இப்படி ஒரு OnePlus போனுக்கு தான் உலகமே வெயிட்டிங்.. 50+50+64MP கேமரா.. 100W சார்ஜிங்.. 5400mAh பேட்டரி!
"இதுவரை அறிமுகமான ஒன்பிளஸ் போன்கள் எல்லாம் இந்த மாடலுக்கு முன்னாடி ஜுஜுபிடா!" என்று கூற வைக்கும்படியாக.. பழைய ஒன்பிளஸ் மாடல்களுடன் ஒப்பிடும் போது மிகவும் மேம்படுத்தப்பட்ட 6 முக்கிய அம்சங்களுடன் புதிய ஒன்பிளஸ் போன் ஒன்று அறிமுகத்திற்கு தயாராக உள்ளது போல் தெரிகிறது.
நாம் இங்கே பேசுவது ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போனை பற்றித்தான். மிகவும் நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான யோகேஷ் ப்ராரின் (@heyitsyogesh) கூற்றுப்படி, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் உடன் வரும் முதல் ஸ்மார்ட்போன் என்கிற பெருமை உட்பட ஒன்பிளஸ் 12 மாடலில் 6 முக்கியமான மேம்பாடுகள் இடம்பெறும்.

அதென்ன மேம்பாடுகள்? ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் சரியாக எப்போது அறிமுகமாகும்? இதன் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் தவிர்த்து ஒன்பிளஸ் 12 மாடலில் வேறு என்னென்ன அம்சங்களை நாம் எதிர்பார்க்கலாம்? இதோ விவரங்கள்:
ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் முதல் மற்றும் மிக முக்கியமான அப்கிரேட் ஆக ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3 Chipset ) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 உடன் அறிமுகமான முதல் சில ஸ்மார்ட்போன்கள் என்கிற பட்டியலில் ஒன்பிளஸ் 12-க்கும் இடம் கிடைக்கும்.
இரண்டாவது அப்கிரேட் - ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் கேமராக்களில் இருக்கும். இந்த ஸ்மார்ட்போனின் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பில் (Triple Rear Camera Setup) 50எம்பி மெயின் கேமரா + 50எம்பி இரண்டாம் நிலை கேமரா + 64எம்பி மூன்றாம் நிலை கேமரா இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அது வைட், எது அல்ட்ரா-வைட், பெரிஸ்கோப் லென்ஸ் (Periscope Lens) இடம்பெறும் என்பது குறித்த விவரங்கள் எதுவும் இல்லை.
மூன்றாவது அப்கிரேட் - பேட்டரி கேப்பாசிட்டியில் இருக்கும். ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் சற்றே பெரிய 5400எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நான்காவது அப்கிரேட் - இந்த ஸ்மார்ட்போனில் 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவும் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐந்தாவது அப்கிரேட் - இது நல்ல ஐபி ரேட்டிங் (IP Rating) உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது நல்ல வாட்டர் ப்ரூஃப் ரேட்டிங் உடன் வரலாம். ஆறாவது அப்கிரேட் - ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது பிரீமியம் பில்ட் (Premium build) உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? மேற்கண்ட 6 முக்கிய அப்கிரேட்களை தவிர்த்து ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது 2கே ரெசல்யூஷன் (2K Resolution) மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான 6.7-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். மேலும் இதில் எல்டிபிஓ டிஸ்பிளே தொழில்நுட்பமும் (LTPO Display Technology) சேர்க்கப்படலாம்.
எப்போது அறிமுகமாகும்? முந்தைய மாடல்களை போலவே ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனும் கூட முதலில் சீனாவில் தான் அறிமுகமாகும்; அதன் பின்னரே இந்தியாவில் அறிமுகமாகும். அப்படியாக இது 2023 டிசம்பர் மாத வாக்கில் சீனாவில் அறிமுகமாகலாம். அதனை தொடர்ந்து 2024 ஜனவரி அல்லது பிப்ரவரி மாத வாக்கில் இந்திய அறிமுகம் நடக்கலாம்.
என்ன விலைக்கு வரும்? மைஸ்மார்ட்ப்ரைஸ் வழியாக கிடைத்த தகவலின்படி ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் ரூ.80,990 ஆக இருக்கலாம். மேலோட்டமாக பார்த்தல் இது சற்றே அதிகமான விலை நிர்ணயமாக தெரியலாம்; அதுவே ஒன்பிளஸ் 11 5ஜி (OnePlus 11 5G) ஸ்மார்ட்போனின் விலையுடன் (ரூ.64,999) ஒப்பிட்டு பார்த்தால் நியாயமானதாக தெரியும்.


Click it and Unblock the Notifications








