சோனியின் வரலாற்றை மாற்றப்போகும் எக்ஸ்பீரியா அவெஞ்சர் ஜிஎப்எக்ஸ்-ல் சிக்கியது.!

நேற்று ஆரம்பிக்கப்பட்ட ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் கருவிகளில் டூயல் கேமரா அமைப்பு இடம்பெறுகிறது.

|

எச்டிசி நிறுவனம் தான் இரட்டை கேமராக்கள் கொண்ட ஸ்மார்ட்போனை முதன்முதலில் அறிமுகப்படுத்தியது என்றாலும் கூட எச்டிசி நிறுவனத்திடம் இருந்து டூயல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்கள்ளை வெளியாகி பல ஆண்டுகள் ஆகிறது.

மறுபக்கம் நேற்று ஆரம்பிக்கப்பட்ட ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் கருவிகளில் டூயல் கேமரா அமைப்பு இடம்பெறுகிறது.

இந்நிலைப்பாட்டில், உலகம் முழுவதிலும் மிக பிரபலமான சோனி நிறுவனத்தின் ஒரு கருவியில் கூட டூயல் கேம் இடம்பெறவில்லையே என்ற சோனி பிரியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் நோக்கத்தில், சோனி அதன் முதல் இரட்டை கேமரா அமைப்பு கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள விடயம் தற்போது வெளிப்பட்டுள்ளது.

பிரீமியம் மற்றும் இடைப்பட்ட ஸ்மார்ட்போன்.!

பிரீமியம் மற்றும் இடைப்பட்ட ஸ்மார்ட்போன்.!

சமீபத்திய கூகுள் பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்கள் கூட இரட்டை கேமராக்களை கையாளாத நேரத்தில் ஜப்பானிய உற்பத்தியாளரான சோனி பல பிரீமியம் மற்றும் இடைப்பட்ட ஸ்மார்ட்போன்களை வெளியிடப்பட்ட போதிலும் கூட, ஒன்றில் கூட இரட்டை கேமரா அம்சத்தினை திணிக்கவில்லை.

எக்ஸ்பீரியா எச்3213 அவெஞ்சர்.!

எக்ஸ்பீரியா எச்3213 அவெஞ்சர்.!

இருப்பினும் விரைவில் சோனி, டூயல் கேம் அம்சம் மீதான தனது "எண்ணத்தை" மாற்றப்போவதாக தெரிகிறது. மாடல் எண் எக்ஸ்பீரியா எச்3213 அவெஞ்சர் என்ற பெயரின்கீழ் ஒரு புதிய சோனி ஸ்மார்ட்போன் இரட்டை கேமராக்களுடன் ஜிஎப்எக்ஸ்பெஞ்ச் தளத்தில் காணப்பட்டுள்ளது.

முன்பக்கத்தில் இரண்டு கேமரா.!

முன்பக்கத்தில் இரண்டு கேமரா.!

பெரும்பாலான இரட்டை கேமராக்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களை போலின்றி, எக்ஸ்பீரியா அவெஞ்சர் ஆனது அதன் முன்பக்கத்தில் இரண்டு கேமராக்களை கொண்டுள்ளது. இது அரிதாக இருந்தாலும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒப்போ எப்5 போன்ற செல்பீ -மைய நெறிமுறை ஸ்மார்ட்போன்களில் இதே போன்ற அமைப்பை நாம் கண்டிருக்கிறோம்.

16எம்பி + 8எம்பி.!

16எம்பி + 8எம்பி.!

இந்த புதிய சோனி ஸ்மார்ட்போனில் இடம்பெறும் இரட்டை கேமரா அமைப்பானது ஒரு 16எம்பி + 8எம்பி சென்சார்கள் கொண்ட கலவையாக இருக்க வாய்ப்புள்ளது. மேலும் இந்த கேமரா 4கே தரத்தில் வீடியோக்களை பதிவு செய்யும் திறனும் கொண்டிருக்கலாம். மறுபக்கம், அதாவது பின்பக்கம் ஒரு 21எம்பி முதன்மை கேமராவை கொண்டுவருமென ஜிஎப்எக்ஸ் பட்டியல் வெளிப்படுத்துகிறது.

ஸ்னாப்டிராகன் 630 செயலி.!

ஸ்னாப்டிராகன் 630 செயலி.!

எக்ஸ்பீரியா எச்3213 அவெஞ்சர் ஸ்மார்ட்போன் ஆனது சக்தி வாய்ந்த கேமரா அம்சத்துடன் பட்டியலிடப்பட்டுள்ளதால் இதையொரு முதன்மை சாதனமாக கருதி விட வேண்டாம். இயக்கருவி க்வால்காம் நிறுவனத்தின் நடுப்பகுதியில் உள்ள ஸ்னாப்டிராகன் 630 செயலி மூலமே இயக்கப்படுகிறது. இந்த சிப்செட், 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்க சேமிப்புடன் இணைந்துள்ளது.

ஒரு பெரிய 6 அங்குல டிஸ்பிளே.!

ஒரு பெரிய 6 அங்குல டிஸ்பிளே.!

வரவிருக்கும் இந்த கைபேசியின் மற்ற அம்சங்களும் மிகவும் அழகானதாகவே தெரிகிறது. சோனி எக்ஸ்பீரியா எச்3213 அவெஞ்சர் ஆனது 1080பி முழு எச்டி தீர்மானம் கொண்ட ஒரு பெரிய 6 அங்குல டிஸ்பிளே பொருத்தப்பட்டு வரலாம், அதாவது ஒரு 18: 9 டிஸ்பிளேவை சோனியுடம் இருந்து நாம் பார்க்க முடியும்.

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ.!

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ.!

மென்பொருள்துறையை பொறுத்தமட்டில், இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயக்க முறைமையை கொண்டிருக்கலாம். இந்த சோனி எக்ஸ்பீரியா எச்3213 அவெஞ்சர் ஸ்மார்ட்போன் ஆனது 2018-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகப்படுத்தப்படலாமென எதிர்பார்க்கிறோம்.

Best Mobiles in India

English summary
First Sony smartphone featuring dual cameras spotted on GFXBench. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X