Home
Mobile

OnePlus-ன் விஸ்வரூபம்.. 7.8-இன்ச் 2K டிஸ்பிளே, 16GB ரேம், 50MP கேமரா.. ரீலீஸ் தேதி இதுதான்.. என்ன மாடல்?

"கண்ணுங்களா.. இதுவரை வந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் எல்லாம் சும்மா ட்ரைலர் தான்.. இனிமேல் தான் உண்மையான ஆட்டம் இருக்கு!" என்று கூறுவது போல ஒன்பிளஸ் நிறுவனம் "ஏலியன் லெவல்" ஸ்மார்ட்போன் ஒன்றை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. அதென்ன மாடல்? இதோ முழு விவரங்கள்:

என்ன மாடல்? நாம் இங்கே பேசுவது ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை பற்றித்தான். முதலில் இது ஒன்பிளஸ் வி ஃபோல்ட் (OnePlus V Fold) என்று அழைக்கப்பட்டது. ஆனால், தற்போது இது ஒன்பிளஸ் ஓப்பன் (OnePlus Open) என்கிற பெயரின் கீழ் அறிமுகமாகும் என்பது போல் தெரிகிறது.

OnePlus-ன் விஸ்வரூபம்.. ரீலீஸ் தேதி இதுதான்.. என்ன மாடல்?

எப்போது அறிமுகமாகும்? இது நினைத்ததை விட வேகமாக அறிமுகமாக உள்ளது. நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான அரவிந்த் மற்றும் ஸ்மார்ட்பிரிக்ஸ் (SmartPrix) வழியாக கிடைத்துள்ள தகவலின்படி, ஒன்பிளஸ் வி ஃபோல்ட் அல்லது ஒன்பிளஸ் ஓப்பன் ஆனது வருகிற ஆகஸ்ட் 29 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம்.

என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போன் ஆனது 7.8-இன்ச் 2கே அமோஎல்இடி இன்னர் டிஸ்பிளே மற்றும் 6.3-இன்ச் அமோஎல்இடி அவுட்டர் டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். இவ்விரு டிஸ்பிளேக்களுமே 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் வரலாம். மேலும் இது 16ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜையும் கொண்டிருக்கலாம்.

ஒன்பிளஸ் ஓப்பன் ஆனது ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை, ஓஐஎஸ் (OIS) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical image stabilization) உடனான 50 மெகாபிக்சல் மெயின் கேமராவை கொண்டிருக்கலாம்.

ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனின் 50எம்பி மெயின் கேமராவுடன் அல்ட்ரா-வைட் (Ultrawide) லென்ஸுடன் 48 மெகாபிக்சல் சென்சார் மற்றும் பெரிஸ்கோப் (Periscope) லென்ஸுடன் 32 மெகாபிக்சல் சென்சார் இடம்பெறலாம். மேலும் இந்த ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனில் இரண்டு 32 மெகாபிக்சல் செல்பீ கேமராக்கள் பேக் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வடிவமைப்பை பொறுத்தவரை (லீக் ஆன ரெண்டர் புகைப்படங்களை வைத்து பார்க்கும் போது) இதன் கேமரா செட்டப் ஆனது, பேக் பேனலில் மேல்மையத்தில் ஒரு பெரிய சர்குலர் மாட்யூலில் வைக்கப்பட்டுள்ளது. இது லிச்சி போன்ற லெதர் ஃபினிஷையும் கொண்டுள்ளது. வழக்கம் போல இதன் கேமராக்கள் ஹசல்பிளாட் பிராண்டிங் உடனே வருகின்றன

பிளாக் (Black), கோல்ட் (Gold) மற்றும் க்ரீன் (Green) என்கிற மூன்று கலர் ஆப்ஷன்களில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனானது "சிறந்த டிஸ்பிளேக்கள், கேமராக்கள், ஸ்பீக்கர்கள் மற்றும் பிற ஹார்ட்வேர்களை வழங்கும்" என்று டிப்ஸ்டர் ஐஸ் யுனிவர்ஸ் நம்பிக்கை தெரிவித்ள்ளார்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போன் ஆனது முதலில் சீனாவில் தான் அறிமுகம் செய்யப்படும், அதன் பின்னரே படிப்படியாக, இந்தியா உட்பட மற்ற உலகளாவிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. ஆக, ஆகஸ்ட் 29 ஆம் தேதி என்பது சீன வெளியீட்டிற்கான தேதியாக கூட இருக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
First OnePlus Foldable Phone OnePlus Open Tipped to Launch On August 29 Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X