ஒப்போ ரெனோ10 ப்ரோ+ 5ஜி ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷன்ஸ்: அசத்தும் கேமரா, மிரட்டும் செயல்திறன்!

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ நிறுவனம் ஒரு மிகப்பெரிய சக்தியாக இருந்து வருகிறது. இந்த உலகளாவிய தொழில்நுட்ப பிராண்டானது பெரிய விஷயங்களில் கவனம் செலுத்தாமல் சிறிய விவரங்களில் அதிக கவனம் செலுத்தும் ஆர்வத்தை கொண்டுள்ளது. அதற்கு ரெனோ சீரீஸ் ஒரு சிறந்த உதாரணமாகும். இம்முறை, ஒப்போ ரெனோ10 சீரீஸ் அதன் முதல் வகையான டெலிஃபோட்டோ போர்ட்ரெய்ட் கேமராவுடன் வருகிறது.
ஒப்போ ரெனோ10 ப்ரோ+ 5ஜி, ரெனோ10 சீரிஸின் பிளாக்ஷிப் மாடலாகும்; இது தொழில்துறையின் மிக உயர்ந்த அம்சங்களையும் கொண்டுள்ளது. குறிப்பாக இது 64எம்பி டெலிஃபோட்டோ-போர்ட்ரெய்ட் கேமராவை கொண்டுள்ளது; இது முதல் முறையாக ரெனோ சீரீஸில் வரும் அதிநவீன இமேஜிங் தொழில்நுட்பமாகும்.
இந்த பிளாக்ஷிப் மாடலானது மிகவும் மெல்லிய மற்றும் இலகுவான பெரிஸ்கோப் கேமரா செட்டப்பையும் கொண்டுள்ளது. இப்படியாக உற்சாகத்தை அடக்க முடியாமல் ரெனோ10 ப்ரோ+ 5ஜி ஸ்மார்ட்போனை எங்கள் கையில் எடுக்க நிறைய காரணங்கள் உள்ளன.

அல்ட்ரா-கிளியர் போர்ட்ரெய்ட் கேமரா செட்டப்!
ரெனோ10 சீரீஸ் உங்களின் புகைப்பட திறன்களை மேம்படுத்த வலுவான இமேஜிங் வன்பொருள் மற்றும் மென்பொருளை கொண்டுள்ளது.
அவற்றில் முதன்மையானதாக டெலிஃபோட்டோ போர்ட்ரெய்ட் கேமரா உள்ளது. இதன் 64எம்பி டெலிஃபோட்டோ-போர்ட்ரெய்ட் கேமராவானது படைப்பாளிகளுக்கு 3எக்ஸ் ஆப்டிகல் ஜூமில் புகைப்படங்களை கைப்பற்றும் திறனை வழங்குகிறது, மேலும் ஃபிரேம்களை உருவாக்கும் போது அதிக சுதந்திரத்தை வழங்குகிறது. இதன் ½-இன்ச் சென்சார் ஆனது விதிவிலக்கான ஒளி உணர்திறனை வழங்குகிறது.
டெலிஃபோட்டோ-போர்ட்ரெய்ட் கேமரா ஒரு பெரிய எஃப்/2.5 அபெர்க்ஷர் உடன் 25செமீ குறைந்தபட்ச ஃபோகஸிங் டிஸ்டன்ஸ் உடன் வருகிறது. இது போட்டோவில் உள்ள டீட்டெயில்கள் மற்றும் கிளாரிட்டியை தியாகம் செய்யாமல் இயற்கையான பொக்கே எஃபெக்ட்டை அடைய உதவுகிறது.
இது ஒருபுறம் இருக்க, ரெனோ10 ப்ரோ+ 5ஜி ஆனது 50எம்பி ப்ரைமரி கேமராவையும் கொண்டுள்ளது, இது பெரிய 1/1.56-இன்ச் சோனி ஐஎம்எக்ஸ்890 சென்சார் உடன் எஃப்/1.8 அபெர்க்ஷர், ஓஐஎஸ் மற்றும் பிக்சல் ஓம்னி-டைரக்ஷன் பிடிஏஎஃப் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. இவைகள் அனைத்தும் ரெனோ10 ப்ரோ+ 5ஜி-யின் அல்ட்ரா-க்ளியர் கேமரா செட்டப்பை பரிசோதிப்பதற்கான அடித்தளத்தை உருவாக்குகின்றன.
இதில் 112 டிகிரி அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமராவும் உள்ளது. இதிலுள்ள 5பி லென்ஸ் மாட்யூல் மற்றும் 1.12um-அளவிலான பிக்சல்ஸ் பின்னிங் அம்சங்களானது, சூப்பர் வைட் ஃபீல்ட் காட்சியை வழங்கும், அதேசமயம் விதிவிலக்கான குவாலிட்டியையும் கொடுக்கிறது. இதன் கேமரா செட்டப்பில் ஆன்ட்டி-ஃபேஷியல் டிஸ்டர்ஷன் அல்காரிதம் உள்ளது, இது ஆக்கப்பூர்வமான, செயல்திறன் நிரம்பிய அல்ட்ரா-வைட் போர்ட்ரெய்ட்களை கைப்பற்ற உதவுகிறது.
முன்பக்கத்தை பொறுத்தவரை, ரெனோ10 ப்ரோ+ 5ஜி ஆனது ஆர்ஜிபிடபுள்யூ பிக்சல் சீரீஸ் உடனான சோனி ஐஎம்எக்ஸ்709 சென்சாரை கொண்ட 32எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது. ஒப்போவால் வடிவமைக்கப்பட்ட இந்த கேமரா சென்சார் ஆனது சோனியுடன் இணைந்து, குறைந்த ஒளி சூழலில் படமெடுக்கும் போது மேம்படுத்தப்பட்ட கலர் ரீப்ரொடெக்ஷன், லைட் கேப்சர் மற்றும் இமேஜ் குவாலிட்டியை உறுதி செய்கிறது. இந்த செல்பீ கேமராவானது, குறைந்தபட்சம் 15 செமீ ஃபோகஸிங் டிஸ்டன்ஸ் உடன் சேர்த்து ஆட்டோ-ஃபோகஸ் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. இது செல்பீ ஷூட்டர்களிடையே மிகவும் அரிதான கூட்டணியாகும். இது உங்கள் நண்பர்களுடனான அல்ட்ரா-க்ளியர் செல்பீக்களை எடுக்க உதவும் சரியான ஷூட்டராக இருக்கும்.

நேர்த்தியான 3டி கர்வ்டு ஓஎல்இடி டிஸ்பிளே!
ஒப்போவின் இந்த புதிய சீரீஸ் முழுவதுமே 3டி கர்வ்டு ஓஎல்இடி டிஸ்பிளேக்களுடன் வருகின்றன. இதன் மூலம் ஒப்போ, டிஸ்பிளே பிரிவில் அதன் விளையாட்டை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. ஆனால் பிளாக்ஷிப் லெவலை கருத்தில் கொண்டு, ரெனோ10 ப்ரோ+ 5ஜி ஆனது சற்றே சிறந்ததாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 120ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் கஸ்டம் 10-பிட் ஓஎல்இடி டிஸ்பிளே மற்றும் எச்டிஆர்10+ ஆதரவுடன் 2772 x 1240 ரெசல்யூஷன் உடன் வருகிறது. இந்த எல்லா அம்சங்களுடனும் மேம்படுத்தப்பட்ட டூயல் ட்ராக் ஸ்டீரியோ ஸ்பீக்கரும் சேர, ரெனோ10 ப்ரோ+ 5ஜி ஆனது உங்கள் பாக்கெட்டில் இருக்கும் திரையரங்காக மாறுகிறது.
இதன் டிஸ்பிளே பிரைட்னஸை ஹை-ப்ரைட்னஸ் பயன்முறையில் 1100 நிட்ஸ் வரை கொண்டு செல்லலாம். மேலும் எச்டிஆர் கன்டென்ட்டை பிளே செய்யும் போது அதை 1400 நிட்ஸ் வரை உயர்த்தலாம், இது ஒரு மொபைல் போனில் உள்ள பிரகாசமான பேனல்களில் ஒன்றாகும்.
ரெனோ10 ப்ரோ+ 5ஜி ஸ்மார்ட்போனின் இன்னொரு சிறப்பு அம்சம் - ப்ரோஎக்ஸ்டிஆர் எக்ஸ்போஷர் கண்ட்ரோல் ஆகும். இது நிலையான எஸ்டிஆரை விட 8 மடங்கு அதிக டைனமிக் வரம்புடன் எச்டிஆர்-இல் ஸ்க்ரீன் ப்ரைட்னஸை சரிசெய்கிறது.

நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது!
ரெடினோ10 ப்ரோ+ 5ஜி ஆனது மிகவும் சக்திவாய்ந்த ரெனோ ஸ்மார்ட்போன் மட்டுமல்ல. இது அழகான, இலகுவான, மெலிதான மற்றும் பிரீமியம் வடிவமைப்பையும் கொண்டுள்ளது. இது ஒரு நேர்த்தியான கர்வ்டு ஃபிரேமை கொண்டுள்ளது, இது 3டி கிளாஸ் பேக் பேனலுடன் தடையின்றி ஒன்றிணைந்து எளிதான பிடிப்பை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனின் எடை வெறும் 195 கிராம் மட்டுமே உள்ளது மற்றும் இது அளவீட்டில் 8.28 மிமீ மெல்லியதாக உள்ளது. இது தொழில்துறையின் மிகவும் மெல்லிய மற்றும் இலகுவான பெரிஸ்கோப் கேமரா ஸ்மார்ட்போனும் கூட!
இந்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனானது கிளாஸ் மற்றும் அலுமினியத்தை பிளவுபடுத்தும் நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்ப டூ-டோன் கலர்வே-ஐ கொண்டுள்ளது. ஒப்போ நிறுவனம், இது டிராப் மற்றும் கொரிஷனை எதிர்க்கும் என்று கூறுகிறது; மேலும் கேமரா மாட்யூல்களுக்கு தேவையான பாதுகாப்பையும் வழங்குகிறது.
ரெனோ10 ப்ரோ+ 5ஜி ஆனது இரண்டு அற்புதமான கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது - க்ளாஸி பர்பிள் மற்றும் சில்வரி க்ரே. முந்தையது பட்டுப்போன்ற வெளிப்படையான கிளாஸ் பூச்சை கொண்டுள்ளது. அடுத்ததில், நுட்பமான உலோக அமைப்பு மற்றும் கறை-எதிர்ப்பு பூச்சை உருவாக்க ஒப்போ நிறுவனம் அதன் க்ளோ செயல்முறையை பயன்படுத்தியுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பேக் பேனலை சேதங்களில் இருந்து பாதுகாக்க கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்ஷனும் உள்ளது.

கண் சிமிட்டும் நேரத்தில் சார்ஜ் ஆகிறது!
ரெனோ10 ப்ரோ+ 5ஜி ஆனது 100W சூப்பர்வூக்சிடிஎம்-ஐ பயன்படுத்தி வேகமான மற்றும் ஸ்மார்ட் சார்ஜிங்கை வழங்குகிறது. இதைக்கொண்டு 4700எம்ஏஎச் டூயல் செல் பேட்டரியை வெறும் 9 நிமிடங்கள் 30 வினாடிகளில் 1-50% வரை சார்ஜ் செய்யலாம். மேலும் 100% ஆனது வெறும் 27 நிமிடங்களில் கிடைக்கும்! நீங்கள் எங்களை நம்பவில்லை என்றால், இந்த ஸ்மார்ட்போன் டியுவி ரெயின்லேண்ட் சோதனையில் தேர்ச்சி பெற்றுள்ளது என்பதையும், வெறும் 5 நிமிட சார்ஜில் 2 மணிநேரம் வரை பயன்பாட்டை வழங்குகிறது என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.
இதன் சார்ஜிங் சிஸ்டம் ஆனது பேட்டரி ஹெல்த் இன்ஜின் (பிஎச்இ) மூலம் வழிநடத்தப்படுகிறது. இது சமீபத்தில் 2023 சீல் வணிக நிலைத்தன்மை விருதை பெற்றது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த விருது, ஒப்போவால் உருவாக்கப்பட்ட பிஎச்இ தொழில்நுட்பம் ஆனது, தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மூலம் நிலைத்தன்மையை மேம்படுத்தும் அதன் முயற்சிகளுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரத்தை அளித்துள்ளது. 1,600 சார்ஜ் சுழற்சிகளுக்குப் பிறகும், நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக, பேட்டரி அதன் ஆரோக்கியத்தை 80% வரை பராமரிப்பதை பிஎச்இ உறுதி செய்கிறது.
இதன் பேட்டரி டிபார்ட்மெட்ன்டில் உள்ள இன்னொரு முக்கியமான விஷயம் - அதன் கஸ்டம் சூப்பர்வூக் எஸ் பவர் மேனேஜ்மென்ட் சிப் ஆகும். இப்போது ஒப்போவின் முதல் சுயாதீனமாக உருவாக்கப்பட்ட பவர் மேனேஜ்மென்ட் சிப் ஆகும். இதன்கீழ் ஒரிஜினல் 3 சிப்களின் இடத்தில் 1 சிப்பில் 6 செயல்பாடுகள் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளன, மேலும் ஸ்மார்ட்ப்பனின் உள்ளே எடுத்துக்கொள்ளப்படும் இடமும் 45% குறைகிறது; கூடவே 99.5% வரை வெளியேற்ற திறனையும் வழங்குகிறது. இது தொழில்துறையிலேயே மிகவும் உயர்ந்த எண்கள் ஆகும்.
இந்த ஸ்மார்ட்போன் டியுவி ரெயின்லேண்ட் சேஃப் ஃபாஸ்ட்-சார்ஜ் சிஸ்டம் சான்றிதழையும் பெற்றுள்ளது, இது மொத்தம் 40 சோதனைகளை உள்ளடக்கியது. அதாவது வயர்டு சார்ஜர், கேபிள், மொபைல் போன் மற்றும் மொபைல் உற்பத்தி முறையின் நம்பகத்தன்மையை சோதித்து, கூடுதல் கடுமையான சூழல் சோதனைகளுடன் இணைந்து நம்பகமான ஒப்போ ஃபிளாஷை சார்ஜ் எக்ஸ்பீரியன்ஸை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்னும் வேகமான மற்றும் சிறந்த ரெனோ போன்!
ஒப்போ ரெனோ10 ப்ரோ+ 5ஜி ஆனது ரெனோ சீரீஸ் வரலாற்றில் மிகவும் வேகமான ஸ்மார்ட்போன் ஆகும், இதில் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 ப்ராசஸர் உள்ளது. இது 4என்எம் டிஎஸ்எம்சி செயல்முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சிப்செட் ஆற்றல் செயல்திறனில் 30% முன்னேற்றத்தை வழங்குகிறது. இது டைனமிக் கம்ப்யூட்டிங் இன்ஜின் மற்றும் 12ஜிபி வரையிலான ரேம் ஆகியவற்றுடன் இணைந்து, ரெனோ10 ப்ரோ+ 5ஜி ஸ்மார்ட்போனை ஒரே நேரத்தில் 44 ஆப்ஸ்களை ஓவர்லோடிங் சிக்கல் இல்லாமல் அல்லது டேட்டா லாஸ் இல்லாமல் திறந்து வைக்கவும் உதவுகிறது.
இந்த கருத்தை நிரூபிக்க, ஒப்போ நிறுவனமானது டியுவி எஸ்யுடி 48-மாத ஃப்ளூயன்ஸி ரேட்டிங் ஏ-ஐ பெற்றுள்ளது. மொபைல் போன் ஃப்ளூயன்ஸியில் 'ஏ' என்பது மிக உயர்ந்த மதிப்பீடாகும். இது ஸ்மார்ட்போன் வேகம் குறையாமல், குறைந்தது நான்கு ஆண்டுகளுக்கு புதியதாக செயல்படுவதை உறுதி செய்கிறது.
மேலும் ரெனோ10 ப்ரோ+ 5ஜி ஆனது மேம்படுத்தப்பட்ட அல்ட்ரா கண்டக்டிவ் கூலிங் சிஸ்டத்துடன் வருகிறது, இது 1,800W/mk வரை வெப்ப கடத்துத்திறனை வழங்குகிறது, இது ஒரு பெரிய விசி லிக்விட் கூலிங் சர்ஃபேஸ் உடன் இணைந்து, கேமிங் அல்லது நீட்டிக்கப்பட்ட வீடியோ ஷூட்டிங்கின் போது ஸ்மார்ட்போன் குளிர்ச்சியாக இருப்பதை உறுதி செய்கிறது.

கலர்ஓஎஸ் 13.1 உடன் தடையற்ற மற்றும் ஸ்மார்ட் அனுபவம்!
ரெனோ10 சீரீஸ் ஆனது நிலையான மற்றும் மென்மையான கலர்ஓஎஸ் 13.1 யுஐ-இல் இயங்குகிறது, இது சமீபத்திய ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்டது மற்றும் மல்டி ஸ்க்ரீன் கனெக்ஷன் போன்ற ஸ்மார்ட் அம்சங்களுடன் வருகிறது. இது பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களை மற்ற டிவைஸ்களுடன் தடையின்றி கனெக்ட் செய்ய அனுமதிக்கிறது; ஒரே நேரத்தில் பல்வேறு ஸ்க்ரீன்களில் வேலை செய்ய உதவுகிறது.
