Home
Mobile

அக்.23 குறிச்சாச்சு.. 7560mAh பேட்டரி + பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா உடன் வரும் முதல் Redmi போன்!

6000mAh க்கும் அதிகமான பேட்டரி கெப்பாசிட்டி கொண்ட ஸ்மார்ட்போன்கள் செம்ம டிமாண்ட் ஆகிறது. அதை நன்றாக புரிந்துகொண்ட ரெட்மி நிறுவனம் "இன்னும் ஒருபடி மேலே சென்று" 7560mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனை வருகிற அக்டோபர் 23 ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது.

ஆக இதுதான் 7560mAh என்கிற மிகப்பெரிய பேட்டரி உடன் அறிமுகமாகும் முதல் ரெட்மி ஸ்மார்ட்போனாகும். இது ரெட்மி கே90 ப்ரோ மேக்ஸ் (Redmi K90 Pro Max) ஸ்மார்ட்போனாகும். இது ரெட்மி கே90 சீரீஸின் கீழ் அறிமுகமாகும் புதிய "ப்ரோ மேக்ஸ்" மாடல் ஆகும்.

அக்.23 குறிச்சாச்சு.. 7560mAh பேட்டரி உடன் வரும் முதல் Redmi போன்!

அக்.23 அன்று சீனாவில் ரெட்மி கே90 ப்ரோ மேக்ஸ் ஆக அறிமுகமாகும் இந்த ஸ்மார்ட்போன் இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில் போக்கோ எப்8 அல்ட்ரா (Poco F8 Ultra) என்கிற பெயரின் கீழ் ரீபிராண்டிங் செய்யப்படும் என்றும், அதாவது அதே அம்சங்களுடன் போக்கோ ஸ்மார்ட்போனாக அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மி பிராண்டால் வெளியிடப்பட்ட டீஸர்கள், இது ஷாவ்மீ நிறுவனத்தின் மிகவும் பிரீமியம் ஸ்மார்ட்போன் ஆன ஷாவ்மீ 17 ப்ரோ மேக்ஸ் (Xiaomi 17 Pro Max) மாடலில் உள்ள அதே டிஸ்பிளே மற்றும் ப்ரைமரி கேமராவை கொண்டிருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

மிகப்பெரிய பேட்டரி மட்டுமின்றி மேலும் ரெட்மி கே90 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவை கொண்ட நிறுவனத்தின் முதல் ரெட்மி போனாகவும் இருக்கும். நினைவூட்டும் வண்ணம் இதற்கு முன், இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமான ரெட்மி டர்போ 4 ப்ரோ ஸ்மார்ட்போன் 7550mAh பேட்டரியை கொண்டிருந்தது. ஆனால் ரெட்மி கே90 ப்ரோ மேக்ஸில் மிகப்பெரிய 7,560mAh பேட்டரி இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது

மேலும் ரெட்மி கே90 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது 100W வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கையும் ஆதரிக்கும். கூடவே இது 100W பிபிஎஸ் சார்ஜிங் நெறிமுறை (PPS charging protocol) மற்றும் 22.5W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கையும் (Reverse wireless charging.) ஆதரிக்கும்.

டிஸ்பிளேவை பொறுத்தவரை ரெட்மி கே90 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது 2கே ரெசல்யூஷன் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.9-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 16 (Android 16) அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் 3.0 ஓஎஸ் (HyperOS 3.0 OS) வரும்.

சிப்செட்டை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) கொண்டு இயங்கும் மற்றும் கிராபிக்ஸ் செயல்திறனுக்காக டி2 சிப்பை நம்பியிருக்கும். தற்போது வரை இந்த ஸ்மார்ட்போனின் கேமரா செட்டப் குறித்து எந்த விவரங்களும் இல்லை. ஆனாலும் இதன் ரியர் கேமரா அமைப்பில் ஓஐஎஸ் (OIS) ஆதரவுடன் 50 மெகாபிக்சல் ஆம்னிவிஷன் லைட் பியூஷன் 950 ப்ரைமரி கேமரா இடம்பெறலாம்.

இதோடு 5எக்ஸ் ஆப்டிகல் ஜூம் மற்றும் ஓஐஎஸ் உடன் 50 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் அல்ட்ரா-வைட் கேமரா ஆகியவைகள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரெட்மி கே90 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா செட்டப்பில் போஸ்-பவர்டு ஸ்பீக்கர் யூனிட் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் IP68 / IP69 ரேட்டிங்கின் கீழ் தூசி மற்றும் நீர் எதிர்ப்பையும் வழங்கும்.

என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? ரித்மி கே90 ப்ரோ மேக்ஸ் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.89,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னரே குறிப்பிட்டபடி இது இந்தியாவில் போக்கோ எப்8 அல்ட்ரா என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்படலாம். ப்ரோ மேக்ஸ் உடன் அறிமுகமாகும் ரெட்மி கே90 ப்ரோ மாடல் ஆனது போக்கோ எப்8 ப்ரோ என்கிற பெயரின் கீழ் உலகளாவிய அறிமுகத்தை காணலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
First Redmi Phone to Pack 7650mAh Battery Redmi K90 Pro Max Launching on October 23
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X