பெர்ஃபார்மென்ஸ் பிச்சிக்கும்.. Snapdragon 8 Gen 3 சிப்செட் உடன் இந்தியாவில் அறிமுகமாகும் முதல் போன் இதுதான்!
குவால்காமின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ப்ராசஸரான ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் உடன் இந்தியாவில் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன் எங்களுடையது தானென்று ஒரு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதென்ன நிறுவனம்? என்ன மாடல்? இது வேறு என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:
என்ன நிறுவனம்? என்ன மாடல்? மேற்குறிப்பிட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது விவோ (Vivo) நிறுவனத்தின் துணை பிராண்ட் ஆன ஐக்யூ (iQOO) நிறுவனம் தான். ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3 Chipset) உடன் இந்தியாவில் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன் ஐக்யூ 12 சீரிஸ் (iQOO 12 Series) ஸ்மார்ட்போன்கள் தான்!

ஐக்யூ 12 சீரீஸ் எப்போது அறிமுகமாகும்? சீன மொபைல் நிறுவனமான ஐக்யூவின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களாக ஐக்யூ 12 (iQOO 12) மற்றும் ஐக்யூ 12 ப்ரோ (iQOO 12 Pro) ஆகிய இரண்டும் வருகிற நவம்பர் 7 ஆம் தேதி மாலை 7 மணிக்கு சீனாவில் அறிமுகமாகிறது. சீன அறிமுகத்தை தொடர்ந்து ஐக்யூ 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
ஐக்யூ 12 சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் என்னென்ன எதிர்பார்க்கலாம்? ஐக்யூ 11 சீரீஸ் உடன் ஒப்பிடும் போது ஐக்யூ 12 சீரீஸில் சில பெரிய மேம்பாடுகள் இருக்கும் என்று கூறப்பட்டது. இதற்கிடையில் தான் ஐக்யூ 12 சீரீஸ் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் உடன் இந்தியாவில் அறிமுகமாகும் முதல் போனாக இருக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்களை பொறுத்தவரை, ஐக்யூ 12 மாடலானது 1.5கே ரெசல்யூஷனை (1.5K Resolution) வழங்கும் ஒரு பிளாட் அமோஎல்இடி டிஸ்பிளேவை (Flat AMOLED Display) கொண்டிருக்கும். மறுகையில் உள்ள ஐக்யூ 12 ப்ரோ மாடலானது 2கே ரெசல்யூஷன் (2K Resolution) உடனான கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளேவை (Curved AMOLED Display) கொண்டிருக்கலாம் என்றும், இவ்விரு ஸ்மார்ட்போன்களின் டிஸ்பிளேக்களுமே 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை (144Hz Refresh Rate) ஆதரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
முன்னரே குறிப்பிட்டபடி, இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே 30 சதவிகிதம் மேம்பட்ட செயல்திறன் (Improved performance) மற்றும் 20 சதவிகிதம் அதிக செயல்திறன் (Greater efficiency) கொண்ட புதிய ஸ்னாப்டிராகன்8 ஜென் 3 சிப்செட்டை பேக் செய்யும். பேட்டரியை பொறுத்தவரை, ஐக்யூ 12 ஸ்மார்ட்போன் ஆனது 5000mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில் ப்ரோ வேரியண்ட் ஆனது 5100mAh பேட்டரியை பேக் செய்யலாம். இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே 120வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை (120W Fast Charging Support) கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுதவிர இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே சிறந்த கேமிங் செயல்திறனுக்காக ரே-டிரேசிங் திறன்களை (Ray-tracing capabilities) உள்ளடக்கிய பிரத்யேக டிஸ்பிளே ப்ராசஸரை பெறும் என்றும் கூறப்படுகிறது.
கேமராக்களை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன்கள் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilisation) கொண்ட 50 எம்பி ஓவி50எச் ப்ரைமரி கேமராவை (50-MP OV50H Primary Camera) பெறும் என்று கூறப்படுகிறது. வேறுபாடுகளை பொறுத்தவரை ஐக்யூ 12 ஸ்மார்ட்போனில் டெலிஃபோட்டோ கேமரா (Telephoto Camera) இடம்பெறலாம். அதே நேரத்தில் ஐக்யூ 12 ப்ரோ ஸ்மார்ட்போனில் பெரிஸ்கோபிக் டெலிஃபோட்டோ கேமரா (Periscope Telephoto Camera) இடம்பெறலாம்.

ஐக்யூ 12 சீரீஸ் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? வெண்ணிலா வேரியண்ட் ஆன ஐக்யூ 12 ஸ்மார்ட்போன் ரூ.62,990 க்கும், மறுகையில் உள்ள ப்ரோ வேரியண்ட் ஆன ஐக்யூ 12 ப்ரோ மாடலானது ரூ.69,990 க்கும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications