நம்ப முடியாத விலையில் 1500 ப்ரீ-லோடட் சாங்ஸ் உடன் சரிகம கார்வான் மொபைல்!

|

நம்மில் பலருக்கும் சரிகம கார்வான் (Saregama Carvaan) பற்றி பெரிய அளவிலான அறிமுகமே தேவை இல்லை.

உங்களில் சிலர் - பழைய ரேடியோ வடிவிலான சரிகம கார்வான் ம்யூசிக் பிளேயரை பயன்படுத்தி வரலாம் அல்லது குறைந்த பட்சம் யூட்யூப் விளம்பரங்களிலாவது பார்த்து இருப்பீர்கள்!

பழைய பாடல்களை வைத்து கல்லா கட்டும் ஒரு கம்பெனி!

பழைய பாடல்களை வைத்து கல்லா கட்டும் ஒரு கம்பெனி!

நூற்றுக்கணக்கான பழைய 'எவர்-க்ரீன்' பாடல்களை ப்ரீ-லோட் செய்து, அதையே ஒரு முக்கிய வியாபார புள்ளியாக வைத்து கல்லா கட்டும் ஒரு நிறுவனம் என்றால் - அது சரிகம கார்வான் தான்!

தற்போது இந்த நிறுவனம் ரேடியோ பெட்டி வடிவிலான ம்யூசிக் பிளேயரை தொடந்து அதன் முதல் மொபைல் போனையும் அறிமுகம் செய்துள்ளது!

சூப்பர்-பட்ஜெட் விலையில் அறிமுகமான Redmi A1.. செப்.9 முதல் விற்பனை!சூப்பர்-பட்ஜெட் விலையில் அறிமுகமான Redmi A1.. செப்.9 முதல் விற்பனை!

சுவாரசியமான விடயம் என்னவென்றால்?

சுவாரசியமான விடயம் என்னவென்றால்?

சரிகம கார்வான் அறிமுகம் செய்துள்ள அதன் முதல் மொபைல் போனும் கூட நூற்றுக்கணக்கான பழைய 'எவர்-க்ரீன்' பாடல்களை ப்ரீ-லோட் செய்கிறது.

இந்த மொபைல் போன் வேறு என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதன் விலை நிர்ணயம் என்ன? இந்த கார்வான் மொபைல் எதன் வழியாக வாங்க கிடைக்கிறது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

மொத்தம் 2 ஸ்க்ரீன் சைஸ்களில் வெளியாகி உள்ளது!

மொத்தம் 2 ஸ்க்ரீன் சைஸ்களில் வெளியாகி உள்ளது!

சரிகம கார்வான் மொபைல் ஆனது ஒரு கீபேட் மொபைல் போன் ஆகும். அதாவது இதுவொரு எளிமையான என்ட்ரி-லெவல் பீச்சர் போன் ஆகும்

தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளை ஆதரிக்கும் இந்த கார்வான் மொபைல் இரண்டு ஸ்க்ரீன் அளவுகளில் வருகிறது - அவைகள் 2.4 இன்ச் மற்றும் 1.8 இன்ச் ஆகும்.

ரூ.8,999-க்கு இதுக்கு மேல வேற என்ன வேணும்? கண்ணை மூடிக்கிட்டு வாங்கலாம்!ரூ.8,999-க்கு இதுக்கு மேல வேற என்ன வேணும்? கண்ணை மூடிக்கிட்டு வாங்கலாம்!

மொத்தம் 1500 பாடல்கள்!

மொத்தம் 1500 பாடல்கள்!

முன்னரே குறிப்பிட்டபடி, இந்த மொபைல் போன் ஆனது லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே, கிஷோர் குமார், முகமது ரஃபி மற்றும் பல பழம்பெரும் கலைஞர்களால் பாடப்பட்ட எவர் க்ரீன் பாடல்களை லோட் செய்கிறது.

இந்த மொபைலில் ப்ரீ-லோடட் செய்யப்பட்ட பாடல்களை இயக்க இண்டர்நெட் வசதி தேவையில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், பாடல்களுக்கு இடையே உங்களை தொந்தரவு செய்யும் வகையில் எந்த விதமான விளம்பர இடைவேளைகளும் இருக்காது!

பாடல்கள் மட்டும் அல்ல.. இன்னும் நிறைய இருக்கிறது!

பாடல்கள் மட்டும் அல்ல.. இன்னும் நிறைய இருக்கிறது!

1500 ப்ரீ-லோடட் பாடல்களை தவிர்த்து, சரிகம கார்வான் மொபைல் போன் ஆனது வயர்லெஸ் எஃப்எம், டிஜிட்டல் கேமரா, எல்இடி டார்ச், ஆக்ஸ் அவுட், மல்டி லாங்குவேஜ் சப்போர்ட், வாய்ஸ் ரெக்கார்டிங், கால் ரெக்கார்டிங், டூயல் சிம், 8 ஜிபி மெமரி கார்டு போன்ற அம்சங்களையும் வழங்குகிறது.

BSNL பயனர்களுக்கு ஒரு பேட் நியூஸ்; இருந்தது ஒன்னு.. இப்போ அதுவும் போச்சு!BSNL பயனர்களுக்கு ஒரு பேட் நியூஸ்; இருந்தது ஒன்னு.. இப்போ அதுவும் போச்சு!

பெர்சனல் ஸ்டோரேஜும் உண்டு!

பெர்சனல் ஸ்டோரேஜும் உண்டு!

இந்த மொபைல் போனில் 2ஜிபி ப்ரீ ஸ்பேஸும் அணுக கிடைக்கும். ஆக உங்களின் தனிப்பட்ட ம்யூசிக் கலெக்ஷன், வீடியோக்கள் அல்லது போட்டோக்களுக்கும் கூட இந்த போனில் இடமுண்டு!

என்ன விலை?

என்ன விலை?

2500mAh பேட்டரி, 2ஜிபி ரேம் மற்றும் 32எம்பி ஸ்டோரேஜ் மற்றும் மீடியாடெக் ப்ராசஸர் உடன் வரும் இந்த மொபைல் போன் 1 வருட உத்தரவாதத்தையும் வழங்குகிறது.

இதன் 2.4 இன்ச் டிஸ்பிளே மாடல் ஆனது ரூ.2490 க்கும், 1.8 இன்ச் டிஸ்பிளே மாடல் ஆனது ரூ.1990 க்கும் வாங்க கிடைக்கிறது. இது எமரால்டு கிரீன், கிளாசிக் பிளாக் மற்றும் ராயல் ப்ளூ என்கிற 3 கலர் ஆப்ஷன்களின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது.

கேட்டதும் ஆர்டர் போடும் விலையில் அறிமுகமான NOKIA-வின் புதிய ஃப்ளிப் போன்!கேட்டதும் ஆர்டர் போடும் விலையில் அறிமுகமான NOKIA-வின் புதிய ஃப்ளிப் போன்!

எதன் வழியாக வாங்க கிடைக்கும்?

எதன் வழியாக வாங்க கிடைக்கும்?

புதிய சரிகம கார்வான் மொபைல் போன் ஆனது பிரபல இகாமர்ஸ் வலைத்தளங்களான Amazon மற்றும் Flipkart வழியாக வாங்க கிடைக்கிறது.

மேலும் இது நிறுவனத்தின் சொந்த வலைதளமான saregama.com வழியாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
First Mobile Phone From Saregama Carvaan With 1500 Pre-Loaded Songs Under Rs 2500

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X