மொய்க்க போகுது கூட்டம்.. பவர்ஃபுல் ஸ்பெக்ஸ்.. பக்கா விலையில்.. புதிய POCO ஸ்மார்ட்போன்!
மே 23 அன்று போக்கோ நிறுவனம் அதன் லேட்டஸ்ட் பிரீமியம் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. அது போக்கோ எப்6 (Poco F6) மாடலாகும். இது சரியாக எப்போது அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? இதோ விவரங்கள்:
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை.. போக்கோ எப்6 ஸ்மார்ட்போன் ஆனது லேட்டஸ்ட் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 8s Gen 3 Chipset) உடன் இந்திய சந்தைக்கு வரும் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும். இது தவிர, பிரீமியம் டிசைன், 1.5கே அமோஎல்இடி டிஸ்பிளே, டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், சோனி டூயல்-கேமரா செட்டப் போன்றவைகளையும் பேக் செய்யும்.

டிசைனை பொறுத்தவரை.. போக்கோ எப்6 ஸ்மார்ட்போன் ஆனது டைட்டானியம் மற்றும் பிளாக் என்கிற இரண்டு கலர் ஆப்ஷன்களில் அறிமுகமாகும். இது பிளாட்-ஃபிரேம் டிசைனை பெற்றுள்ளது. பேக் பேனலில் பெரிய கேமரா யூனிட்கள் மற்றும் பளபளப்பான டெக்ஸரும் உள்ளது. முன்பக்க பேனலில் மேல் மையத்தில் பஞ்ச்-ஹோல் கட்அவுட் உள்ளது. சவுண்ட் கண்ட்ரோல்ஸ் மற்றும் பவர் ஆன்/ஆஃப் பட்டன்கள் வலது பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளன.
டிஸ்பிளேவை பொறுத்தவரை.. போக்கோ எப்6 ஆனது 1.5கே அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இது 120 ஹெர்ட்ஸ் ஸ்கிரீன் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் 2,400 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸையும் வழங்கும். மேலும் இதன் டிஸ்பிளே எச்டிஆர் 10 பிளஸ் மற்றும் டால்பி விஷன்-ஐயும் ஆதரிக்கும். ஒட்டுமொத்தமாக தரமான மல்டிமீடியா அனுபவத்தை வழங்கும்.

சிப்செட்டை பொறுத்தவரை.. முன்னரே குறிப்பிட்டபடி, போக்கோ எப்6 ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட் உடன் இந்தியாவில் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும். மேலும் இது LPDDR5X ரேம் மற்றும் UFS 4.0 ஸ்டோரேஜை பேக் செய்யும். இதில் 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரையிலான ஸ்டோரேஜ் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேமராக்களை பொறுத்தவரை.. போக்கோ எப்6 ஸ்மார்ட்போனில் டூயல் சோனி கேமராக்கள் இடம்பெறும் என்பதை போக்கோ நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இதில் ஓஐஎஸ் மற்றும் இஐஎஸ் ஆதரவுடன் 50 மெகாபிக்சல் மெயின் சோனி சென்சார் இடம்பெறும். மேலும், இந்த ஸ்மார்ட்போனில் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸும் இடம்பெறும். முன்பக்கத்தில் 20 மெகாபிக்சல் சென்சார் பேக் செய்யப்பட்டுள்ளது.

பேட்டரி மற்றும் பிற விவரங்களை பொறுத்தவரை.. போக்கோ எப்6 ஸ்மார்ட்போன் ஆனது 90W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இதுதவிர்த்து போக்கோ எப்6 ஸ்மார்ட்போன் ஆனது டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், என்எப்சி, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் டால்பி அட்மோஸ் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது.
இந்திய வெளியீட்டு விவரங்களை பொறுத்தவரை.. போக்கோ எப்6 ஸ்மார்ட்போன் ஆன்யு மே 23 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாகும். இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு நிகழ்வு இந்திய நேரப்படி மாலை 4:30 மணிக்கு தொடங்கும். இந்நிகழ்வின் லைவ் ஸ்ட்ரீமிங் ஆனது போக்கோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனல் வழியாக பார்க்கலாம். மேலும், போக்கோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சோஷியல் மீடியா சேனல்களின் வழியாகவும் பார்க்கலாம்.
விலை நிர்ணயத்தை பொறுத்தவரை.. போக்கோ எப்6 ஸ்மார்ட்போன் ப்ரைஸ் டேக் குறித்து போக்கோ நிறுவனம் எந்த தகவலையும் வெளியிடவில்லை. இருப்பினும், முந்தைய தலைமுறை போக்கோ எப்5 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விலையை நாம் கருத்தில் கொண்டால், போக்கோ எப்6 ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் ரூ.30,000 அல்லது அதற்கு மேல் இருக்கும். இந்திய அறிமுகத்திற்கு பின்னர் போக்கோ எப்6 ஸ்மார்ட்போன் பிரபல இ-காமர்ஸ் வலைத்தளம் வழியாக விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications








