Home
Mobile

Redmi, Realme-க்கு டிமிக்கி.. இனி ரூ.7000 க்குள் பட்ஜெட் போன் வாங்கணும்னா.. இந்த மாடல் தான்!

ரூ.7,000 பட்ஜெட்டில் ஒரு நல்ல போன் கிடைப்பதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்று கேட்டால்.. நிச்சயமாக இல்லை தான். ஆனால் அந்த ஸ்மார்ட்போன் சாம்சங், ரெட்மி அல்லது ரியல்மி பிராண்ட்டை சேர்ந்தது அல்ல, மோட்டோரோலாவை சேர்ந்தது என்று கூறினால், நிச்சயம் அது ஒரு பெரிய விஷயம் தான்!

ஏனென்றால் ரூ.7000 க்குள் வாங்க கிடைக்கும் மொபைல் பிரிவை, சாம்சங் (Samsung), ரெட்மி (Redmi) மற்றும் ரியல்மி (Realme) போன்ற நிறுவனங்களே "ஆட்சி" செய்கின்றன. இந்நிலைப்பாட்டில் தான் மோட்டோரோலா (Motorola) நிறுவனம், தன் பங்கிற்கு ஒரு புதிய போட்டியாளரை களமிறக்கி உள்ளது!

இனி ரூ.7000-க்குள் பட்ஜெட் போன் வாங்கணும்னா.. இந்த மாடல் தான்!

அது தான் Moto E13 ஸ்மார்ட்போன்!

லெனோவாவுக்கு (Lenovo) சொந்தமான மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ இ13 என்கிற புதிய பட்ஜெட்-விலை ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

லைட்-வெயிட் டிஸைனுடன் வரும் மோட்டோ இ13 ஸ்மார்ட்போனின் விலை என்ன? இது கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற அம்சங்களை கொண்டுள்ளதா?

இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் எத்தனை ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கும்? எந்த வலைத்தளம் வழியாக விற்பனை செய்யப்படும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்:

இனி ரூ.7000-க்குள் பட்ஜெட் போன் வாங்கணும்னா.. இந்த மாடல் தான்!

Moto E13 விலை மற்றும் ஸ்டோரேஜ், கலர் ஆப்ஷன்ஸ்!

மோட்டோ இ13 ஸ்மார்ட்போன் மொத்தம் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது 2ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களாகும்.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, 2ஐபி ரேம் ஆப்ஷன் ரூ.6,999 க்கும், 4ஜிபி ரேம் ஆப்ஷன் ரூ.7,999 க்கும் வாங்க கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் காஸ்மிக் பிளாக், அரோரா கிரீன் மற்றும் க்ரீமி ஒயிட் என மொத்தம் 3 கலர் ஆப்ஷன்களின் கீழ் விற்பனை செய்யப்படும்!

எப்போது முதல் விற்பனை? எந்த தளம் வழியாக வாங்க கிடைக்கும்?

மோட்டோ இ13 ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை வருகிற பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் தொடங்கும். இந்த ஸ்மார்ட்போன் பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart) வழியாக வாங்க கிடைக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் விற்பனை செய்யப்படும்.

அறிமுக சலுகைகள் ஏதேனும் உண்டா?

உண்டு! ஆனால் இந்த அறிமுக சலுகைகளானது ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும். நீங்களொரு ஜியோ பயனராக இருந்தால், மோட்டோ இ13 ஸ்மார்ட்போனை வாங்கும் போது ரூ.700 கேஷ்பேக் கிடைக்கும். மேலும் ரூ.2,500 மதிப்புள்ள பிரத்யேக சலுகைகளையும் பெறுவீர்கள்.

இனி ரூ.7000-க்குள் பட்ஜெட் போன் வாங்கணும்னா.. இந்த மாடல் தான்!

ரூ.6,999 க்கு Moto E13 ஸ்மார்ட்போன் வொர்த்-ஆ?

இந்த கேள்விக்கு பொத்தாம் பொதுவாக பதில் கூறி விட முடியாது. மோட்டோ இ13 ஸ்மார்ட்போனின் அம்சங்களை பற்றி விரிவாக அறிந்த பின்னர், உங்களுக்கு என்ன தேவை என்பதற்கு ஏற்பவே.. இது வொர்த் ஆன ஸ்மார்ட்போனா அல்லது மொக்கையான மாடலா என்கிற தீர்மானத்திற்கு வர முடியும்.

Moto E13 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்:

- 6.5 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே
- 720x1600 பிக்சல் ரெசல்யூஷன்
- 20:9 ரேஷியோ
- 84% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ
- ஸ்பிளாஷ்-ரெசிஸ்டண்ட் டிற்கான ஐபி52 ரேட்டிங்

- ஆக்டா கோர் யூனிசாக் T606 சிப்செட்
- டூயல் சிம் கார்டு ஆதரவு
- 1டிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவு
- 4ஜிபி வரை ரேம்
- 64ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன்

- 13எம்பி சிங்கிள் ரியர் கேமரா
- 5எம்பி செல்பீ கேமரா
- 10W சார்ஜிங்கிரகண ஆதரவு
- 5000mAh பேட்டரி

பழங்குடி மொழிகளுக்கு மரியாதை செய்யும் Moto E13!

இந்தியாவில் அழிந்து வரும் பழங்குடி மொழிகளான காங்ரி (Kangri) மற்றும் குவி (Kuvi) போன்றவைகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்தின் கீழ் மோட்டோ இ13 ஸ்மார்ட்போனில் மேற்கூறிய இரண்டு மொழிகளுக்கான ஆதரவும் சேர்க்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
First Phone To Support Endangered Indigenous Languages Moto E13 Launched in India for Just Rs 6999
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X