Home
Mobile

எடுத்ததுமே ரூ.6000 டிஸ்கவுண்ட்.. 6 மாதம் நோ-காஸ்ட் EMI.. பிச்சிகிட்டு பறக்கும் ஆர்டர்.. Realme-ன் புது போன்!

சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரியல்மி ஜிடி 6டி ஸ்மார்ட்போனின் 2 மணி நேர எர்லி சேலில், உங்களால் ஒரு யூனிட்டை ஆர்டர் செய்ய முடியவில்லை என்றால் கவலை வேண்டாம். இந்த போனின் அதிகாரப்பூர்வ பர்ஸ்ட் சேல் மே 29 முதல் தான் தொடங்கவுள்ளது.

இன்று (மே 28) நடந்த எர்லி சேல்-ஐ பொறுத்தவரை, இ-காமர்ஸ் இணையதளமான அமேசான் இந்தியா, நிறுவனத்தின் சொந்த வலைத்தளமான ரியல்மி இந்தியா மற்றும் மெயின்லைன் ஸ்டோர்கள் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் மதியம் 12 முதல் 2 மணி வரை வாங்க கிடைத்தது.

பிச்சிகிட்டு பறக்கும் ஆர்டர்.. Realme-ன் புது போன்!

ரியல்மி ஜிடி 6டி ஸ்மார்ட்போனின் எர்லி சேலில் கிடைத்த சலுகைகளை நீங்கள் தவறவிட்டு இருந்தால்.. கவலைப்பட வேண்டாம். முன்னரே குறிப்பிட்டபடி இந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை மே 29 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. அப்போதும் கூட இந்த ஸ்மார்ட்போனின் மீது ரூ.4,000 வங்கி சலுகை, ரூ.2,000 எக்ஸ்சேஞ்ச் சலுகை மற்றும் 6 மாதங்கள் வரையிலான நோ-காஸ்ட் இஎம்ஐ உள்ளிட்ட சலுகைகள் அணுக கிடைக்கும்,.

சுவாரசியமாக மேற்கண்ட எல்லா சலுகைகளும் ரியல்மி ஜிடி 6டி ஸ்மார்ட்போனின் நான்கு வேரியண்ட்களிலும் அணுக கிடைக்கும். விலை நிர்ணயத்தை பொறுத்தவரை ரியல்மி ஜிடி 6டி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.30,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தள்ளுபடிகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் உடன் இதை ரூ.24,999 க்கு வாங்கலாம்.

அடுத்ததாக உள்ள 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் அறிமுக விலை ரூ.32,999, ஆனால் தள்ளுபடிகளுக்கு பிறகு இதை ரூ.26,999-க்கு வாங்கலாம். இதேபோல 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் அசல் விலை ரூ.35,999 ஆகும், ஆனால் இது தள்ளுபடியுடன் ரூ.29,999-க்கு வாங்க கிடைக்கும். கடைசியாக உள்ள 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஆப்ஷன் ரூ.39,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தள்ளுபடியின்கீழ் ரூ.33,999-க்கு வாங்க கிடைக்கும்.

ரியல்மி ஜிடி 6டி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்களை பொறுத்தவரை, இது கிளாஸ் போன்ற பினிஷ் கொண்ட டூயல் டோன் ரியர் பேனலை (Dual-tone rear panel with a mirror-like finish) கொண்டுள்ளது. அதில் 2 கேமரா மாட்யூல்கள் (2 camera modules) மற்றும் டூயல் எல்இடி ஃபிளாஷ் (Dual-LED flash) உள்ளது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 1 முதல் 120ஹெர்ட்ஸ் வரையிலான வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட், 6,000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 2780 x 1264 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 100% டிசிஐ-பி3 கலர் கேமட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷன் உடனான 6.78-இன்ச் 3டி கர்வ்டு 8டி எல்டிபிஓ அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

ப்ராசஸரை பொறுத்தவரை, இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 (Qualcomm Snapdragon 7+ Gen 3) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த புதிய சிப்செட்டை கொண்டு இந்தியாவில் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போனும் கூட இதுவாகும். மேலும் இது 16ஜிபி வரை LPDDR5X ரேம் மற்றும் 512ஜிபி வரை UFS 4.0 ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ரியல்மி யுஐ 5 கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் அதன் பேக் பேனலில் டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் ஓஐஎஸ் ஆதரவுடன் 50-மெகாபிக்சல் மெயின் சென்சார் + 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் உள்ளது. முன்பக்கத்தில் 32மெகாபிக்சல் செல்பீ ஷூட்டர் உள்ளது.

கடைசியாக ரியல்மி ஜிடி 6டி ஸ்மார்ட்போன் ஆனது 5500mAh பேட்டரியுடன் வருகிறது. இது 120W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ( 120W fast charging) ஆதரிக்கிறது. ரியல்மி நிறுவனத்தின் கூற்றுப்படி இது வெறும் 10 நிமிடங்களில் ஸ்மார்ட்போனில் உள்ள பேட்டரியை 50 சதவிகிதம் சார்ஜ் செய்யும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
First official sale of Realme GT 6T in India on May 29 Check Price Offers Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X