Home
Mobile

பழைய ரேடியோ பெட்டி டிசைனில்.. CMF-ன் முதல் ஸ்மார்ட்போன்.. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?

நத்திங் நிறுவனத்தின் துணை நிறுவனமான சிஎம்எஃப் அதன் முதல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயாராகவுள்ளது. நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனை (நத்திங் போன் 1) போலவே இது சிஎம்எஃப் போன் 1 என்று அழைக்கப்படும். கடந்த வாரம் முதல் டீஸ் செய்யப்பட்டு வரும் சிஎம்எஃப் போன் 1-ல் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும் என்பது மெல்ல மெல்ல வெளிப்படுத்தப்பட்டு வருகிறது. அதனொரு பகுதியாக சிஎம்எஃப் போன் 1 ஸ்மார்ட்போனில் ஒரு தனித்துவமான சுழலும் டயல் இடம்பெறும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்த டீஸர் வீடியோவில் சிஎம்எஃப் போன் 1 உடன் புதிய இயர்பட்ஸ் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களின் வருகையும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. நத்திங்கின் சப்-பிராண்ட் தனது எக்ஸ் பக்கம் வழியாக 15 வினாடிகள் நீளும் டீஸர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஸ்மார்ட் டயல் என்பதை குறிக்கும் 'ரீஇன்வென்டிங் தி வீல்' என்கிற டைட்டிலை காணமுடிகிறது.

பழைய ரேடியோ பெட்டி டிசைனில்.. CMF-ன் முதல் ஸ்மார்ட்போன்!

அந்த வீடியோவில் 3 டயல்கள் மெதுவாக சுழல்வதை காண முடிகிறது. முதல் டயல் சிஎம்எஃப் போன் 1-க்கு சொந்தமானது. மீதமுள்ள இரண்டு டயல்கள் சிஎம்எஃப் பட்ஸ் 2 மற்றும் சிஎம்எஃப் வாட்ச் ப்ரோ 2 மாடல்களாக இருக்கலாம். சிஎம்எஃப் போன் 1-க்கான ஸ்மார்ட் டயல் மீடியா பிளேபேக் மற்றும் சவுண்டை கண்ட்ரோல் செய்ய பயன்படுத்தப்படலாம் (ரேடியோவில் உள்ள வால்யூம்/சவுண்ட் கண்ட்ரோலர் போல பயன்படுத்தப்படலாம்) என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே டீஸர் வீடியோவில் சிஎம்எஃப் போன் 1-ல் மேட் பிளாக் ரியர் பேனலையும் காண முடிகிறது. இது ஏற்கனவே ஆரஞ்சு கலரில் வரும் என்று டீஸ் செய்யப்பட்டுள்ளது. ஆக இந்த ஸ்மார்ட்போன் பல வகையான கலர் ஆப்ஷன்களில் வரும் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது

எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது முந்தைய நத்திங் போன்களின் முக்கிய அம்சமான க்ளிஃப் லைட்டிங்கை (Glyph Lighting) இழக்கும். அதாவது சிஎம்எஃப் சீரிஸின் முதல் ஸ்மார்ட்போன் நத்திங் போன்களை விட மிகவும் வேறுபட்டதாகவும் மற்றும் பட்ஜெட்-விலையில் வருவதால், மிகவும் சிம்பிள் ஆகவும் இருக்கும்.

டிஸ்பிளேவை பொறுத்தவரை, சிஎம்எஃப் போன் 1 ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான பெரிய 6.67-இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிப்செட்டை பொறுத்தவரை, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 சிப்செட் (Mediatek Dimensity 7200 SoC) மூலம் இயக்கப்படுகிறது. அதாவது சிஎம்எஃப் போன் 1 ஆனது 5ஜி நெட்வொர்க்கிற்கான ஆதரவுடன் வரும்.

கேமராக்களை பொறுத்தவரை, முந்தைய நத்திங் ஸ்மார்ட்போன்களை போலவே சிஎம்எஃப் போன் 1-ன் பேக் பேனலில் 50எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்யப்படலாம். பேட்டரியை பொறுத்தவரை, இது 33W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியையும் கொண்டிருக்லாம். கடைசியாக இது லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 2.5 (Nothing OS 2.5) உடன் அனுப்பப்படலாம்.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான யோகேஷ் பிராரின் கூற்றுப்படி சிஎம்எஃப் போன் 1-ன் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் ரீடெயில் பாக்ஸ் எம்ஆர்பி ஆனது ரூ.19,999 ஆக இருக்கும். இருப்பினும், ஒரு ஸ்மார்ட்போன் அதன் எம்ஆர்பி விலைக்கே விற்பனைக்கு வராது என்பதால், ரீடெயில் பாக்ஸ்-ல் உள்ள விலையை விட சற்று குறைவான விலைக்கு தான் அறிமுகமாகும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

ஆக இந்திய சந்தையில் சிஎம்எஃப் போன் 1 ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.18,000 க்கு அறிமுகம் செய்யபட்டு, சில சிறப்பு தள்ளுபடிகளை பெற்று ரூ.17,000 க்கு வாங்க கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. முன்னதாக சிஎம்எஃப் போன் 1 ரூ.12,000-ஐ சுற்றிய விலைக்கு அறிமுகமாகும் என்று கூறப்பட்டது. தற்போது இது ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் தான் அறிமுகமாகும் என்பது போல் தெரிகிறது.

Best Mobiles in India

English summary
First CMF Smartphone CMF Phone 1 gets Rotating Dial Could Be Media Playback Volume Controller
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X