Home
Mobile

ஆளுக்கு 1 ஆர்டர்.. ஜூன் 14 வரை டிஸ்கவுண்ட்.. வெறும் ரூ.8000-க்கு Air Gesture, ஐபி54 ரேட்டிங், மினி கேப்சூல்!

பல விலைப்பிரிவுகளின் கீழ் பல எண்ணிகையிலான புதிய போன்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி வரும் நிறுவனம் எது என்று கேட்டால்.. 10 க்கு 4 பேராவது ரியல்மி (Realme) என்கிற சரியான பதிலை கூறுவார்கள். அந்த அளவிற்கு தொடர்ச்சியான முறையில்.. ஒன்றன் பின் ஒன்றாக.. புதிய ரியல்மி ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி கொண்டே வருகின்றன. இந்த வரிசையில் மிகவும் சமீபத்தில் அறிமுகமான ஸ்மார்ட்போன் தான் ரியல்மி நார்சோ என்63 (Realme Narzo N63) மாடல். தற்ப்போது இது அட்டகாசமான ஆபர் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது!

பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாக இருந்தாலும் கூட இது நல்ல டிசைன் மற்றும் விலையை மீறிய புதிய அம்சங்களுடன் வருகிறது. இது நம்பகமான போனை தேடும் ஆனால் அதற்காக அதிக செலவு செய்ய விரும்பாத வாடிக்கையாளர்கள் ரியல்மி நார்சோ என்63 ஸ்மார்ட்போனை - கண்களை மூடிக்கொண்டு வாங்கலாம்! இந்த ஸ்மார்ட்போனை விலை, அம்சங்கள், விற்பனை குறித்த விவரங்கள் இதோ:

ஜூன் 14 வரை டிஸ்கவுண்ட்.. வெறும் ரூ.8000-க்கு Realme Narzo N63!

என்ன விலை? இந்தியாவில் ரியல்மி நார்சோ என்63 ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஆப்ஷன் ரூ8,499 க்கும், 4ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.8,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ரியல்மி வலைத்தளம் (realme Website) வழியாக கிடைக்கும் ரூ.500 தள்ளுபடி கூப்பனை (Discount Coupon) பயன்படுத்தினால், பேஸிக் 4ஜிபி + 64ஜிபி ஆப்ஷனை ரூ. 7,999 க்கும் மற்றும் 4ஜிபி + 128ஜிபி ஆப்ஷனை ரூ.8,499 க்கும் வாங்கலாம்.

ரியல்மி நார்சோ என்63 ஸ்மார்ட்போன் ஆனது லெதர் ப்ளூ மற்றும் ட்விலைட் பர்பில் (Leather Blue and Twilight Purple) என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் அமேசான் இந்தியா (Amazon India) மற்றும் ரியல்மி இந்தியா (Realme India) இணையதளம் வழியாக வாங்குவதற்கு கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை (First Sale) 4 நாட்களுக்கு நடக்கவுள்ளது. அதாவது ஜூன் 10 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்கி ஜூன் 14 ஆம் தேதி வரை நீடிக்கும்.

என்னென்ன அம்சங்கள்? ரியல்மி நார்சோ என்63 ஸ்மார்ட்போன் ஆனது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz Refresh Rate), 180ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் (Touch Sampling Rate) மற்றும் 450 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (Peak Brightness) மற்றும் 1,600 x 720 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் உடனான 6.74-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவை (HD+ IPS LCD) கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் மாலி-ஜி57 ஜிபியு ( Mali-G57 GPU), 4ஜிபி எல்பிடிடிஆர்4எக்ஸ் ரேம் (4GB LPDDR4X RAM) மற்றும் 128ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடனான யுனிசோக் டி612 சிப்செட் (Unisoc T612 SoC) மூலம் இயக்கப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை, ரியல்மி நார்சோ என்63 ஸ்மார்ட்போனில் 50-மெகாபிக்சல் ஏஐ ஆதரவு கொண்ட பிரைமரி கேமரா சென்சார் (50MP AI Primary Camera) உள்ளது. முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பீ சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.

ரியல்மி நார்சோ என்63 ஸ்மார்ட்போன் ஆனது ஏர் கெஸ்டர், டைனமிக் பட்டன் மற்றும் மினி கேப்சூல் 2.0 (Air Gesture, Dynamic Button, and Mini Capsule 2.0) போன்ற சாஃப்ட்வேர் அம்சங்களையும் ஆதரிக்கிறது. பேட்டரியை பொறுத்தவரை ரியல்மி நார்சோ என்63 ஸ்மார்ட்போன் ஆனது 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது.

கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது 4ஜி VoLTE, வைஃபை, ப்ளூடூத் 5,0, ஜிபிஎஸ், க்ளோனாஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை ஆதரிக்கிறது. மேலும் இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜாக்கையும் கொண்டுள்ளது. கடைசியாக இது தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங்கையும் (P54 Rating for dust and splash resistance) பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
First Sale For 4 Days Realme Narzo N63 Now Available to Buy Under Discount Price Till June 14
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X