Realme-யின் நச் போன்.. ரூ.18,000-க்கு 120Hz டிஸ்பிளே, 32MP செல்பீ கேம், 16GB ரேம், 100W சார்ஜிங்.. என்ன மாடல்?
ரூ.20,000-க்குள் என்கிற பட்ஜெட்டில்.. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ரூ.18,000 பட்ஜெட்டில் 120ஹெர்ட்ஸ் டிஸ்பிளே, 32எம்பி செல்பீ கேமரா, 16ஜிபி வரையிலான ரேம், 100W பாஸ்ட் சார்ஜிங் உட்பட பல முக்கிய அம்சங்களுடன் புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் இந்திய சந்தைக்கு வருகிறது.
விலையை விட இன்னொரு முக்கியமான விஷயமும் உள்ளது. அது என்னவென்றால்.. இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி நிறுவனத்தின் ஜிடி சீரீஸின் கீழ் வருகிறது. அதாவது இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்கு பிறகு ரியல்மி நிறுவனம் அதன் ஜிடி சீரீஸை இந்தியாவிற்கு மீண்டும் கொண்டுவருகிறது என்று அர்த்தம்.

அது ரியல்மி ஜிடி 6டி (Realme GT 6T) ஸ்மார்ட்போன் ஆகும். இந்த மாடல் கூடிய விரைவில் இந்திய சந்தைக்கு வரும் என்பதை சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ரியல்மி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இன்னும் சரியான வெளியீட்டு தேதியை உறுதிப்படுத்தவில்லை என்றாலும் கூட, எப்படியும் இது இந்த மே மாதத்திலேயே அறிமுகமாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரியல்மி ஜிடி 6டி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இது ஸ்னாப்டிராகன் சிப்செட் கொண்டு இயங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் ரியல்மி ஜிடி 6டி ஆனது ரியல்மி ஜிடி நியோ 6 எஸ்இ (Realme GT Neo 6 SE) ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷன் ஆக இருக்கும் என்பது போல் தோன்றுகிறது, நினைவூட்டும் வண்ணம் இது கடந்த ஏப்ரல் மாதத்தில் அறிமுகமானது.
ரியல்மி ஜிடி நியோ 6 எஸ்இ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 சிப்செட் (Snapdragon 7+ Gen 3 SoC) மூலம் இயங்குகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1.5கே ரெசல்யூஷன் மற்றும் 6,000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.78-இன்ச் (1264 x 2780 பிக்சல்ஸ்) 8டி எல்டிபிஓ அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை இது 50 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா யூனிட்டை கொண்டிருக்கும். முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பீ ஷூட்டரை கொண்டுள்ளது. இது 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரை ஸ்டோரேஜை பேக் செய்கிறது. கடைசியாக 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,500 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது.
ரியல்மி ஜிடி 6டி என்ன விலைக்கு வரும்? இது உண்மையாகவே ரியல்மி ஜிடி நியோ 6 எஸ்இ ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷன் ஆக இருந்தால் இது ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். அதாவது இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.18,000-ஐ சுற்றிய விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம். ஏனென்றால் இதே விலைக்கு தான் ரியல்மி ஜிடி நியோ 6 எஸ்இ கடந்த மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இன்னும் சில தினங்களில் சாம்சங் கேலக்ஸி எஃப்55 5ஜி ஸ்மார்ட்போனும் இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளத்தில் இந்த ஸ்மார்ட்போனிற்கான ஒரு பிரத்யேக மைக்ரோசைட்டும் லைவ் ஆகியுள்ளது. அதன் வழியாக இந்த போன் வீகன் லெதர் பினிஷ் உடன் அப்ரிகாட் க்ரஷ் மற்றும் ரைஸன் பிளாக் என்கிற 2 கலர்களில் வெளியாகும் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.
இது என்ன விலைக்கு வரும்? நம்பகமான டிப்ஸ்டர் வழியாக கிடைத்த தகவலின்படி, சாம்சங் கேலக்ஸி எஃப்55 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.26,999 க்கும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ 29,999 க்கும், ஹை-எண்ட் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ. 32,999 க்கும் அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications








