Home
Mobile

வித்தியாசமான AI Active Halo லைட்டிங்.. அநியாயத்துக்குனு ஸ்லிம் டிசைன்.. அதுவும் பட்ஜெட் விலையில்.. என்ன மாடல்?

இந்தியாவிலேயே முதல் முறையாக, ஏஐ ஆக்டிவ் ஹாலோ லைட்டிங் (AI Active Halo Lighting) என்கிற அம்சத்துடன் ஒரு புதிய ஸ்மார்ட்போன், மார்ச் 18 ஆம் தேதியன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதென்ன மாடல்? என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? நாம் இங்கே பேசுவது இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி சீரிஸ் (Infinix Note 40 5G Series) ஸ்மார்ட்போன்களை பற்றித்தான். இது மார்ச் 18 அன்று உலகளவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த சீரிஸின் கீழ் மொத்தம் எத்தனை மாடல்கள் அறிமுகமாகும் என்பது இன்னும் "அதிகாரப்பூர்வமாக" உறுதிப்படுத்தப்படவில்லை.

வித்தியாசமான AI Active Halo லைட்டிங்.. பட்ஜெட் விலை.. என்ன மாடல்?

இருப்பினும் இந்த சீரீஸின் கீழ் மொத்தம் 4 மாடல்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது: பேஸிக் இன்பினிக்ஸ் நோட் 40 (Infinix Note 40), நோட் 40 ப்ரோ 4ஜி (Note 40 Pro 4G), நோட் 40 ப்ரோ 5ஜி (Note 40 Pro 5G) மற்றும் டாப்-ஆஃப்-தி-லைன் நோட் 40 ப்ரோ பிளஸ் 5ஜி (Note 40 Pro Plus 5G).

இன்பினிக்ஸ் நோட் 40 சீரீஸின் ஹைலைட்டே.. இதில் இடம்பெறும் ஏஐ ஆக்டிவ் ஹாலோ லைட்டிங் என்கிற அம்சம் தான். முன்னரே குறிப்பிட்டிப்படி, இந்த அம்சத்துடன் இந்தியாவில் அறிமுகம் முதல் ஸ்மார்ட்போன் இதுவே ஆகும். ஆக்டிவ் ஹாலோ என்பது ஒரு ஏஐ ஆதரவு கொண்ட ஒரு அம்சமாகும்.

வித்தியாசமான AI Active Halo லைட்டிங்.. பட்ஜெட் விலை.. என்ன மாடல்?

இன்பினிக்ஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி, இது வாய்ஸ் கமாண்ட்டுகள் மற்றும் பிற செயல்பாடுகளை லைட்டிங் எபெக்ட்களுடன் ஒருங்கிணைக்கும். கூடவே இன்கம்மிங் கால்கள், நோட்டிபிகேஷன்கள், சார்ஜிங், கேமிங், மியூசிக் பிளேபேக் ஆகியவற்றை மேட்ச் செய்யவும், 'ஹாய் ஃபோலாக்ஸ்' வாய்ஸ் அசிஸ்டென்ட் உடன் தொடர்பு கொள்ளவும் இதை பயன்படுத்தலாம்.

மேலும் "ஹாய் ஃபோலாக்ஸ்" என்று கூறுவதன் மூலம் 'ஆக்டிவ் ஹாலோ' காமாண்டை பயன்படுத்தி அதன் செயல்பாட்டை கஸ்டமைஸும் செய்யலாம். 'ஆக்டிவ் ஹாலோ' அம்சமானது மூன்று கஸ்டமைஸ்டு லைட் எபெக்ட் களை கொண்டுள்ளது - லைவ்லி, ரிதம்மிக் மற்றும் ஏஐ.

வித்தியாசமான AI Active Halo லைட்டிங்.. பட்ஜெட் விலை.. என்ன மாடல்?

பயனர்கள் தங்கள் மனநிலை மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப இவைகளில் ஒன்றை பயன்படுத்தலாம். இது சில நோட்டிபிகேஷன்களுக்கு ஒரு உயிரோட்டமான அனிமேஷனாகவும், மியூசிக் பிளேபேக்கிற்கான ரிதம் டிஸ்பிளேவாகவும் அல்லது இன்கம்மிங் கால்களைகுறிக்க பல்வேறு வடிவங்களாகவும் கஸ்டமைஸ் செய்யலாம்.

இன்பினிக்ஸ் நோட் 40 சீரிஸின் மற்ற அம்சங்களை பொறுத்தவரை.. யூட்யூப்பில் வெளியான அதிகாரப்பூர்வ டீஸரில், பளபளக்கும் கோல்டன் ஃபினிஷ் மற்றும் ரெக்டாங்குலர் ரியர் கேமரா யூனிட்டை பார்க்க முடிகிறது. மேலும் இதில் 3டி கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளேக்களும் இடம்பெறலாம்.முந்தைய 30 சீரிஸை போலவே இதுவும் மிகவும் ஸ்லிம் ஆன டிசைனை பெறும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம்.

எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை.. இன்பினிக்ஸ் நோட் 40 மாடலானது ரூ.15,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ மற்றும் இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ பிளஸ் மாடல்கள் ஆனது ரூ.25,000 முதல் ரூ.30,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்.

அடுத்த வாரம் இந்திய சந்தையில் ரியல்மி நார்சோ சீரின் கீழ் நார்சோ 70 ப்ரோ 5ஜி (Realme Narzo 70 Pro 5G) மாடலும் அறிமுகமாக உள்ளது. இது மார்ச் 19 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி 12 சீரீஸில் நாம் பார்த்த அதே வடிவமைப்பை கொண்டிருக்கும். இருப்பினும், இது லெதர் / பிளாஸ்டிக் பினிஷிற்கு பதிலாக ஒரு கிளாஸ் டிசைனை கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சமாக அதன் 50எம்பி சோனி IMX890 மெயின் கேமரா இருக்கும்.

கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இதில் 120ஹெர்ட்ஸ் அமோஎல்இடி டிஸ்ப்ளே, ரெயின்வாட்டர் ஸ்மார்ட் டச் (Rain Water Smart Touch), ஏர் கெஸ்டர் (Air Gesture), டைமென்சிட்டி 7050 சிப்செட், 5,000mAh பேட்டரி மற்றும் 67W வயர்டு சார்ஜிங் சப்போர்ட் போன்றவைகளும் இடம்பெறும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
First Phone with AI Active Halo Lighting in India Infinix Note 40 Pro Plus 5G Launching on March 18
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X