Home
Mobile

10-இன்ச் டிஸ்பிளே.. Galaxy S25 சீரீஸை தூக்கி சாப்பிடும் புது மாடல்.. Samsung-ன் முதல் Tri-Fold ஸ்மார்ட்போன்!

ஒட்டுமொத்த டெக் உலகமும் நாளை (ஜன.22) நடக்க உள்ள கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வின் மீது கவனம் செலுத்துவரும் நிலைப்பாட்டில்.. கேலக்ஸி எஸ்25 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை பற்றிய பல வகையான தகவல்கள் (குறிப்பாக எஸ்25 ஸ்லிம் மாடல் அறிமுகம் குறித்த, இந்திய விலை விவரங்கள் குறித்த தகவல்கள்) வெளிவந்த வண்ணம் உள்ளன.

இதற்கிடையில் கேலக்ஸி எஸ்25 சீரிஸில் உள்ள அத்தனை மாடல்களையும் தூக்கிசாப்பிடும், இன்னொரு புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. அது சாம்சங்கின் முதல் ட்ரை போல்ட் ஸ்மார்ட்போன் (Samsung First Tri fold smartphone) ஆகும். ஒருவழியாக சாம்சங் நிறுவனம் அதன் முதல் ட்ரை போல்ட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராக இருப்பது போல் தெரிகிறது.

10-இன்ச் டிஸ்பிளே.. Samsung-ன் முதல் Tri-Fold ஸ்மார்ட்போன்!

தென் கொரியாவில் வெளியான ஒரு புதிய அறிக்கையின்படி, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த ட்ரை போல்ட் ஸ்மார்ட்போன் ஆனது 2025 ஆம் ஆண்டு மூன்றாம் காலாண்டில் அறிமுகம் செய்யப்படலாம் என்கிறது. இந்த லான்ச் டைம்லைன், புதிய சாம்சங் போல்டபிள் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும் வழக்கமான வெளியீட்டு சுழற்சியுடன் சரியாக பொருந்துகிறது.

அதாவது கேலக்ஸி இஸட் போல்ட் 7 (Galaxy Z Fold 7) மற்றும் கேலக்ஸி இஸட் பிலிப் 7 (Galaxy Z Flip 7) ஆகிய ஸ்மார்ட்போன்கள் எப்போது அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறதோ, அப்போதே சாம்சங்கின் முதல் ட்ரை போல்ட் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பது போல் தெரிகிறது. இந்த அறிக்கை உண்மையாக இருக்கும் பட்சத்தில், ஹூவாய் நிறுவனத்தின் மேட் எக்ஸ்டி (Huawei Mate XT) உடன் போட்டியிட சாம்சங் ரெடியாக உள்ளது என்று அர்த்தம்!

வெளியான அறிக்கையின்படி, சாம்சங்கின் ட்ரை-போல்ட் ஸ்மார்ட்போன் ஆனது 9.9-இன்ச் முதல் 10-இன்ச் வரையிலான டிஸ்பிளேவை (விரிந்த நிலையில்) பேக் செய்யலாம். அதாவது இது உங்கள் பாக்கெட்டில் பொருந்தக்கூடிய ஒரு டேப்லெட் ஆக இருக்கும். இதில் இன்னும் சிறப்பான விஷயம் என்னவென்றால், இந்த ஸ்மார்ட்போன் மடிந்திருக்கும் போது, டிஸ்பிளேவை பாதுகாக்கும் தனித்துவமான போல்ட் மெக்கானிஸத்தை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது - இது ஹூவாய் மேட் எக்ஸ்டி ஸ்மார்ட்போனில் இல்லாத ஒன்றாக இருக்கும்!

இருப்பினும், சாம்சங்கின் ட்ரை-ஃபோல்ட் ஸ்மார்ட்போனின் எடை மற்றும் இதர விஷயங்கள் குறித்த விவரங்கள் வெளியாகும் போது தான், இது நடைமுறை வாழ்க்கைக்கு வேலைக்கு ஆகுமா அல்லது வெறுமனே ஒரு காட்சி பொருளாக மட்டுமே வைத்து இருக்க முடியுமா என்கிற உண்மை வெளிப்படும்.

ஏனென்றால் தென் கொரியாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி இசட் ஃபோல்ட் ஸ்பெஷல் எடிஷனுடன், போல்டபிள் ஸ்மார்ட்போன்களை ஓரளவுக்கு எவ்வாறு மெலிதாக்குவது என்பதை கண்டுபிடிக்க சாம்சங்கிற்கு பல தலைமுறைகள் தேவைப்பட்டன. ஆக முதல் தலைமுறை பட்ரை போல்ட் ஸ்மார்ட்போனின் வழியாக கற்றுக்கொள்ள சாம்சங் நிறுவனத்திற்கு நிறைய விஷயங்கள் இருக்கும்.

போதாக்குறைக்கு வரவிருக்கும் கேலக்ஸி போல்டபிள் ஸ்மார்ட்போன்களுக்கு எஸ்ஐ/சி பேட்டரி தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது குறித்து எந்த அப்டேட்டும் இல்லை. எனவே பேட்டரி திறனை தியாகம் செய்யாமல் ஹூவாய் நிறுவனத்தின் அளவிற்கு ஸ்லிம் ஆன டிசைனை கொண்டுவருவதென்பது சாம்சங் நிறுவனத்திற்கு கடினமான காரியமாக இருக்கும்.

2025 ஆம் ஆண்டு மூன்றாம் காலாண்டில் சாம்சங் நிறுவனத்திடம் இருந்து மொத்தம் 4 போல்டபிள் போன்களை எதிர்பார்க்கலாம். சாம்சங்கின் முதல் ட்ரை போல்ட் ஸ்மார்ட்போனுடன் சேர்த்து கேலக்ஸி இஸட் பிலிப் எப்இ (Galaxy Z Flip FE) என்கிற பட்ஜெட் விலை மண்டலம் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எல்லாம் சரியாக நடந்தால் - 2025 ஆம் ஆண்டில் தொடக்கத்தில் அறிமுகமாகும் எஸ்25 சீரீஸை விட பின்னர் அறிமுகமாகும் சாம்சங்கின் புதிய போல்டபிள் போன்கள் தான் - 2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய பேசுபொருளாக இருக்கும்!

More from GizBot

Best Mobiles in India

English summary
First Ever Tri Fold Smartphone From Samsung Launch in Q3 2025 with Galaxy Z Fold 7 Galaxy Z Flip 7
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X