அட்டை காப்பி Apple.. Google பாதி, Samsung பாதி.. கலந்து அடித்து 7.8-இன்ச் புது iPhone.. 2026 இல் அறிமுகம்?
ஆப்பிள் (Apple) நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாக - போல்டபிள் ஐபோனை, அதாவது மடங்கக்கூடிய டிஸ்பிளேக்களை கொண்ட ஐபோன் மாடலை உருவாக்கி வருவதாக வதந்திகள் / லீக்ஸ் பரவி வருகிறது. ஒருவழியாக இது 2026 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படலாம் என்கிற தகவல் கிடைத்துள்ளது.
ஃப்ரண்ட் பேஜ் டெக் (FrontPageTech) என்கிற யூட்யூப் சேனலில் ஐபோன் போல்ட் என்று கூறப்படும் ஒரு ஒரு போல்டபிள் ஸ்மார்ட்போனின் சிஏடி ரெண்டர்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வீடியோவின்படி, ஐபோன் ஃபோல்ட் (iPhone Fold) ஆனது ஒரு பெரிய இன்னர் டிஸ்பிளே மற்றும் ஒரு சிறிய எக்ஸ்டர்னல் டிஸ்பிளேவை கொண்டிருக்கும்.

அதாவது இது கூகுள் பிக்சல் ஃபோல்ட் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பை போலவே இருக்கிறது. மேலும் ஆப்பிள் நிறுவனம் கூகுளை மட்டுமே "காப்பி அடித்தது போல்" தெரியவில்லை. டிப்ஸ்டர் ஐஸ் யுனிவர்ஸின் சமீபத்திய அறிக்கை - இந்த போல்டபிள் ஐபோனுக்கும், "கூறப்படும்" சாம்சங் கேலக்ஸி வைட் ஃபோல்டை போல இருக்கிறது என்றும் கூறுகிறது.
ஃப்ரண்ட் பேஜ் டெக் வீடியோவில் காட்சிப்படுத்தப்படும் ஐபோன் ஃபோல்ட் ஆனது 5.5 இன்ச் அளவிலான வெளிப்புற டிஸ்பிளே மற்றும் 7.8 இன்ச் உள்பக்க டிஸ்பிளேவை கொண்டுள்ளதாக தெரிகிறது. ஒப்பிடுகையில், சாம்சங் வைட் ஃபோல்டில் 5.35 இன்ச் இன்னர் டிஸ்பிளே மற்றும் 7.58 இன்ச் அவுட்டர் டிஸ்பிளே இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிளின் முதல் போல்டபிள் ஐபோன் ஆனது மடிக்கும்போது 9 மிமீ தடிமனையும் விரிக்கும்போது 4.5 மிமீ தடிமனையும் அளவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 மாடலின் 8.9 மிமீ (மடிக்கப்பட்ட) மற்றும் 4.2 மிமீ (மடிக்கப்பட்ட) தடிமனை போன்றது. இருப்பினும், இந்த புள்ளிவிவரங்கள் ஐபோன் ஃபோல் ஆனது பிக்சல் ஃபோல்ட்-ஐ விட கணிசமாக ஸ்லிம் ஆன மாடலாக ஆக்குகிறது.
கேமராக்களை பொறுத்தவரை ஐபோன் ஃபோல்டில் டூயல் ரியர் கேமராக்கள் மற்றும் டூயல் செல்பீ ஷூட்டர்கள் இருப்பதாக வதந்திகள் பரவியுள்ளது. இந்த மாடல் ஆப்பிளின் தனியுரிம சி2 மோடத்துடன் இணைக்கப்பட்ட 2என்எம் ஏ20 ப்ரோ சிப்செட் மூலம் இயக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயோமெட்ரிக் பாதுகாப்பிற்காக இது டச் ஐடியை கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, இது பவர் பட்டனில் ஒருங்கிணைக்கப்படலாம்.
கூகுள் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை கூகுள் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்டில் 8-இன்ச் LTPO OLED சூப்பர் ஆக்ச்சுவல் ஃப்ளெக்ஸ் இன்னர் டிஸ்பிளே (120Hz ரெஃப்ரெஷ் ரேட், 2700 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்) உள்ளது. வெளிப்புறத்தில், 6.3-இன்ச் OLED ஆக்ச்சுவல் டிஸ்பிளே (120 Hz ரெஃப்ரெஷ் ரேட், கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு, 2700 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்) உள்ளது.
இது கூகுளின் டென்சர் ஜி4 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 16ஜிபி ரேம் மற்றும் டைட்டன் எம்2 செக்யூரிட்டி கோப்ராசசர் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை, வெளிப்புறமாக, பிக்சல் 9 ப்ரோ ஃபோல்டில் 48 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா (எஃப்/1.7 அபெர்ச்சர்) உள்ளது.
கூடவே 10.5 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா (ஆட்டோஃபோகஸ் மற்றும் எஃப்/2.2 அபெர்ச்சர்) + 10.8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா (5x ஆப்டிகல் ஜூம், 20x சூப்பர் ரெஸ் ஜூம், மற்றும் எஃ ப்/3.1 அபெர்ச்சர்) என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. இதன் வைட் மற்றும் டெலிஃபோட்டோ கேமராக்கள் இரண்டுமே ஆப்டிகல் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷனை கொண்டுள்ளன.
கவர் டிஸ்பிளேவில் எஃப்/2.2 அபெர்ச்சர் கொண்ட 10 மெகாபிக்சல் கேமரா உள்ளது. அதே நேரத்தில் இன்னர் டிஸ்பிளேவில் எஃப்/2.2 அபெர்ச்சர் உடனான 10 மெகாபிக்சல் கேமரா உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை 4650எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது, இதை பிபிஎஸ் சார்ஜர் (45W) மற்றும் Qi வயர்லெஸ் சார்ஜர்களை பயன்படுத்தி சார்ஜ் செய்யலாம்.


Click it and Unblock the Notifications








