நம்மள ஏமாத்திட்டாங்க.. CMF Phone 1-ன் விலை ரூ.12,000 இல்லையாம்.. முதல் போனில் இவ்ளோ டிவிஸ்டு கூடாதுப்பா!
நத்திங் (Nothing) நிறுவனத்தின் துணை பிராண்ட் ஆன சிஎம்எஃப், இதுவரையிலாக ஸ்மார்ட்வாட்ச் மற்றும் இயர்பட்ஸ் போன்ற ஆக்சஸெரீஸ்களை மட்டுமே அறிமுகம் செய்துள்ளது. இருப்பினும் இது கூடிய விரைவில் இது தனது முதல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. அது சிஎம்எஃப் போன் 1 ஆகும். இந்த தகவல் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது சிஎம்எஃப் போன் 1 மாடலின் இந்திய விலை நிர்ணயம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. இந்த புதிய விலை நிர்ணயமானது முன்னதாக கூறப்பட்ட பட்ஜெட்-விலை நிர்ணயத்துடன் ஒற்றுபோகவில்லை என்பதால் சிஎம்எஃப் போன் 1-ஐ எதிர்பார்த்தவர்களுக்கு ஆரம்பமே ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
சிஎம்எஃப் போன் 1 என்ன விலைக்கு வரும்? டிப்ஸ்டர் யோகேஷ் பிராரின் சமீபத்திய எக்ஸ் தள பபதிவின்படி, சிஎம்எஃப் போன் 1 (CMF Phone 1) ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் ரீடெயில் பாக்ஸ் எம்ஆர்பி ஆனது ரூ.19,999 ஆகும். இருப்பினும், ஒரு ஸ்மார்ட்போன் அதன் எம்ஆர்பி விலைக்கே விற்பனைக்கு வராது என்பதால், ரீடெயில் பாக்ஸ்-ல் உள்ள விலையை விட சற்று குறைவான விலைக்கு தான் அறிமுகமாகும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் சிஎம்எஃப் போன் 1 ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.18,000 க்கு அறிமுகம் செய்யபட்டு, சில சிறப்பு தள்ளுபடிகளை பெற்று ரூ.17,000 க்கு வாங்க கிடைக்கலாம். இருப்பினும், இது முன்னதாக கூறப்பட்ட விலையை விட மிகவும் அதிகமான விலை நிர்ணயமாகவே இருக்கும்.
முன்னதாக சிஎம்எஃப் போன் 1 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.12,000-ஐ சுற்றிய விலைக்கு அறிமுகமாகும் என்று கூறப்பட்டது. தற்போது இது ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் தான் அறிமுகமாகும் என்பது போல் தெரிகிறது. சிஎம்எஃப் போன் 1 ஸ்மார்ட்போனிற்கான மைக்ரோசைட் ஆனது ஏற்கனவே பிளிப்கார்ட்டில் நேரலையில் உள்ளது. இருப்பினும் அதன்கீழ் சிஎம்எஃப் போன் 1-ன் அம்சங்கள் அல்லது விலை நிர்ணயம் போன்ற எந்த விவரங்களும் இல்லை!
சிஎம்எஃப் போன் 1 என்னென்ன அம்சங்களை பேக் செய்யலாம்? பிளிப்கார்ட் டீஸர் வழியாகவே சிஎம்எஃப் போன் 1 ஆனது முந்தைய நத்திங் போன்களின் முக்கிய அம்சமான க்ளிஃப் லைட்டிங்கை (Glyph Lighting) இழக்கும் என்பதும் வெளிப்படையாக அறிந்துகொள்ள முடிகிறது. அதாவது சிஎம்எஃப் சீரிஸின் முதல் ஸ்மார்ட்போன் நத்திங் போன்களை விட மிகவும் வேறுபட்டதாகவும்.. பட்ஜெட்-விலையில் வருவதால் மிகவும் சிம்பிள் ஆகவும் இருக்கும்.
ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வந்தாலும் கூட சிஎம்எஃப் போன் 1 ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான பெரிய 6.67-இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 சிப்செட் (Mediatek Dimensity 7200 SoC) மூலம் இயக்கப்படுகிறது. அதாவது சிஎம்எஃப் போன் 1 ஆனது 5ஜி நெட்வொர்க்கிற்கான ஆதரவுடன் வரும்.
கேமராக்களை பொறுத்தவரை, முந்தைய நத்திங் ஸ்மார்ட்போன்களை போலவே சிஎம்எஃப் போன் 1-ன் பேக் பேனலில் 50எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப்பை (50MP Dual Rear Camera Setup) பேக் செய்யப்படலாம். மேலும் இது 33W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியையும் கொண்டிருக்லாம். கடைசியாக இது லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 2.5 (Nothing OS 2.5) உடன் அனுப்பப்படலாம்.
சிஎம்எஃப் நிறுவனம் அதன் ஹைலைட்களில் ஒன்றான ஆரஞ்சு கலர் ஆப்ஷனை அதன் முதல் ஸ்மார்ட்போனிலும் திணிக்கலாம். அதாவது சிஎம்எஃப் போன் 1-ல் குறைந்தபட்சம் ஒரு வேரியண்ட்டாவது ப்ரைட் ஆரஞ்சு கலரில் (Bright Orange Colour) அறிமுகமாகும். இந்த ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் வால்யூம்-நாப் போன்ற பிஸிக்கல் கண்ட்ரோல்லர் (Volume knob-like physical controller) ஒன்றையும் காண முடிகிறது. அது செயல்பாட்டு நோக்கத்திற்காக வைக்கப்பட்டுள்ளது அல்லது வெறுமனே அழகியலுக்கானதா என்பது பற்றி எந்த விவரமும் இல்லை.


Click it and Unblock the Notifications








