Home
Mobile

ரூ.5000 ஆபரின் கீழ் விற்பனை.. Infinix Zero Flip அறிமுகம்.. மொத்த Fold Phone-களையும் காலி செய்யும் விலை!

இன்பினிக்ஸ் நிறுவனத்தின் முதல் கிளாம்ஷெல் ஸ்டைல் ஃபோல்டபிள் போன் (Clamshell-style foldable phone) ஆன இன்பினிக்ஸ் ஸீரோ ஃபிளிப் (Infinix Zero Flip) இன்று இந்தியாவில் அறிமுகமானது. சிங்கிள் 8 ஜிபி ரேம் + 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ்.. ப்ளாசம் க்ளோ மற்றும் ராக் பிளாக் என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும் இன்பினிக்ஸ் ஸீரோ ஃபிளிப் போனின் விலை நிர்ணயம் என்ன? இதன் மீது அறிவிக்கப்பட்டுள்ள அறிமுக சலுகை என்ன? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:

இன்பினிக்ஸ் ஸீரோ ஃபிளிப் போனின் விலை, விற்பனை மற்றும் சலுகை விவரங்கள்: இந்தியாவில் இன்பினிக்ஸ் ஸீரோ ஃபிளிப் போனின் சிங்கிள் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.49,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இது வருகிற அக்டோபர் 24 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும்.

ரூ.5000 ஆபரின் கீழ் விற்பனை.. Infinix Zero Flip இந்தியாவில் அறிமுகம்!

இது பிரபல இ-காமர்ஸ் வலைத்தளம் ஆன பிளிப்கார்ட் (Flipkart) வழியாக வாங்க கிடைக்கும். இன்பினிக்ஸ் ஸீரோ ஃபிளிப்பை வாங்கும் வாடிக்கையாளர்கள், எஸ்பிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்டை (SBI credit and debit) பயன்படுத்தினால் ரூ .5,000 தள்ளுபடி கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்பினிக்ஸ் ஜீரோ ஃபிளிப் ஏற்கனவே மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டதால், இந்த ஸ்மார்ட்போனின் மற்ற முக்கிய அம்சங்களிலும் எந்த ஒளிவு மறைவும் இல்லை. டிஸ்பிளேவை பொறுத்தவரை இன்பினிக்ஸ் ஜீரோ ஃபிளிப் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் 1080 x 2640 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் உடனான 6.9 இன்ச் LTPO AMOLED இன்னர் டிஸ்பிளேவை (Inner Display) கொண்டிருக்கும். இன்பினிக்ஸ் ஸீரோ ஃபிளிப் போனின் விரிவான அம்சங்கள்: டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவுடன் வரும் இன்பினிக்ஸ் ஸீரோ ஃபிளிப் போன் ஆனது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்படையிலான இன்பினிக்ஸ் நிறுவனத்தின் எக்ஸ்ஓஎஸ் 14.5 (XOS 14.5) ஸ்கின் மூலம் இயக்கப்படுகிறது

டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது யுடிஜி லேட்டர், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 360 ஹெர்ட்ஸ் டக் சாம்ப்ளிங் ரேட் உடனான 6.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்டிபிஓ அமோஎல்இடி (FHD+ LTPO AMOLED) இன்னர் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. வெளிப்புறத்தில், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷன் உடனான 3.64-இன்ச் அமோஎல்இடி கவர் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை, இது மீடியாடெக் டைமன்சிட்டி 8200 (MediaTek Dimensity 8200) சிப்செட்டுடன் வருகிறது. இது 8ஜிபி LPDDR4X ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி இது 512ஜிபி UFS 3.1 ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ் கார்ட்டை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனின் மெமரியை விரிவாக்க முடியாது.

கேமராக்களை பொறுத்தவரை, அவுட்டர் ஸ்க்ரீனில் டூயல் ரியர் கேமரா அமைப்பு உள்ளது, இதில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்) மற்றும் 50 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா (114 டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ) உள்ளது. இது 4K/30fps வேகத்தில் வீடியோ பதிவை ஆதரிக்கிறது. உட்புறத்தில், 4K/60fps இல் வீடியோவை பதிவை ஆதரிக்கும் 50-மெகாபிக்சல் கேமரா ஒன்றும் உள்ளது.

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்தவரை இன்பினிக்ஸ் ஸீரோ ஃபிளிப் போன் ஆனது 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், என்எப்சி (NFC) மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை ஆதரிக்கிறது. இதில் ஜிபிஎல் ஆல் ட்யூன் செய்யப்பட்ட டூயல் ஸ்பீக்கர்களும் உள்ளன.
மேலும் பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக பவர் பட்டனில் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரும் உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை இன்பினிக்ஸ் ஸீரோ ஃபிளிப் போன் ஆனது 4,720mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது 70W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவையும் கொண்டுள்ளது. அளவீடுகளை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போனை விரிக்கும் போது 170.75x73.4x16.04மிமீ அளவும், மடிக்கும்போது 87.8x73.4x7.64மிமீ அளவும் இருக்கும்; எடையை பொறுத்தவரை இது 195 கிராம் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
First Clamshell style foldable phone Infinix Zero Flip Launched in India Price Features Sale Oct 24
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X