ப்ரொஃபைல் புகைப்படங்கள் மற்றும் சாட் ஸ்கிரீன்ஷாட்களில் உள்ள பெயர்கள் போன்ற முக்கியமான தகவல்களை தானாக அடையாளம் கண்டு பிக்சலேட் செய்யும் அளவுக்கு இந்த ஓஎஸ் ஸ்மார்ட்டாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளேவும் உள்ளது. இந்த ஓஎஸ் வழியாக இசையை கட்டுப்படுத்தலாம் மற்றும் போனைத் திறக்காமலேயே சோமோடோ மற்றும் ஸ்விக்கி போன்ற உணவு டெலிவரி ஆப்களை சரிபார்க்கலாம்.
ரெனோ10 ப்ரோ+ 5ஜி ஸ்மார்ட்போனில் புதிய அம்சமாக சூப்பர் ஹேண்டி இன்ஃப்ராரெட் ரிமோட் கண்ட்ரோல் சேர்க்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி, உங்கள் ஏர் கண்டிஷனர், ஸ்மார்ட் டிவி மற்றும் பாரம்பரிய ரிமோட் கொண்டு கட்டுப்படுத்தபடும் உங்கள் வீட்டில் உள்ள அனைத்து உபகரணங்களையுமே கட்டுப்படுத்தலாம்.
எங்களுடைய ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷன்ஸ்!
ரெனோ10 ப்ரோ+ 5ஜி ஸ்மார்ட்போனை பயன்படுத்திய சிறிது காலத்திற்குள்ளேயே, இதுவொரு பிளாக்ஷிப் மற்றும் அதிநவீன அம்சங்களால் நிரம்பி உள்ளதை கண்டு திகைத்துப்போனோம். தொழில்துறையின் முதல் டெலிஃபோட்டோ-போர்ட்ரெய்ட் கேமராக்கள் மற்றும் 100W சூப்பரவூக்சிடிஎம் ஃபாஸ்ட் சார்ஜிங் முதல் அதிநவீன கூலிங் சொல்யூஷன், மின்னல் வேகமான செயல்திறன் வரை, ரெனோ10 ப்ரோ+ 5ஜி ஆனது பிரமிக்க வைக்கும், ஒரு தரமான ஆல்-ரவுண்டர் ஸ்மார்ட்போனாகும்.
இதன் கேமரா செட்டப்பில் பல மணிநேர சோதனைகளை செய்தோம், போர்ட்ரெய்ட்கள் மற்றும் இயற்கைக்காட்சிகளை படம்பிடித்தோம். இதை சார்ஜ் செய்ய சில நிமிடங்கள் மட்டுமே செலவழித்தோம். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ள ஆப்களுக்கு இடையே வேகம் குறையாமல் மாறினோம், எந்த தடையுமின்றி போனில் வேலைகளை செய்தோம்.
விலை, விற்பனை மற்றும் சலுகைகள்!
ஒப்போ ரெனோ10 ப்ரோ+ 5ஜி இந்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் இதன் சிங்கிள் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.54,999 ஆகும். இந்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வருகிற ஜூலை 13 முதல் விற்பனைக்கு வரும். இது பிளிப்கார்ட், ஒப்போ ஸ்டோர் மற்றும் பிற முக்கிய சில்லறை விற்பனையாளர்களின் வழியாக வாங்க கிடைக்கும். ஒப்போ ரெனோ10 ப்ரோ+ 5ஜி யின் முதல் விற்பனையில் வாடிக்கையாளர்கள் பின்வரும் சலுகைகளை பெறலாம்.


ஜூலை 13 மற்றும் 19 க்கு இடையில் இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்கள் மைஒப்போ ரேஃபிளில் நுழைந்து துபாய் பயணம் மற்றும் பிற அற்புதமான பரிசுகளை வெல்லலாம். ஜூலை 13 - ஜூலை 31 க்குள் ரெனோ10 ப்ரோ+ 5ஜி மற்றும் ரெனோ10 ப்ரோ 5ஜி-ஐ வாங்கினால், ரூ.1500 என்கிற தள்ளுபடி விலையின் கீழ் ஒப்போ பேட் ஏர் (4ஜிபி + 128ஜிபி) மாடலை வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








