Home
Mobile

இதான் ஃபர்ஸ்ட் டைம்.. இவ்ளோ கம்மி விலையில இப்படி ஒரு போன் வர்றது! மொத்த மார்க்கெட்டும் இனி Samsung பாக்கெட்ல!

நேற்று வரையிலாக.. "விரைவில் அறிமுகமாகும்" என்று கூறப்பட்டு வந்த சாம்சங்கின் புதிய ஸ்மார்ட்போன் ஒன்று, வருகிற மார்ச் 4 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாகுமென்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதென்ன மாடல்? இதில் அப்படியென்ன ஸ்பெஷல்? என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? மார்ச் 4 ஆம் தேதியன்று அறிமுகமாகப்போவது சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி (Samsung Galaxy F15 5G) ஸ்மார்ட்போனாகும். சாம்சங்கின் மிகவும் பிரபலமான எப் சீரீஸின்கீழ் (F Series) அறிமுகமாகும் இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயமானது, பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளம் வழியாக ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்டு விட்டன.

இந்த விலையில.. இப்படி ஒரு போன் வர்றது.. இதான் ஃபர்ஸ்ட் டைம்!

சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போனில் அப்படி என்ன ஸ்பெஷல்? இந்த ஸ்மார்ட்போனில் சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளே (Super AMOLED Display) மற்றும் 6000எம்ஏஎச் பேட்டரி (6000mAh Battery) இடம்பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. கூடவே இந்த ஸ்மார்ட்போனிற்கு 4 முக்கிய ஆண்ட்ராய்டு அப்டேட்களும் (4 Gen Android Updates), 5 ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட்களும் (Security Updates) கிடைக்கும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் கூற்றுப்படி, மேற்கண்ட 2 அம்சங்களையும் மற்றும் "இத்தனை ஆண்டுகளுக்கான" ஓஎஸ் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்களையும் வழங்கும் செக்மென்ட் ஒன்லி (Segment Only) ஸ்மார்ட்போனாக இது இருக்கும். அதாவது இதே விலைப்பிரிவில் உள்ள மற்ற எந்த ஸ்மார்ட்போன்களும் வழங்காததை சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி ஸ்மார்ட்போன் வழங்கும் என்று அர்த்தம்.

இந்த விலையில.. இப்படி ஒரு போன் வர்றது.. இதான் ஃபர்ஸ்ட் டைம்!

வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்புடன் (Triple Rear Camera Setup) வரும். மேலும் இது மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் சிப்செட்டை (MediaTek Dimensity 6100+ SoC) பேக் செய்யும். இந்த ஸ்மார்ட்போனில் 'வாய்ஸ் ஃபோகஸ்' என்கிற அம்சம் (Voice Focus Feature) இடம்பெறும்.

வாய்ஸ் ஃபோகஸ் அம்சமானது பேக்கிரவுண்ட் நாய்ஸ்-ஐ பில்டர் (Filtering Background Noise) செய்வதன் மூலம், வோக்கல் ஃப்ரெக்வன்சீஸ்களை அதிகரிப்பதன் (Boosting vocal frequencies) மூலமும் கால்களின் போது குரல் தரத்தை மேம்படுத்துகிறது. அதாவது கூகுள் மீட் (Google Meet), மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் (Microsoft Teams), வாட்ஸ்அப் (WhatsApp) மற்றும் ஜூம் (Zoom) போன்ற வீடியோ மற்றும் வாய்ஸ் கால் ஆப்களில் இந்த அம்சம் மிகவும் உதவிகரமானதாக இருக்கும்.

இந்த விலையில.. இப்படி ஒரு போன் வர்றது.. இதான் ஃபர்ஸ்ட் டைம்!

டிஸ்பிளேவை பொறுத்தவரை, 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz Refresh Rate) உடனான 6.5-இன்ச் புல்எச்டி பிளஸ் இன்பினிட்டி-யு சூப்பர் அமோஎல்இடி (FHD+ Infinity-U Super AMOLED) டிஸ்பிளேவை எதிர்பார்க்கலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14) உடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இது ஆண்ட்ராய்டு 18 (Android 18) வரையிலான அப்டேட்களை பெற வேண்டும்.

4ஜிபி ரேம் மற்றும் 6ஜிபி ரேம் ஆப்ஷன்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி ஆனது 25W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவையும் வழங்கலாம் ஆனால் பாக்ஸில் 25W சார்ஜர் இடம்பெறாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. கடைசியாக இது பிளாக், பர்பிள் மற்றும் மின்ட் என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படலாம்.

என்ன விலைக்கு வரும்? இது ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமாகும். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ரூ.14,999 க்கு வெளியாகலாம். சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி மாடலின் சரியான விலை நிர்ணயம் மார்ச் 4 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிவிக்கப்படும். அதை உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்!

Best Mobiles in India

English summary
First Phone Under Rs 15000 Segment Super AMOLED 6000mAh battery Samsung Galaxy F15 5G Launch March 4
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X