நாடித் துடிப்பை எகிற வைக்கும் நோக்கியா லுமியா-900!

நோக்கியா லுமியா-900 ஸ்மார்ட்போனிலும் ஏராளமான உயர் தொழில்நுட்ப வசதிகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த லுமியா-900 ஸ்மார்ட்போனும் சிறந்த திரை தொழில் நுட்பத்தினை கொண்டதாக இருக்கும். இதில், 1.4 ஜிகாஹெர்ட்ஸ் வேகம் கொண்ட பிராசஸர் கொண்டுள்ளதால் அதிக செயல் திறன் வாய்ந்ததாக இருக்கும்.
லுமியா-900 ஸ்மார்ட்போன் விண்டோஸ் டேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் என்று தெரிகிறது. ஆனால் இதை பற்றி அதிகார பூர்வமான கவல்கள் எதுவும் இல்லை. இதில் 8 மெகா பிக்ஸல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், உயர்ந்த ரக புகைப்படங்களையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் பெறலாம் என்பது கியாரண்டி.
ஆப்பிள் ஐபோன் போன்ற உயர் ரக ஸ்மார்ட்போன்களுக்கு சிறந்த போட்டியை கொடுக்கும் வகையில் இந்த புதிய ஸ்மார்ட்போனை நோக்கியா அறிமுகப்படுத்தி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த நோக்கியா லுமியா-900 ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு மார்க்கெட்டில் கால் பதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications