Home
Mobile

8.03-inch டிஸ்பிளே, 5700mAh பேட்டரி.. VIVO-ன் சிங்கிள் போன்.. Samsung, OnePlus ஆல் அவுட்!

சில வருடங்களுக்கு முன்பு வரையிலாக வெறும் கான்செப்ட் (Concept) ஆக மட்டுமே இருந்த போல்டபிள் ஸ்மார்ட்போன்கள் தற்போது பலருடைய கைகளில் "ஒரு வழக்கமான" ஸ்மார்ட்போனாக பயன்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளில் பல முக்கியமான போல்டபிள் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகின.

அவைகளில் சாம்சங் கேலக்ஸி இஸட் போல்ட் 5 (Samsung Galaxy Z Fold 5, ஒப்போ பைண்ட் என்2 பிளிப் (Oppo Find N2 Flip) போன்ற பல்வேறு லேட்டஸ்ட் நெக்ஸ்ட் ஜெனெரஷன் மாடல்களும் அடக்கம்; அதேபோலகூகுள் பிக்சல் போல்ட் (Google Pixel Fold) மற்றும் ஒன்பிளஸ் ஓப்பன் (OnePlus Open) போன்ற பர்ஸ்ட் ஜெனரேஷன் மாடல்களும் அடக்கம்.

8.03-inch டிஸ்பிளே..  VIVO-ன் புதிய போன்!

இதன்மூலம், பெரும்பாலான மொபைல் நிறுவனங்கள் தத்தம் போல்டபிள் டிவைஸ்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய மிகவும் ஆர்வமாக இருப்பதை வெளிப்படையாக அறிந்துகொள்ள முடிகிறது. இந்த வரிசையில் விவோ நிறுவனமும் நுழையத் தயாராக உள்ளது. இந்த பிராண்ட் அதன் போல்டபிள் ஸ்மார்ட்போனை இன்னும் இந்தியாவில் அறிமுகப்படுத்தவில்லை, ஆனால் கூடிய விரைவில் இந்த நிலை மாற உள்ளது.

ஒரு லேட்டஸ்ட் டீசர் வழியாக விவோ அதன் போல்டபிள் ஸ்மார்ட்போனான விவோ எக்ஸ் ஃபோல்ட் 3 ப்ரோ (Vivo X Fold 3 Pro) ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தி உள்ளது. சரியான வெளியீட்டு தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும் கூட, இந்த ஸ்மார்ட்போன் 2024 ஆம் ஆண்டின் ஜூன் மாத வாக்கில் இங்கே அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது உண்மையாகும் பட்சத்தில் ஏஐ திறன்களை உள்ளடக்கிய விவோ எக்ஸ் ஃபோல்ட் 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் இன்னும் சில நாட்கள் நடக்கும். இந்த ஸ்மார்ட்போன் பிஐஎஸ் (Bureau of Indian Standards - BIS) சான்றிதழ் இணையதளம் மற்றும் கீக்பென்ச் (Geekbench) தரவுத்தளத்தில் காணப்பட்டுள்ளதால், இது உடனடி வெளியீடு குறித்த வதந்திகளை மெங்கும் வலுப்படுத்துகிறது.

விவோ எக்ஸ் ஃபோல்ட் 3 ப்ரோ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? சமீபத்தி அறிக்கைகளின்படி, இந்த ஸ்மார்ட்போன் கீல் மெக்கானிஸத்தில் கார்பன் ஃபைபர் கீல் கூறுகளை கொண்ட முதல் போல்டபிள் போனாக இருக்கலாம். இந்த தொழில்நுட்பம், அதிக கையடக்க வசதிக்காக ஸ்மார்ட்போன் இலகுவாக இருப்பதை உறுதிசெய்கிறது.

மேலும் டிஏவி ரெயிண்லேண்ட் (TÅ"V Rheinland ) சோதனையின்படி, விவோ எக்ஸ் ஃபோல்ட் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 500,000 போல்ட்டுகள் வரை தாங்கக்கூடியது. அதாவது இது சுமார் 12 வருட நம்பகமான பயன்பாட்டிற்கு (12 years of reliable) சமமான ஒரு எண்ணிக்கை ஆகும்.

டிஸ்பிளேவை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் டூயல் டிஸ்பிளேவுடன் வரும்: 6.53-இன்ச் கவர் டிஸ்ப்ளே மற்றும் 8.03-இன்ச் இன்னர் அமோஎல்இடி எல்டிபிஓ ஃபோல்டிங் டிஸ்பிளே. இரண்டு டிஸ்பிளேக்களுமே 2480 x 2200 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் டால்பி விஷன் மற்றும் எச்டிஆர் 10 பிளஸ் போன்ற பிற அம்சங்களை ஆதரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை, விவோவின் லேட்டஸ்ட் டீஸர் இந்த ஸ்மார்ட்போனின் கேமரா செட்டப்பில் செய்ஸ் (ZEISS) ஆப்டிகல்ஸை சேர்ப்பதை எடுத்துக்காட்டுகிறது. இதில் OIS ஆதரவு உடனான 50-மெகாபிக்சல் அல்ட்ரா-சென்சிங் மெயின் கேமரா +64-மெகாபிக்சல் 3எக்ஸ் டெலிஃபோட்டோ லென்ஸ் + 50-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் இடம்பெறலாம். செல்பீக்களுக்காக 32 மெகாபிக்சல் கேமரா சேர்க்கப்படலாம்.

ப்ராசஸரை பொறுத்தவரை, இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 8 Gen 3 SoC) மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது சிறந்த கிராபிக்ஸ் செயல்திறனுக்காக அட்ரேனோ ஜிபியு உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 16ஜிபி வரையிலான LPDDR5X ரேம் மற்றும் 1டிபி வரையிலான UFS4.0 ஸ்டோரேஜ் உடன் பேக் செய்யப்படலாம்.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் வெறும் 236 கிராம் எடை மட்டுமே இருக்கும் என்பதையும் டீஸர் வழியாக உறுதிப்படுத்தி உள்ளது. இதற்கு 14.98-கிராம் கார்பன் ஃபைபர் கீலுக்கு தான் நாம் நன்றி சொல்லவேண்டும். கடைசியாக இந்த ஸ்மார்ட்போனை மடிக்கும்போது இது 11.2 மிமீ தடிமனை கொண்டதாக இருக்கும். பேட்டரியைப் பொறுத்தவரை, இது 5,700mAh பேட்டரியை கொண்டிருக்கலாம்.

விவோ எக்ஸ் ஃபோல்ட் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு அறிமுகமாகும்? இந்திய அறிமுகத்திற்கு விவோவின் இந்த லேட்டஸ்ட் போல்டபிள் ஸ்மார்ட்போன் பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் வழியாகவும், விவோவின் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் ரீடெய்ல் சேனல்கள் வழியாகவும் வாங்கு கிடைக்கும். இந்தியாவில் இது ரூ.1.15 - 1.17 லட்சம் என்கிற வரம்பிற்குள் அறிமுக, செய்யப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
First Foldable Phone With Carbon Fibre Keel Hinge Mechanism Vivo X Fold 3 Pro India Launch Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X