Home
Mobile

இது ஒன்னு போதும்! அடுத்த 6 வருஷத்துக்கு வேற எந்த போனும் வாங்க வேண்டாம்! OnePlus Nord 4-ல் இப்படி ஒரு ஸ்பெஷலா!

தாறுமாறாக விளம்பரம் செய்யப்படுவதால்.. உங்களில் பலருக்கும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன் என்ன என்பது பற்றி ஏற்கனவே தெரிந்து இருக்கலாம். அது ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி (OnePlus Nord 4 5G) மாடல் ஆகும். இது ஜூலை 16 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகம் (July 16th India Launch) செய்யப்பட உள்ளது. அறிமுகத்திற்கு இன்னும் சில தினங்களே உள்ளதால் ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போனில் என்னென்ன முக்கிய அம்சங்கள் இடம்பெறும் என்கிற விவரங்கள் அதிகாரப்பூர்வமாக பகிரப்பட்டு வருகிறது.

அந்த வரிசையில் வெளியான ஒரு சமீபத்திய அறிவிப்பானது.. ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போன் மீது ஒரு கண் வைத்து இருந்தவர்களை வாய்பிளக்க வைக்கும்படி உள்ளது. இன்னும் சொல்லப்போனால், 7000எம்ஏஎச் பேட்டரியுடன் ஒரு புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் ரெடியாகிறது என்கிற தகவலை விட இது பெரிய விஷயமாக உள்ளது.

OnePlus Nord 4: அடுத்த 6 வருஷத்துக்கு வேற எந்த போனும் வாங்க வேண்டாம்!

ஒன்பிளஸ் நோர்ட் 4-ல் அப்படி என்ன ஸ்பெஷல்? ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போன் ஆனது 4 வருட ஆண்ட்ராய்டு அப்டேட்களையும், 6 வருட செக்யூரிட்டி அப்டேட்களையும் பெறும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதாவது 6 வருட செக்யூரிட்டி அப்டேட்களுடன் வரும் முதல் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் இதுவாக இருக்கும். ஒன்பிளஸ் நிறுவனம் அதன் பயனர்களுக்கு வழங்கிய மிகவும் நீளமான சப்போர்ட் பேக்கேஜ் இதுவாகவும்.

6 ஆண்டுகள் என்கிற மிகவும் நீளமான சாஃப்ட்வேர் சப்போர்ட் பேக்கேஜ் ஆனது ஒன்பிளஸ் நோர்ட் 4-ஐ நீண்ட காலம் பயன்படுத்த பாதுகாப்பான ஒரு ஸ்மார்ட்போனாக மாற்றும். இதுமட்டுமின்றி ஒன்பிளஸ் நோர்ட் 4 மாடலானது 72 மாதங்களுக்கான டியுவி எஸ்யுடி ப்ளூயூயன்ஸி ஏ ரேடிங்கையும் (TÜV SÜD Fluency 72 Month A Rating) பெற்றுள்ளது

அதாவது இது மற்ற ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை போலல்லாமல், வரும் ஆண்டுகளில் வேகமாகவும் மென்மையாகவும் இருக்கும் என்று விரிவாக பரிசோதிக்கப்பட்டு சான்றளிக்கப்பட்டுள்ளது. போதாக்குறைக்கு ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆனது ஒன்பிளஸின் பேட்டரி ஹெல்த் எஞ்சின் தொழில்நுட்பத்துடன் வரும். இது பல ஆண்டுகளாக திறம்பட சார்ஜிங் செய்வதை உறுதிசெய்யும் மற்றும் 1600 முழுமையான சார்ஜிங் சுழற்சிகளுக்காக சான்றளிக்கப்பட்டது.

முன்னரே குறிப்பிட்டபடி இந்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் சம்மர் லான்ச் வெளியீட்டு நிகழ்வில் அறிமுகமாகும். இந்நிகழ்வு இத்தாலியில் உள்ள மிலனில் நடைபெற உள்ளது. இது சரியாக ஜூலை 16 ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கும். இந்நிகழ்வு நிறுவனத்தின் யூடியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும். வழக்கம் போல அறிமுகத்திற்கு பின்னர் ஒன்பிளஸ் நோர்ட் 4 ஆனது அமேசான் இந்தியா வழியாக விற்பனைக்கு வரும்.

இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் 4 என்ன விலைக்கு அறிமுகமாகும்? எக்ஸ் தளம் வழியாக டெக் ஹோம் பகிர்ந்துள்ள தகவலின்படி, இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி ஸ்மார்ட்போனின் ஆபர் விலை ரூ.27,999 ஆக இருக்கும். அநேகமாக இது பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையாக இருக்ககலாம். இருப்பினும், மேற்க்கூறப்பட்ட விலை அனைத்து வங்கி தள்ளுபடிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

இதன் பொருள், ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலை சற்று அதிகமாக இருக்கலாம், அனேகமாக இது சுமார் ரூ.31,999 ஆக இருக்கலாம். இந்த ஸ்மார்ட்போனின் மற்ற ஸ்டோரேஜ் வகைகளின் விலைகள் பற்றி எந்த விவரங்காகும் இல்லை. பெரும்பாலும் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷனை விட சுமார் ரூ.3,000 அதிகமாகவே இருக்கும்.

ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிரிபார்க்கலாம்? இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2150 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடனான 6.74-இன்ச் 1.5கே ஓஎல்இடி டியன்மா யு8 பிளஸ் டிஸ்பிளேவை (1.5K OLED Tianma U8+ Display) கொண்டிருக்கலாம்.

ப்ராசஸரை பொறுத்தவரை, இது அட்ரினோ ஜிபியு உடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 7+ Gen 3 SoC) மூலம் இயக்கப்படலாம். கேமராக்களை பொறுத்தவரை, 50எம்பி ப்ரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கலாம். பேட்டரியை பொறுத்தவரை, இது 100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,500mAh பேட்டரியை கொண்டு இருக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
First OnePlus Smartphone With 6 years of security updates OnePlus Nord 4 Launching on July 16
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X