சித்தப்பு.. என்னது இது.? மொழுக்கட்டினு இருக்கு.. பட்ஜெட் விலைனு சொல்லி வேலையை காட்டிய Nothing நிறுவனம்!
மறுபடியும் முதல்ல இருந்தா.. என்று கேட்க தூண்டும்படியான ஒரு வேலையை நத்திங் (Nothing) நிறுவனம் செய்துள்ளது. நத்திங்கின் முதல் 2 ஸ்மார்ட்போன்களான நத்திங் போன் 1 மற்றும் போன் 2 ஆகிய இரண்டுமே மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அறிமுகமாகி "பல்பு" வாங்கின.
நத்திங் போன் 1 (Nothing Phone 1) மாடலாவது சற்றே வித்தியாசமான ஸ்மார்ட்போனை விரும்பியவர்களின் மத்தியில் பிரபலம் அடைந்தது. ஆனால் நத்திங் போன் 2 (Nothing Phone 2) அப்படி எந்தவிதமான பிரபலத்தையும், ஈர்ப்பையும் பெறவில்லை. இன்னும் சொல்லப்போனால் அறிமுகமான சில மாதங்களிலேயே நத்திங் போன் 2-வின் மீது ரூ.5000 நிரந்தர விலைக்குறைப்பு (Price Cut) அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் கார்ல் பெய் தலைமையிலான நத்திங் நிறுவனம், நத்திங் போன் 2ஏ என்கிற மாடலில் பணிபுரிந்து வருவதாகவும், இது பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்றும் தகவல் வெளியானது. இது நத்திங் போன் 1 மற்றும் போன் 2 மீது எதிர்பார்ப்பை வைத்து ஏமாந்து போனவர்களை கூட ஈர்க்கும்படி இருக்குமென்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்.. நத்திங் போன் 2 ஏ தொடர்பான ஒரு லீக்ஸ் தகவல் அனைவரின் எதிர்பார்ப்புகளையும் "ஆஃப்" செய்துள்ளது.
அப்படி என்ன தகவல் வெளியாகியுள்ளது? அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன்னதாக நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனின் பின்பக்க வடிவமைப்பை (Back Panel Design) காட்டும் ஒரு புகைப்படம் ஆன்லனில் லீக் ஆகியுள்ளது. அந்த புகைப்படத்தில் நத்திங் போன் 2ஏ-வின் பேக் பேனலில் எந்தவிதமான கிளிஃப் இன்டர்ஃபேஸையும் (Glyph Interface) காண முடியவில்லை.

அதாவது நத்திங் போன் 1 மற்றும் நத்திங் 2 ஆகிய இரண்டுமே ஒரளவிற்க்கு விற்பனையாக, முக்கிய காரணமாக இருந்த கிளிஃப் இன்டர்ஃபேஸ் வடிவமைப்பானது நத்திங் போன் 2ஏ-வில் இடம்பெறப்போவதில்லை. பட்ஜெட் விலையில் கிளிஃப் இன்டர்ஃபேஸ் டிசைனை எதிர்பார்த்தவர்களுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
அறியாதோர்களுக்கு கிளிஃப் இன்டர்ஃபேஸ் என்பது நத்திங் போன் 1 மற்றும் போன் 2 ஸ்மார்ட்போன்களின் பின்புறத்தில் இடம்பெற்றுள்ள ஒரு கஸ்டமைஸபிள் இன்டர்ஃபேஸ் (Customizable Interface) ஆகும். இது அழைப்புகள் வரும் போது மற்றும் நோட்டிபிஃகேஷகளின் போது, பேக் பேனலில் எல்ஐடி லைட்கள் (LED Lights) ஒளிரும்.

நத்திங் போன் 2ஏ-வின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? எப்போது அறிமுகமாகும்? நத்திங்கின் மூன்றாவது ஸ்மார்ட்போனான நத்திங் போன் 2ஏ மாடலானது ரூ.30,000 - ரூ.35,000 க்குள் என்கிற விலைக்குள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது எம்டபுள்யூசி 2024 நிகழ்வின் (MWC 2024 Event) போது, பிப்ரவரி 27 ஆம் தேதியன்று அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நத்திங் போன் 2ஏ என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இது நத்திங் போன் 1 மற்றும் போன் 2 மாடல்களில் இருப்பதைவிட, சற்றே வேறுபட்ட கேமரா செட்டப்பை (Camera Setup) கொண்டிருக்கும். லீக்கான நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனின் பேக் பேனலில், மேல்-இடது மூலையில் இரண்டு கேமரா லென்ஸ்கள், தனித்தனியாக, செங்குத்தாக அமைக்கப்படுள்ளது.
ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) உடன் வரும் நத்திங் போன் 2ஏ மாடலானது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான 6.7 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். இது மீடியாடெக் டைமென்சிட்டி 7200 சிப்செட் உடன் வர அதிக வாய்ப்புள்ளது. கேமரா செட்டப்பில் 50எம்பி சாம்சங் ஜிஎன்9 சென்சார் + 50எம்பி ஜேஎன்1 கேமரா இடம்பெறலாம். முன்பக்கத்தில் 32எம்பி சோனி IMX615 செல்பீ கேமராவை பேக் செய்யலாம்.
Photo Courtesy: Onleaks x SmartPrix


Click it and Unblock the Notifications








