ப்பா என்னா காம்பினேஷன்.. புது OPPO போன்.. 200MP கேமரா, லாங் ரேன்ஜ் ஜூமிங், ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்!
ஒன்பிளஸ் 15, ஐக்யூ 15, ரியல்மி ஜிடி 8 ப்ரோ என எங்கு திரும்பினாலும் குவால்காம் நிறுவனத்தின் சமீபத்திய பிளாக்ஷிப் சிப்செட் ஆன ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) உடனான லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களை தான் பார்க்க முடிகிறது. இந்த பட்டியலில் ஒப்போவும் இணைகிறது!
இந்நிறுவனம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 உடனான 2 புதிய ஸ்மார்ட்போன்களை அடுத்தடுத்து அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 2 போன்களில் ஒன்று - 200எம்பி மெயின் கேமரா மற்றும் லாங் ரேன்ஜ் ஜூம் கேமராவுடன் வருகிறது. இன்னொன்று ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 உடன் அறிமுகமாகும் முதல் போல்டபிள் ஸ்மார்ட்போனாக வரவுள்ளது. கூடவே - 7000mAh பேட்டரி மாடல் ஒன்றும் வருகிறது.

போல்டபிள் ஸ்மார்ட்போன் - ஒப்போ பைண்ட் என்6 (OPPO Find N6) மாடல் ஆகும். நம்பகமான டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்துள்ள சமீபத்திய தகவலின்படி, ஒப்போ பைண்ட் என்5 மாடலானது ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5உடன் அறிமுகம் செய்யப்படலாம். இது உண்மையாகும் பட்சத்தில் குறிப்பிட்ட சிப்செட் உடன் அறிமுகமான முதல் போல்டபிள் ஸ்மார்ட்போன் என்கிற பெயர் - ஒப்போ பைண்ட் என்5 மாடலுக்கு கிடைக்கும்.
200எம்பி மெயின் கேமரா மற்றும் லாங் ரேன்ஜ் ஜூம் கேமராவுடன் வருவது - ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா (Oppo Find X9 Ultra) மாடல் ஆகும். இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்டால் இயக்கப்படும் ஒப்போவின் இமேஜிங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் (Imaging flagship smartphone) ஆக இருக்கும்
ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 200 மெகாபிக்சல் IMX09E ப்ரைமரி கேமரா மற்றும் மேம்படுத்தப்பட்ட லாங் ரேன்ஜ் ஜூம் திறன்களுடன், 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் வழங்கும் IMX09A பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ யூனிட் ஆகியவைகளை பேக் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் கேமரா செட்டப்பில் மீதமுள்ள கேமராக்கள் இரண்டு 50-மெகாபிக்சல் சென்சார் ஆக இருக்கலாம். முன்பக்கத்திலும் 50 மெகாபிக்சல் செல்பீ கேமராவை எதிர்பார்க்கலாம்.
7000mAh பேட்டரி உடன் வருவது - ஒப்போ பைண்ட் எக்ஸ்9எஸ் ( Oppo Find X9s) மாடல் ஆகும். இது டைமன்சிட்டி 9500 பிளஸ் (Dimensity 9500 Plus) சிப்செட் கொண்டு இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . மேலும் இது 6.3-இன்ச் டிஸ்பிளே, 7000mAh பேட்டரி, அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார் ஆகிய முக்கிய அம்சங்களையும் பெறலாம்.
எப்போது அறிமுகமாகும்? ஒப்போ நிறுவனம் ஆனது ஒப்போ பைண்ட் என்6, ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா மற்றும் ஒப்போ பைண்ட் எக்ஸ்9எஸ் ஆகிய 3 மாடல்களையம் ஒரே நேரத்தில் வெளியிட வாய்ப்பில்லை. இந்த ஸ்மார்ட்போன்கள் 2026 முதல் காலாண்டிற்குள் தனித்தனி வெளியீட்டு நிகழ்வுகள் மூலம் சீனாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமானஒப்போ பைண்ட் எக்ஸ்9 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விலை விவரங்கள்: ஸ்பேஸ் பிளாக் மற்றும் டைட்டானியம் கிரே கலர்களில் கிடைக்கும் ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ஸ்மார்ட்போனின் 12GB ரேம் + 256GB ஆப்ஷன் ரூ.74,999 க்கு வாங்க கிடைக்கிறது, அதே நேரத்தில் 16GB ரேம் + 512GB ஆப்ஷன் ரூ.84,999 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த மாடல் ஒப்போ ஆன்லைன் ஸ்டோர், பிளிப்கார்ட் மற்றும் மெயின் ரீடெயில் ஸ்டோர்களில் வாங்க கிடைக்கிறது.
மறுகையில் சில்க் ஒயிட் மற்றும் டைட்டானியம் சார்கோல் கலர்களில் கிடைக்கும் ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிங்கிள் 16GB ரேம் + 512GB ஆப்ஷன் ரூ.1.09,999 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த மாடல் ஒப்போ இந்தியா இ-ஸ்டோர், அமேசான், பிளிப்கார்ட் மற்றும் முக்கிய சில்லறை விற்பனை நிலையங்கள் வழியாக வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








