Realme ராக்ஸ்.. சீனாவுல நீங்க.. இந்தியாவுல நாங்க.. Snapdragon 8 Elite Gen 5 உடன் அறிமுகமாகும் முதல் போன்!
சீன நிறுவனம் ஆன ஷாவ்மீ (Xiaomi), ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் கொண்டு இயங்கும் உலகின் முதல் ஸ்மார்ட்போன்களை - ஷாவ்மீ 17 சீரீஸ் மாடல்களை - அறிமுகம் செய்து உள்ளது.
இதே சிப்செட் உடன் - ஹானர் மேஜிக் 8 சீரீஸ் (Honor Magic 8 Series), ஐக்யூ 15 (iQOO 15), ஒன்பிளஸ் 15 (OnePlus 15), இஸட்டிஇ நுபியா இசட்80 அல்ட்ரா (ZTE Nubia Z80 Ultra) மற்றும் ரெட் மேஜிக் 11 ப்ரோ சீரீஸ் (Red Magic 11 Pro Series) என - பல ஸ்மார்ட்போன்கள் வருகிற அக்டோபரில் சீன சந்தையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இடத்தில் தான் - சீனாவிற்கு வெளியே உள்ள சந்தைகளில் (அதாவது இந்திய சந்தையில்) ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் உடன் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன் எது என்கிற கேள்வி எழுகிறது. அந்த கேள்விக்கு ரியல்மி நிறுவனத்திடம் பதில் உள்ளது.
ரியல்மி நிறுவனம் ஆனது ரியல்மி ஜிடி 8 ப்ரோ (Realme GT 8 Pro) ஆனது இந்தியாவின் முதல் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 ஸ்மார்ட்போனாக அறிமுகமாகும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. கூடவே அன்டுடு (AnTuTu) அளவுகோல்களில் இந்த ஸ்மார்ட்போனால் 4 மில்லியனுக்கும் அதிகமான மதிப்பெண்ணை அடைய முடியும் என்பதையும் ரியல்மி வெளிப்படுத்தியுள்ளது; அதாவது இந்த ஸ்மார்ட்போனின் பெர்பார்மென்ஸ் "பிச்சிக்கும்" என்று அர்த்தம்!
இதுதவிர்த்து ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனை பற்றிய எந்த விவரங்களையும் நிறுவனம் பகிர்ந்து கொள்ளவில்லை, இருப்பினும் சில சமீபத்திய லீக்ஸ் மற்றும் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் ரியல்மி ஜிடி 8 ப்ரோவின் சில முக்கிய அம்சங்களை வெளிப்படுத்தியுள்ளன. சமீபத்தில் இது 120W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு இருக்கும் என்கிற தகவல் வெளியானதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்கள் நிச்சயமாக இடம்பெறும்? ரியல்மியின் கூற்றுப்படி ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 2கே ரெசல்யூஷன் கொண்ட பிளாட் டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும். கேமராவை பொறுத்தவரை ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறும்; அதில் 200 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ சென்சார் இடம்பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இந்த ஸ்மார்ட்போன் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 7000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.78 இன்ச் பிளாட் டிஸ்பிளேவை பேக் செய்யலாம். சுவாரசியமாக இந்த ஸ்மார்ட்போன் 7000mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இந்திய சந்தையில் இது ரூ.60,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் இது ரூ.59,990 க்கு விற்பனைக்கு வரலாம். முன்னதாக அறிமுகமான ரியல்மி ஜிடி 7 ப்ரோ, தற்போது ரூ.47,999 என்கிற குறைக்கப்பட விலையில் (அமேசானில்) வாங்க கிடக்கிறது.
ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.78 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோஎல்இடி டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- 50 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்906 ப்ரைமரி சென்சார்
- 50 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்882 டெலிஃபோட்டோ ஷூட்டர்
- 8 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்355 அல்ட்ரா-வைட் கேமரா
- 16 மெகாபிக்சல் செல்பீ சென்சார்
- 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 5800எம்ஏஎச் பேட்டரி


Click it and Unblock the Notifications








