Realme Narzo N55 அறிமுகம்: பக்கா பட்ஜெட் விலை.. 64MP கேமரா, 5000mAh பேட்டரினு சும்மா நச்சுனு இருக்கு!
ரியல்மி (Realme) நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனாக ரியல்மி நார்சோ என்55 (Realme Narzo N55) இன்று (ஏப்ரல் 12, புதன்கிழமை) இந்தியாவில் அறிமுகமானது. இது ரியல்மியின் லேட்டஸ் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் மட்டுமல்ல, இது ரியல்மியின் முதல் என்-சீரீஸ் (N-Series) ஸ்மார்ட்போனும் கூட!
ரியல்மி நார்சோ என்55 முக்கிய அம்சங்கள்: இது 91.4% ஸ்க்ரீன் டூ பாடி ரேஷியோ, 680நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 180Hz டச் சாம்ப்ளிங் மற்றும் 90ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் உடனான 6.72 இன்ச் FHD+ டிஸ்பிளேவுடன் வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி88 (MediaTek Helio G88 SoC) ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை, இது 64 மெகாபிக்சல் ஏஐ மெயின் கேமராவுடன் "குறிப்பிடப்படாத" இரண்டாம் நிலை கேமராவை பேக் பேக் செய்கிறது. நிறுவனத்தின் கூற்றுப்படி இதன் 64MP மோட் (64MP Mode) கூர்மையான புகைப்படங்களை உறுதி செய்யும். முன்பக்கத்தை பொறுத்தவரை 8எம்பி ஏஐ செல்பீ கேமரா உள்ளது.
4ஜிபி மற்றும் 6ஜிபி LPDDR4X ரேம் உடன் வரும் ரியல்மி நார்சோ என்55 ஸ்மார்ட்போனானது 64ஜிபி மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜையும் பேக் செய்கிறது. கூடுதலாக மைக்ரோ எச்டி கார்டு ஸ்லாட் வழியாக 1டிபி வரையிலான மெமரி எக்ஸ்டென்க்ஷனையும் ஆதரிக்கும் (2 நானோ கார்ட் ஸ்லாட்ஸ் + 1 மைக்ரோ எச்டி ஸ்லாட்).
பேட்டரியை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவை வழங்கும் 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது. கடைசியாக இது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ (Android 14 OS) அடிப்படையாகக் கொண்ட நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஓஎஸ் ஆன ரியல்மி யுஐ 4.0 (Realme UI 4.0) மூலம் இயங்குகிறது.
ரியல்மி நார்சோ என்55 விலை மற்றும் விற்பனை: ப்ரைம் ப்ளூ மற்றும் ப்ரைம் பிளாக் என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரியல்மி நார்சோ என்55-யின் ஆரம்ப விலை ரூ.10,999. இது 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையாகும். மறுகையில் உள்ள 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கும்.
இந்த 2 வேரியண்ட்களுமே ரியல்மி வலைத்தளம் மற்றும் அமேசான் இந்தியா வழியாக வருகிற ஏப்ரல் 18 ஆம் தேதி முதல் வாங்க கிடைக்கும். அறிமுக சலுகையாக பேஸிக் வேரியண்ட் மீது ரூ.700 மற்றும் ஹை எண்ட் வேரியண்ட் மீது ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும்.


Click it and Unblock the Notifications