கெத்து காட்டும் கம்பெனிகளின் வயிற்றில் புளி.. அல்ட்ரா கிளியர் 200MP கேமராவுடன் புதிய Redmi போன்.. என்ன மாடல்?
"எங்கள் ஸ்மார்ட்போன் தான் மார்க்கெட்டில் வாங்க கிடைக்கும் பெஸ்ட் கேமரா போன்!" என்று கொக்கரிக்கும் மொபைல் பிராண்டுகளின் வயிற்றில் புளியை கரைக்கும் படியாக, சீன நிறுவனமான ரெட்மி தரமான வேலையொன்றை பார்த்துள்ளது. ரெட்மியின் 3 புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகத்திற்கு தயாராக உள்ளன!
அது ரெட்மி நோட் 13 சீரிஸ் ஆகும். இதன்கீழ் ரெட்மி நோட் 13 (Redmi Note 13), ரெட்மி நோட் 13 ப்ரோ (Redmi Note 13 Pro) மற்றும் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் (Redmi Note 13 Pro Plus) என மொத்தம் 3 மாடல்கள் அறிமுகமாகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், ரெட்மி பகிர்ந்துள்ள ஒரு புதிய போஸ்டர் ஆனது ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்களை வெளிப்படுத்துகிறது. கூடவே நோட் 13 சீரிஸ் ஆனது ரெட்மி, சாம்சங் (Samsung) மற்றும் மீடியாடெக் (MediaTek) ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக இருக்கும் என்பதையும் அந்த போஸ்டர் வெளிப்படுத்துகிறது.
வெளியான போஸ்டரின் படி, ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் மாடலில் பயன்படுத்தப்படும் மெயின் கேமராவானது 200-மெகாபிக்சல் சாம்சங் ஐசோசெல் எச்பி3 டிஸ்கவரி எடிஷன் கேமரா சென்சாரின் (200MP Samsung ISOCELL HP3 Discovery Edition Camera Sensor) கஸ்டம் வெர்ஷனாக (Custom Version) இருக்கும், இது 1/1.4-இன்ச் சென்சார் அளவை (1/1.4-inch sensor size) கொண்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஆகமொத்தம் இது தொழில்துறையிலேயே வேகமான 200 மெகாபிக்சல் அல்ட்ரா-க்ளியர் கேமராவாக (Fastest 200 megapixel ultra clear camera) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுவாரசியமான விஷயம் என்னவென்றால், முந்தையை நோட் சீரீஸ்களை போலவே இதுவும் மிட்-ரேன்ஜ் விலைக்கே வெளியாகும். ஆக ரெட்மி நிறுவனம் மலிவான விலைக்கு தரமான இமேஜிங் திறன்களை (Imaging capabilities) வழங்கும் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது.
வரவிருக்கும் ரெட்மி நோட் 13 சீரிஸ் ஆனது ரெட்மி மொபைல்களின் புகைப்பட தரத்தில் கணிசமான முன்னேற்றத்தை கொண்டுவருவதோடு சேர்த்து ஒட்டுமொத்த கேமரா ஸ்மார்ட்போன் பிரிவிற்குமான ஒரு முக்கிய மேம்பாடாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது மற்ற நிறுவனங்கள் பின்பற்றும் படியான கேமரா அப்கிரேட்களை (Camera Upgardes) இது கொண்டுவரலாம்.
இந்த அளவிலான மேம்பாடுகளை அடைய ரெட்மி நிறுவனம் மீடியாடெக் நிறுவனத்துடன் நெருக்கமாக பணியாற்றி, அடிப்படை இமேஜிங் கட்டமைப்பை மறுசீரமைக்கவும் (Foundational Imaging Architecture) மற்றும் மென்பொருள் மற்றும் வன்பொருள் திறன்களை மேம்படுத்தும் (Enhance both Software and Hardware Capabilities) முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
மேலும், ஷாவ்மீயின் இமேஜிங் தொழில்நுட்பங்களான "பயோனிக் பெர்செப்சன்" (Bionic Perception) மற்றும் "ஃப்யூஷன் ஆப்டிக்ஸ்" (Fusion Optics) மாட்யூல்கள் போன்றவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம், நோட் 13 சீரீஸ் ஆனது ஒரு சிறந்த புகைப்பட அனுபவத்தை வழங்க தயாராக உள்ளது.
200எம்பி மெயின் கேமராவுடன் சேர்த்து ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் மாடலனது புதிதாக அறிவிக்கப்பட்ட 4 என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 அல்ட்ரா (4nm MediaTek Dimensity 7200 Ultra) உடனே முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்பதையும் வெளியான போஸ்டர் உறுதிப்படுத்துகிறது.
கிடைக்கப்பெற்ற அறிக்கைகளின்படி, டி7200யு ஆனது 8-கோர் சிபியு கட்டமைப்பை (D7200U has an eight-core CPU architecture) கொண்டுள்ளது, இதில் 6 x கார்டெக்ஸ்-ஏ510 கோர்களுடன் 2.8 ஜிகாஹெர்ட்ஸ் களாக்டு ஸ்பீடில் இயங்கும் 2 எக்ஸ் கார்டெக்ஸ்-ஏ715 கோர்கள் உள்ளன. கூடுதலாக, இது ஆர்ம் மாலி-ஜி610 ஜிபியு (Arm Mali-G610 GPU) மற்றும் ஆற்றல் திறன் கொண்ட ஏஐ ப்ராசஸர் ஏபியு 650 ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது.
ரெட்மி நோட் 13 சீரீஸ் ஆனது கூடிய விரைவில்.. இன்னும் குறிப்பிட்டு சொல்லப்போனால் இந்த மாதமே அறிமுகமாகும். வழக்கம் போல இது முதலில் சீன சந்தையில் அறிமுகமாகும், அதை தொடர்ந்தே இந்திய சந்தையில் அறிமுகமாகும். நினைவூட்டும் வன்ணம் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.32,999 க்கு வாங்க கிடைக்கிறது.
Photo Courtesy: @Safi_sofi_ X Account


Click it and Unblock the Notifications