ஆபர் விலையில் விற்பனையை ஆரம்பித்த CMF Phone 1.. நம்பி வாங்க 5 காரணங்கள்.. வாங்காமல் தவிர்க்க 4 காரணங்கள்!
சிஎம்எப் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் ஆன சிஎம்எப் போன் 1 (CMF Phone 1) மாடலின் இந்திய விற்பனை இன்று (ஜூலை 12) முதல் தொடங்குகிறது. இன்டர்சேஞ்சபிள் பேக் கவர் (Interchangeable Back Cover) மற்றும் தனித்துவமான டிசனுடன் உடன் வரும் இந்த சிஎம்எப் ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் என்ன? அறிமுக சலுகைகள் ஏதேனும் அறிவிக்கப்பட்டுள்ளதா? டிசைனை தவிர்த்து இந்த ஸ்மார்ட்போன் வேறு என்னென்ன முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது? இதை நம்பி வாங்கலாமா? இதோ விவரங்கள்:
என்ன விலை? இந்தியாவில் சிஎம்எப் போன் 1 ஸ்மார்ட்போன் ஆனது 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஆப்ஷன் ரூ.15,999 க்கும், 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.17,999 க்கும் வாங்க கிடைக்கும்.

அறிமுக சலுகைகள் ஏதேனும் உண்டா? நிச்சயமாக உண்டு! வங்கி சலுகைகளின் கீழ் சிஎம்எப் போன் 1-ன் பேஸிக் 6ஜிபி ரேம் ஆப்ஷன் ரூ.15,999 க்கு பதிலாக ரூ.14,999 க்கும், இதேபோல 8ஜிபி ரேம் ஆப்ஷன் ரூ.17,999 க்கு பதிலாக ரூ.16,999 க்கும் வாங்க கிடைக்கும்.
சிஎம்எப் ஸ்மார்ட்போன் ஆனது பல்வேறு அக்ஸசெரீஸ்களுடன் வருகிறது. சிஎம்எப் போன் 1-க்கான கேஸ் ரூ.1,499 க்கும், ஸ்டாண்ட் ரூ.799 க்கும், லேன்யார்ட் கேபிளுடன் சேர்த்து ரூ.799 க்கும், கார்டு கேஸ் ரூ.799 க்கும் வாங்க கிடைக்கும். இன்னொரு விஷயம் சிஎம்எப் போன் 1 ரீடெயில் பாக்ஸில் சார்ஜர் இடம்பெறாது. இந்நிறுவனத்தின் 33W சார்ஜரை வாங்க விரும்பினால் ரூ.1299 பணம் செலுத்தி தனியாகத்தான் அதை வாங்க வேண்டும்.
சிஎம்எப் போன் 1 ஸ்மார்ட்போன் ஆனது பிளாக், ப்ளூ, லைட் க்ரீன் மற்றும் ஆரஞ்சு என்கிற 4 கலர் ஆப்ஷன்களில் ஜூலை 12 ஆம் தேதி மதியம் 12 மணி முதல், பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் சிஎம்எப் இந்தியா இணையதளம் (CMF India Website) வழியாக வாங்க கிடைக்கும்.
நம்பி வாங்கலாமா? 5 முக்கியமான காரணங்களை முன்வைத்து, இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். முதலாவதாக இது கஸ்டமைபிலிட்டி, பழுதுபார்த்தல் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றை மையமாக கொண்ட மிகவும் தனித்துவமான வடிவமைப்பை கொண்டுள்ளது. இரண்டாவதாக இது எச்டிஆர் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான பிரகாசமான ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது
மூன்றாவதாக இது பட்ஜெட் விலையில் வந்தாலும் இது சிறந்த பேட்டரி லைஃப்பை (33W பாஸ்ட் சார்ஜிங் உடனான 5000எம்ஏஎச் பேட்டரி) வழங்குகிறது. நான்காவதாக இது ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் மிகவும் நியாயமான சிப்செட்டை (ஆக்டாகோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 5ஜி) பேக் செய்கிறது. ஐந்தாவதாக இது உறுதியான கேமரா இமேஜ் குவாலிட்டியை வழங்குகிறது; இது இஐஎஸ் ஆதரவு உடனான 50எம்பி மெயின் கேமராவை கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனை வாங்காமல் தவிர்ப்பதற்கான சில நியாயமான காரணங்களும் எங்களிடம் உள்ளன. முன்னரே குறிப்பிட்டபடி இதன் ரீடெயில் பாக்ஸில் சார்ஜர் இருக்காது. மேலும் இது மிகவும் சாதாரணமான ஐபி52 ரேட்டிங்கையே கொண்டுள்ளது. கூடவே இதில் மிகவும் சுமாரான சிங்கிள் லவுட் ஸ்பீக்கர் மட்டுமே உள்ளது. கடைசியாக இதன் கேமராவில் இஐஎஸ் ஆதரவு இருந்தாலும் ஓஐஎஸ் ஆதரவு இல்லை.
சிஎம்எப் போன் 1 உடன் சேர்ந்து அறிமுகமான சிஎம்எப் பட்ஸ் ப்ரோ 2 (CMF Buds Pro 2) மற்றும் சிஎம்எப் வாட்ச் ப்ரோ 2 (CMF Watch Pro 2) ஆகியவைகளும் கூட இன்று (ஜூலை 12) முதல் விற்பனைக்கு வந்துள்ளன. சிஎம்எப் பட்ஸ் ப்ரோ 2 இயர்பட்ஸ் ஆனது ரூ.4299 க்கும், சிஎம்எப் வாட்ச் ப்ரோ 2 ஸ்மார்ட் வாட்ச் ஆனது ரூ.4,999 க்கும் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








