Home
Mobile

Redmi சாய்ச்சு புட்டான்.. 10000mAh பேட்டரி, 7-இன்ச் டிஸ்பிளே, 200MP கேமரா உடன் புது போன்.. எந்த மாடல்?

ரெட்மி (Redmi) நிறுவனம் தனது அடுத்த நோட் சீரீஸ்-க்கு நோட் 16 பிராண்டிங்கை (Note 16 Series) தவிர்க்கக்கூடும் என்று சமீபத்திய அறிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளன. இதன் விளைவாக அடுத்த மாடல்கள் நோட் 17 சீரீஸின் (Note 17 Series) கீழ் அறிமுகம் செய்யப்படலாம்.

இந்த சீரீஸின் கீழ் ரெட்மி நோட் 17 (Redmi Note 17), ரெட்மி நோட் 17 ப்ரோ (Redmi Note 17 Pro) மற்றும் ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் (Redmi Note 17 Pro Max) போன்ற பல மாடல்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Redmi சாய்ச்சு புட்டான்.. 10000mAh பேட்டரி, 7-இன்ச் டிஸ்பிளே, 200MP!

குறிப்பாக, ப்ரோ மேக்ஸ் வேரியண்ட் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்து வருகிறது, ஏனெனில் இது ஒரு ரெட்மி ஸ்மார்ட்போனில் இதுவரை இல்லாத மிகப்பெரிய பேட்டரியை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்த ஸ்மார்ட்போனின் கேமராக்கள் மற்றும் சிப்செட் பற்றிய புதிய விவரங்களும் வெளியாகியுள்ளது.

ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறலாம்? இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமென்சிட்டி 7500 சிப்செட் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை, ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனானது 200 மெகாபிக்சல் சாம்சங் HP5 ப்ரைமரி கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் ஆம்னிவிஷன் OV8F10 அல்ட்ரா-வைட் சென்சார் ஆகியவற்றை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

அதாவது இந்த சீரீஸில் ஒரு உயர்நிலை மாடலாக நிலைநிறுத்தப்பட்டு இருந்தாலும், இந்த ஸ்மார்ட்போனில் டெலிஃபோட்டோ கேமரா இடம்பெறாமல் இருக்கலாம். செல்பீக்களுக்காக, இதில் 32 மெகாபிக்சல் சாம்சங் S5KKDS செல்பீ கேமரா இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

10,000mAh பேட்டரியை கொண்டிருப்பதால், ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ், சியோமியின் இதுவரை இல்லாத மிகப்பெரிய பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனாக மாறக்கூடும். ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்குவதற்காக, இந்த போனின் உலகளாவிய பதிப்பில் சற்று சிறிய 9,210mAh பேட்டரி இடம்பெறலாம். இந்த ஸ்மார்ட்போன் 100W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ், ஒரு பிளாட் ஆன வடிவமைப்புடன் கூடிய ஒரு பெரிய 7-இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று சமீபத்திய அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்போனின் மற்ற ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. அறிமுகத்தை பொறுத்தவரை இது 2026 ஆம் ஆண்டு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை குறித்த விவரங்கள் இல்லை.

முன்னதாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.37,999 முதல் தொடங்குகிறது. இது பேஸிக் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ஆகும். இது காஃபி மோச்சா, மிராஜ் ப்ளூ மற்றும் கார்பன் பிளாக் ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது. அடுத்ததாக உள்ள ரெட்மி நோட் 15 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.29,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
First Redmi Phone With 10000mAh Battery Redmi Note 17 Pro Max Chipset Camera Details leaked
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X