இன்டெல் பிராசஸருடன் முதல் ஸ்மார்ட்போன்: சாம்சங் அறிமுகப்படுத்துகிறது

ஆம், அடுத்த ஆண்டு மத்தியில் இன்டெல் பிராசஸருடன் முதல் ஸ்மார்ட்போனை சாம்சங் அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு சான்விச் ஐஸ்கிரீம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்டெல் சிஇஓ கூறுகையில்,"சமீபத்தில் மார்க்கெட்டில் அமோக வரவேற்பை பெற்ற ஆட்டம் பிராசஸர் பிளாட்பார்மில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய பிராசஸரை உருவாக்கி வருகிறோம்.
இது வாடிக்கையாளர்களின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றும் என்பதோடு, புதிய சாதனங்களையும் சப்போர்ட் செய்யும் வகையில் இருக்கும் என்று, சூசகமாக தெரிவித்தார்.
மேலும், 32 என்எம் பிராசஸரை விட குறைந்த திறன் கொண்ட 22 என்எம் மற்றும் 14 என்எம் ஆகிய குறைந்த திறன் கொண்ட பிராசஸர்களையும் உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் இன்டெல் தெரிவித்துள்ளது. இதனால், மார்க்கெட் போட்டியை சமாளிக்க முடியும் என்று அந்த நிறுவனம் கருதுகிறது.
எது எப்படி இருந்தாலும், இன்டெல் பிராசஸருடன் வரும் ஸ்மார்ட்போன் அதிக பெர்ஃபார்மென்ஸ் கொண்டதாக இருக்கும் என்பதால் நிச்சயம் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications