Home
Mobile

Flipkart-ஐ திணறடிக்கும் ஆர்டர்.. POCO-வின் புது 5G போன்.. நினைச்சத விட ரூ.1000 கம்மி.. ஆனாலும் 16GB ரேம்!

கடந்த வாரம், போக்கோ நிறுவனத்தின் லேட்டஸ்ட் 5ஜி மாடலாக இந்தியாவில் அறிமிகம் செய்யப்பட்ட போக்கோ எம்6 பிளஸ் 5ஜி (Poco M6 Plus 5G) ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று (ஆகஸ்ட் 5 ஆம் தேதி) முதல் தொடங்குகிறது. எதிர்பார்த்ததை விட ரூ.1000 மலிவான விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், பிளிப்கார்ட் வழியாக இன்று தொடங்கும் விற்பனை அமோகமாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போக்கோ எம்6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் என்ன? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, போக்கோ எம்6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 ஏஇ (ஆக்ஸலரேடட் எடிஷன்) சிப்செட், 8ஜிபி வரையிலான ரேம், டூயல் கிளாஸ் டிசைன், தூசி மற்றும் ஸ்பிளாஷ் எதிர்ப்பிற்கான ஐபி53 ரேட்டிங், 108 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா செட்டப், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன், 6.79-இன்ச் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே போன்றவைகளை கொண்டுள்ளது.

Flipkart-ஐ திணறடிக்கும் ஆர்டர்.. POCO-வின் புது 5G போன்!

விரிவான அம்சங்களை பொறுத்தவரை, போக்கோ எம்6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன், 2,400 x 1,080 பிக்சல்ஸ் உடனான 6.79-இன்ச் FHD+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 ஏஇ சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இது 8ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக விர்ச்சுவல் ரேம் அம்சம் வழியாக மேலும் 8 ஜிபி ரேம் என இந்த ஸ்மார்ட்போனின் மொத்த ரேம்-ஐ 16ஜிபி வரை அதிகரிக்கவும் முடியும். இது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் உடன் அனுப்பப்படுகிறது. போக்கோ நிறுவனத்தின் கூற்றுப்படி, இது இரண்டு ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் நான்கு வருட செக்யூரிட்டி அப்டேட்களை பெறும்.

கேமராக்களை பொறுத்தவரை, போக்கோ எம்6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது டூயல் ரியர் கேமரா யூனிட்டை கொண்டுள்ளது. அதில் 108-மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் (3எக்ஸ் இன்-சென்சார் ஜூம் ஆதரவு) மற்றும் 2-மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் உள்ளன. செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கு, முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை, போக்கோ எம்6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,030mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை இது 5ஜி, 4ஜி LTE, டூயல்-பேண்ட் வைஃபை மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட்டை ஆதரிக்கிறது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார், தூசி மற்றும் ஸ்பிளாஷ் எதிர்ப்பிற்கான ஐபி53 மதிப்பீட்டையும் கொண்டுள்ளது.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, போக்கோ எம்6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.13,499 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி இது எதிர்பார்க்கப்பட்ட விலையை விட ரூ.1000 குறைவாகும். முன்னதாக இது ரூ.14,999 க்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

போக்கோ எம்6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனிலும் வாங்க கிடைக்கும். இதன் விலை நிர்ணயம் ரூ.14,499 ஆகும். இவ்விரு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுமே இன்று (ஆகஸ்ட் 5 ஆம் தேதி) இந்திய நேரப்படி மதியம் 12 மணி முதல் பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வரும். இது கிராஃபைட் பிளாக், ஐஸ் சில்வர் மற்றும் மிஸ்டி லாவெண்டர் ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
First Sale Starting Today Aug 5 12PM Poco M6 Plus 5G Price in India Specifications All Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X