வந்தாச்சு! OnePlus போன்களின் வில்லனை இறக்கிவிட்ட Realme.. வெயிட்டான அம்சங்கள், நம்பமுடியாத விலை!
ஒன்பிளஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களான ஒன்பிளஸ் 11 (OnePlus 11) மற்றும் ஒன்பிளஸ் 11ஆர் (OnePlus 11R) ஆகிய இரண்டிற்குமே வேட்டு வைக்கும் விலை மற்றும் அம்சங்களுடன் ரியல்மி நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனாக ரியல்மி ஜிடி3 (Realme GT3) அறிமுகமாகி உள்ளது.
ரியல்மியின் இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனானது, 144Hz ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவுடனான 6.7-இன்ச் 1.5K பிளாட் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2160Hz அல்ட்ரா-ஹை ப்ரெக்வென்சி PWM டிம்மிங், 1400 நிட்ஸ் வரையிலான பிரைட்னஸ் போன்ற அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

Realme GT3 - ப்ராசஸர், கேமிங் அம்சங்கள்
ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 ப்ராசஸர் மூலம் இயக்கப்படும் ரியல்மி ஜிடி3 ஸ்மார்ட்போனில் 16ஜிபி வரையிலான ரேம் மற்றும் 1டிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் கிடைக்கும். மேலும் இதில் 6580மிமீ² கூலிங் ஏரியா, 4500 மிமீ² 3டி விசி கூலிங், 1500Hz கேமிங் கன்ட்ரோல் எஞ்சின், ஆண்டெனா மேட்ரிக்ஸ் சிஸ்டம் 2.0 போன்ற கேமிங் அம்சங்களும் உள்ளன.
Realme GT3 - கேமராக்கள்
கேமராக்களை பொறுத்தவரை இதில் ஓஐஎஸ் (OIS) ஆதரவுடனான 50MP சோனி IMX890 மெயின் கேமரா + 112° கோணத்தை வழங்கும் 8MP அல்ட்ரா-வைட் கேமரா + 2MP மைக்ரோஸ்கோப் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. முன்பக்கத்தில் 16MP செல்பீ கேமரா உள்ளது. இதன் கேமரா அமைப்பில் ஹைப்பர்ஷாட் 2.0, டர்போ ரா லாஸ்லெஸ் இமேஜ் அல்காரிதம், ஸ்ட்ரீட் ஷூட்டிங் மோட் 3.0 போன்ற கேமரா அம்சங்களும் உள்ளன.
Realme GT3 - பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங்
இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்ருடன் வரும் ரியல்மி ஜிடி3 ஸ்மார்ட்போனின் மிக முக்கியமான சிறப்பம்சமே அதன் பேட்டரி டிப்பார்ட்மெண்ர்ட் தான். ஏனென்றால் இது 240W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 4600mAh பேட்டரியுடன் வருகிறது. இது உலகின் முதல் 240W சார்ஜிங் ஸ்மார்ட்போனாகும் மற்றும் வெறும் 10 நிமிடங்களில் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்துவிடும்.
Realme GT3 ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்கள்
மீதமுள்ள அம்சங்களை பொறுத்தவரை, இதில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அடிப்படையிலான ரியல்மி யுஐ 4.0, டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவு, யூஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், டால்பி அட்மோஸ், ஹை-ரேஸ் ஆடியோ, 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ, டூயல் 4ஜி, வைஃபை 6, ப்ளூடூத் 5.2, Gஜிபிஎஸ் (L1 + L5) / க்ளோனாஸ், என்எப்சி, யூஎச்பி டைப்-சி போர்ட் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.
Realme GT3 விலை மற்றும் இந்திய விற்பனை
பூஸ்டர் பிளாக் (Booster Black) மற்றும் பல்ஸ் ஒயிட் (Pulse White) என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரியல்மி ஜிடி3 ஸ்மார்ட்போன் மொத்தம் 5 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும். அதில் பேஸிக் வேரியண்ட் ஆன 8GB + 128GB ஆப்ஷனின் விலை இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.53,605 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 12GB + 256GB, 16GB + 256GB, 16GB + 512GB மற்றும் 16GB + 1TB போன்ற விருப்பங்களிலும் வெளியாகியுள்ளது. ஆனால் அவைகளின் விலை நிர்ணயம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும் இது எப்போது விற்பனைக்கு வரும், எப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்கிற விவரங்களும் வெளிப்படுத்தப்படவில்லை; இருப்பினும் இது கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்.


Click it and Unblock the Notifications








