார், பேஸ் அன்லாக், வைஃபை 6, ப்ளூடூத் 5.3, என்எப்சி (NFC), கூகுள் கேஸ்ட் (Google Cast), ஜிபிஎஸ் (GPS), டூயல் பேண்ட் ஜிஎன்எஸ்எஸ் (Dual Band GNSS), பெய்டூ (BeiDou), க்ளோனாஸ் (GLONASS) மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளும் உள்ளன.
பிக்சல் 9 ப்ரோ மற்றும் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே பிக்சல் 9 ஸ்மார்ட்போனில் உள்ள அதே சிம், சாஃப்ட்வேர் மற்றும் சிப்செட் ஆகியவற்றை கொண்டுள்ளன. வேறுபாடுகளை பொறுத்தவரை பிக்சல் 9 ப்ரோ 6.3-இன்ச் Super Actua (LTPO) OLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
மறுகையில் உள்ள பிக்சல் 9 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் ஆனது இருப்பதிலேயே பெரிய 6.8-இன்ச் SuperActua (LTPO) OLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இரண்டுமே ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்டை கொண்டுள்ளன: 50எம்பி Octa PD வைட் கேமரா + 48எம்பி Quad PD அல்ட்ரா வைட் கேமரா + (30எக்ஸ் சூப்பர் ரெஸ் ஜூம் மற்றும் 5எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 48எம்பி Quad PD டெலிபோட்டோ கேமரா.
முன்பக்கத்தில் ஆட்டோஃபோகஸுடன் கூடிய 42எம்பி டூயல் பிடி செல்பீ கேமராவை கொண்டுள்ளன. ப்ரோ மாடல்கள் 30fps வேகத்தில் 8கே வீடியோ ரெக்கார்டிங் செய்ய முடியும். இரண்டுமே IP68 ரேட்டிங்கையும் கொண்டுள்ளன. பேட்டரியை பொறுத்தவரை பிக்சல் 9 ப்ரோ ஆனது 4,700எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது, அதே சமயம் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் ஆனது சற்றே பெரிய 5,060எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது. இரண்டுமே 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் Qi சார்ஜர்கள் மூலம் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கின்றன.


Click it and Unblock the Notifications








